ஜெ. சரளா மஞ்சு
இன்னல் பல கொடுத்தாய்!
இடரிவிட நினைத்தாய்!
இதயம் உடைத்தாய்!
இகழ்ந்தாய் அதில் மகிழ்ந்தாய்!
இதுவும் போதாதென- கூட
இருந்தே குழியையும் பறித்தாய்!
இன்ப குடியையும் கெடுத்தாய்!
இருசெவி இறுக்கி மூடி நகர்ந்தேன்..
இடையூறு பல தாண்டி நடந்தேன்..
இதுவும் கடந்து போகுமென உணர்ந்தேன்..
விழுந்தேன் அழுதேன் தொழுதேன் எழுந்தேன்..
விடாமுயற்சியோடு தொடர்ந்தேன்..
புதைந்தேன் எனினும் பொறுத்தேன்..
முளைத்தேன்.. துளிர்த்து வளர்ந்தேன்..
முயற்சித்தேன் மீண்டும் மீண்டும்
முயற்சித் தேன் பாய உழைத்தேன்..
முடிவில் வெற்றித்தேன் ருசித்தேன்..
முயலாமையால் தோற்ற பலர்போலே நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

