மார்கழி மாதம் 27ஆம் நாள்
பிரம்மா
வேதம் நான்கு கற்றவனே பிரம்மா
வேண்டும் வரம் யாவும் தருவாய்
பதப் படுத்தும் பக்குவம் தருவாய்
பரமனே உன் பாதம் தொழுகிறோம்
புதர் மண்டாத மனதை தந்து
புதுமை செய்ய புத்துணர்வு தருவாய் கூதல் நேர காலையில் வருகிறோம்
பிரம்மா கல்வி கற்றுத் தருவாய்
விஷ்ணு
குறும்பு பொறுத்து அமுது ஊட்டி
குழந்தைக் கண்ணனை கொஞ்சி மகிழுந்து
அறும்பு காத்து அசுரரை வென்ற
அற்புத கண்ணனை வளர்த்த யசோதா மறுமை இல்லா பேரு பெற்றாய்
மனம் குளிர நெகிழ்வு பெற்றாய்
துறுதல் பாக்கியம் பெற்ற யசோதா
துன்பம் பறந்தது எங்களைக் காப்பதால்
சிவன்
இமைய மலை வாசனே சிவம்
இதய ஒளி தீபம் சிவம் உமையவள் சக்தி தருவாள் சிவம்
உன்னை சரண் புகுந்தோம் சிவம்
சுமை தாங்கும் கல்லே சிவம்
சுடர் தீபம் நீயே சிவம் இமை போல காப்பாய் சிவம்
இருள் போக்கி அருமார்கழிள்வாய் சிவமே.
