ரங்கநாயகி கண்ணன்
புரட்டிப் போடும் சுகதுக்கங்கள்
எட்டி உதைக்கும்
சொந்த பந்தங்கள்
ஓட்டும் நட்பு வட்டங்கள்
வாட்டும் மனகலக்கங்கள்
அசைத்து பார்க்க
முயன்றது என்னை
காலனை மிரட்டிய
பாரதி வாழ்ந்த
நாட்டில் வாழும்
நமக்கு அச்சமா
அச்சமதை துச்சமாக்கி
திரட்டினேன் நம்பிக்கையை
விரட்டினேன் அச்சத்தை
கலங்க வைக்கும்
புயலையும்
மிரட்டும் பூகம்பத்தையும்
சுழன்று அடிக்கும்
சுனாமியும் இத்தகு
இயற்கை சீற்றங்கள்
முடக்கி விடுமா என்னை
அனைத்தையும் கடந்து
விடிவெள்ளியாய்
மீண்டும் எழுவேன்
இரவு பகல் போல்
எனது துன்பங்கள்
எனக்கு மாற்றத்தைக்
கொடுத்தாலும்
வீழ்ந்து விடாமல்
இருப்பேன் என்றும்
கொரானா அரக்கன்
ஆட்டம் போட்டாலும்
கலங்கிடமாட்டோம்
கொட்டம் அடக்குவோம்
நாம்காணா சோதனையா
வேதனையா
இதுவும் கடந்து
போகும் நம்பு
காலமே சுழன்றிடும்
மேலது கீழாய்
உயர்ந்த லட்சியம்
தளரா முயற்சி
உன்னத உழைப்பு
உயரத்திடும் என்னை
வீழ்வேனெனறு மட்டும்
நினைக்காதீர்

