அகணி S. கண்ணன்
உறவுகளுடன் இணைந்து
இன்பமாய் வாழ்ந்தேன்
வாழும் வாழ்க்கையில்
சொர்க்கத்தை கண்டேன்
மனைவியின் உறவென்று
சொல்லி வந்தாய்
மாசின் மொத்த
உருவமாய் இருந்தாய்
தவறை மட்டுமே
சரியாய் செய்தாய்
உனது தாயை
துணையாய் கொண்டாய்
பாதகச் செயல்களை
விடமால் தொடர்ந்தாய்
பகையை நீயும்
பெருக்கி கொண்டாய்
பாதிப்பு பெற்றவர்
சினமும் கொண்டனர்
என்னைப் பற்றி
தவறாய் அறிந்தனர்
பேசாமல் ஊமையாய்
மாறி விட்டாய்
தவறாக வளர்ப்பென
காட்டி விட்டாய்
செய்வினை பாதிப்பில்
சிக்க வைத்தாய்
காரணம் நீயாக
இருந்து விட்டாய்
செய்வினையில் சிக்கி
வீழ்வேனென்று நினைத்தாயோ
வணங்கும் தெய்வங்கள்
துணைநிற்கும் மறந்தாயோ
பகைவர்கள் சுகம்காண
வீழ்ந்தேன் நகைத்தாயோ
நண்பர்கள் நலம்காண
எழுந்தேன் துடித்தாயோ
பாராட்டும் பலப்பெற
கண்டுள்ளம் பதைத்தாயோ
புகழுடன் வளம்வர
அழுது தீர்த்தாயோ
உன்வாழ்வு முழுவதும்
முடிந்ததை அறிந்தாயோ
செய்தது தவறென்று
ஒருபோதும் உணர்ந்தாயோ
இறுதியில் தர்மம்
வென்றதைப் பார்த்தாயோ
அழுதழுது புரண்டாலும்
அழுக்குள்ளம் வெளுக்காதே

