2-ஆறுவது சினம்
கலாவும், நிலாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள்.
பள்ளி விடுமுறை. இருவரும் நோட்டில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினார்கள். கலா மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் வண்ணம் தீட்டினாள்.
ஓவியம் சரியாக வரையத் தெரியாத நிலா பார்த்தவள் தன்னிடம் இருந்த பென்சிலால் வண்ணம் தீட்டிய ஓவியத்தில் கோடு கோடாகப் போட்டு கிறுக்கி விட்டாள்.
அதை சற்றும் எதிர்பார்க்காத கலாவுக்கு கோபம் கோபமாக வந்தது.
இருந்தாலும் கோபத்தை அடக்கிக் கொண்டாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. அதைக் கண்ட நிலாவுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது.
தோழி வரைந்ததை பாராட்டாமல் அழ வைத்து விட்டோமே! என்று
கோபத்தை அடக்குவதால் பிறர் திருந்த வாய்ப்பு வரும் என்பதை தெரிந்த ஔவையார் “ஆறுவது சினம்” என்று சொல்லி இருக்கிறார்.

