மதிப்புறு முனைவர். சு. நடராஜன்
நண்பர் போல் நடித்து நட்பு
பாராட்டி புறமுதுகில் குத்தி விட்டாலும்
அன்பு என்ற ஆயுதத்தை முன்வைத்து
இருக்கும் வரை பிடுங்கிக் கொண்டு
கடனிலே தள்ளிவிட்டு தப்பிக்க நினைத்து
நடுத்தெருவில் விட்டுவிடும் எண்ணம் கொண்டாலும்
பாசத்திற்கு அடிமையாகி பயனின்றி ஏமாற்றி
பாதியிலே பரிதவிக்க விட்டுச் சென்றாலும்
படித்த படிப்புக்கு வேலை இல்லை
பாமரன் என்றாலும் கனவுத் தொல்லை
வறுமை பஞ்சம் பட்டினி என்று
வாழ்க்கை முழுவதும் போராட்டம் ஆனதால்
ஏழை என்று ஏளனம் செய்து
விலகிச் சென்ற உறவு வட்டங்களே
எத்தனை துன்பம் வந்த போதும்
வீழ்வேன் என்று மட்டும் நினையாதே
தோல்வி என்பது சாதித்துக் காட்டிட
உயிர்த்து எழுவேன் பீனிக்ஸ் பறவையாய்
தொட்டு விடும் தூரத்தில் வானம்
முயற்சிகள் ஒருபோதும் துவண்டு விடாது
விடியும் பொழுது நமக்கானது என்றே
நெஞ்சினை நிமிர்த்தி உரக்கச் சொல்வேன்
அதற்கான காலம் வரும் வரை

