மார்கழி மாதம் ஒன்பதாம் நாள்
பிரம்மா
சந்தனம் உரசஉரச மணம் வீசும்
சமமாகப் படைத்து சந்தானம் தருபவனே கந்தம் அமைத்து மண்டபம் கட்டி
காலம் கடந்தும் பயன்பெறச் செய்து பந்தம் வாழ
வாழ்த்துவாய் பிரம்மா பட்சணம் படைக்கிறோம் பாசமுடன் உண்பாய் மந்திரம் ஓதும் உபதேசம் சொல்வாய்
மனம் மகிழ்ந்து கற்போம் அருள்வாய்
விஷ்ணு
வைகுண்ட வாசல் திறக்கும் மார்கழி
வலம் வந்தால் மோட்சம் கிட்டும்
தைமுதல் நாள்வரை தொடர்ந்து வந்தால்
தடைகள் அகலும் தைரியம் பிறக்கும் வையத்தில் பிறந்த மனிதர் எல்லாம்
வாழும் முறை வணங்கிப் பணிவது கையளவு மனதில் இடம் கொடுத்தால்
கடமை செய்ய அருள்வான் கண்ணன்
சிவன்
மும்மூர்த்தியாய் இருப்பவனே முக்கண்ணா முழுநிலவே
முழுச்சுடரே இறையே ஈசனே இமயமே
இம்மியும் வேறு நினையோம் ஈசனே
இதயத்தில் சுடராய் இருப்பவனே சிவனே இம்மைப் பிறப்பை அறிய வைப்பாய்
இயங்கும் இயக்கமே இன்ப ஒலியே
ஓம் என்ற மந்திரத்தை சொன்னால்
ஒடுங்கும் மனம் உன்னையே நினைக்கும்
