பு.சா.வெற்றிச்செல்வி – கோபி
வீழ்வேனென்று நினைத்தாயோ
அவமானங்கள் கேள்விக்குண்டமானது,
வெறுப்பு மூளும் வேள்வித்தீயானது,
அலட்சியங்கள் ஆகுருகியானது,
உதா€ீனங்கள் உக்கிரமானது,
சுடுசொற்கள் அர்ச்சனைப்பூக்களானது,
நையாண்டிகள் நைவேத்துயமானது,
மூடங்கள் மூலிகைப்பொருளானது,
கோபங்கள் தூபங்களானது,
மீள்க, மீள்க எனும் மந்இரம் கூறி,
பொறுமையெனும் நெய் வார்த்தேன்,
மனகில் மூண்டது ஒரு யாகம்,
வெல்ல வேண்டுமென்ற தாகம்,
செயலில் கூடியது வேகம்,
போராடச் சொன்னது விவேகம்,
வாழ்க்கையெனும் போர்க்களத்தில் நான்,
வீழ்வேனென்று நினைத்தாயோ?

