ஜெசிக்குமார். பா
யவனமெங்கும் உலவிடுதே
மௌனத்தின் மொழி
கவனமற்ற வார்த்தைகளின்
கண்ணீர்த் துளி
கண்முன்னே உருண்டோடும்
கைவராக் கனவுகள்
எண்ணங்கள் சேராது
சருகாகும் நினைவுகள்
சிறகுகள் செழித்திருந்தும்
சித்தாந்த விலங்குகள்
பிறரது நலன்வேண்டி
புதைத்திட்ட ஆசைகள்
செரிக்காத உணவெனவே
உறுத்தும் உள்ளிருந்து
உறங்காக் குழந்தையென
உயிரறுக்கும் சொல்லிழந்து
புன்னகையில் புதைத்து
கண்ணடித்துக் கடந்து
மென்சோசச் சிரிப்பில்
அனைத்தும் உதிர்த்து
எண்ணற்ற ஆசைகள்
எங்ஙகெங்கும் உண்டு
தன்னலம் தவிர்த்த
எண்ணங்கள் கொண்டு

