கூப்பிட்ட குரலுக்கு ஓடி -வருவான் காப்பிட்டு கந்தன் காத்தருள்வான் பூபோட்டு உன்னை வணங்கி- வந்தால் தாயாட்டம் தாங்கி தோள்கொடுப்பான்
வாடி நிற்கும் பக்தர்க்கு- முருகன் கோடி நலம் தரும்பாலன் நாடி வரும் பக்தருக்கு- முருகன் தேடி வந்து அருள்வான்.
மனம் விரும்பி காடு- சென்றாய் வனம் சென்று வள்ளிகண்டாய் தனம் வாங்கி குறிசொன்னாள்- வள்ளி தினம் நினைத்து மனம் புரிந்தாள்.
பால் வடியும் முகம் -முருகா வேல் வெற்றி கொடுக்கும் மால் மகளை மணந்தாய் -முருகா தோல் மயிலில் அமர்ந்தாய்
கார் மேகம் மழை- கொடுக்கும் மார்கழி மாதம் பனிபெய்யும் பார்த்த சாரதி மருமகன்-நீ பார் முழுவதும் புகழிருக்கும்.
மலர் தூவி மனம்- மகிழும் வலம் வந்து வணங்கிநிற்கும் நலம் யாவும் உன்- அருளால் குலம் காக்கும் குடிக்காக்கும்.
உமையவள் வேலால் வெற்றி -வரும் படைவீடு காத்து நிற்கும் தடைகள் எல்லாம் தகர்த்து -செல்லும் கொடை உள்ளம் காத்து நிற்கும்.
2-இலிங்கேற்ப மூர்த்திபிரம்மாவிற்கு 2000 சதுர்யுகம் ஒரு நாள் ஆகும். அவர் நாள் கணக்குப் படி துயிலச் சென்றார். புயல் வெள்ளம் தோன்றி கடல் பெருக்கல் உலகில் உள்ள…
