இரா.பரிமளா
எந்த தீவினையும்
நிகழ்ந்து விடவே இல்லையே
நம்மிடையே
எந்த பொல்லாப்பும் கூட நடந்ததாக நினைவு இல்லை
இருப்பினும் மன்னிப்பு மட்டுமல்ல ஏன் இப்படி இருக்கிறாய் என இறைஞ்சி கூட கேட்டாயிற்றே...
அள்ளி தின்னும் காகத்தை போல அல்லாமல்
புறா கொத்தும் ஒவ்வொரு தானியம் போலவே
சொற்களை
பரிமாறிகிறேன்
உன் எல்லா மெளனத்திலும் அர்த்தம் எனக்கு
வலியே மிஞ்சுகிறது
இதனாலோ என்னவோ என் மூச்சுக்காற்று சூறாவளியாய் சுழற்சி யாகம் பண்ணுகிறது
கண்கள் கூட நீர்வேள்வி நிகழ்த்துகிறது
இருப்பினும் அடிக்கடி நீ காணாமல் போகிறாய் நூல் அறுந்த பட்டம் போல நான்....
நான் தான் செய்வதறியாது நாற்திசையும் திகைத்து நிற்கிறேன்

