பு.சா.வெற்றிச்செல்வி – கோபி
மெளனம் ஓர் மகத்தான ஆயுதம்,
மடமையை கேடயம்,
மனவலிமை கூட்டும்
மதுயூகிகளின்
சமரசத்தின் பிறப்பிடம்,
சாத்வீகத்தின் இருப்பிடம்,
சப்தமில்லா சங்கேதம்,
சலனமில்லா சங்கல்பம்,
நிசப்தத்தின் பிரமாணம்,
நிர்மலமனகதுன் பிரயோகம்,
அமையின் பிரவாகம்,
ஆரவாரமில்லா ஆரோகணம்,
எண்ணங்களின் சுரங்கம்,
சந்தனைகளின் அரங்கம்,
உண்மையின் விஸ்வரூபம்,
உணர்ச்சிகளின் உலைக்கூடம்,
பெண்மையின் மெளனம் அழகு,
ஆண்மையின் மெளனம் அறிவு.

