மு. அபிராமி சூர்யா
பற்றுழியில் பாதம் பதித்து
கரைகளில் காதல் பகிர்ந்து
பரிமானம் கண்டு பக்குவம் அடைந்து!
நன்மை உணர்ந்து நாகரிகம் செழித்து
அறிவியல் அறிந்து ஒழுக்கத்தில் சிறந்து
சங்கம் வைத்த சிறப்பு பெற்று
பாண்டியன் செங்கோல் உயர்த்து நின்றிட
நீர் இன்றி மீன்கள் வாழா என எண்ணி
ஆழிக்குள் எங்களை ஆட்கொண்டீர்களோ???
இயற்கையே கடவுள் என போற்றி வாழ்ந்திட
எங்களுள் உங்களை வைக்க அன்பு பெருகுமே!
உங்களுள் எங்களை புதைத்து
அழிவை தருவது நியாயமோ?
கரைகள் தாண்டி வைகை தேடி
மக்களும் வந்திட மதுரை உயிர்த்தெழ
ஒன்றே குலமாய் ஒற்றுமை கண்டு
இரு திணையிலும் ஒழுக்கம் பூண்டு
இரண்டு அடியில் அறத்தை கொண்டு
முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்திட
மூவேந்தர் காத்திட பரணி போற்றிட
நாலடியில் நீதி வகுத்து
நற்கலைகளை போற்றி வளர்த்திட
ஐந்நிலத்திலும் அன்பை பெருக்கி
ஐங்காப்பியங்களும் அணியாய் புனைந்து
அறுசுவை உணவினை
அனைவர்க்கும் பகிர்ந்து உண்டு
கடையெழு வள்ளல்கள் கருணையினை காட்டிட
எட்டுத்திற்கும் வாகை சூடி
எல்லாரும் ஒன்றாய் கூடி - சிறப்பு பெற்ற
சங்க காலம் சாய்ந்து போகிட
இருளும் காலம் வந்தது ஏனோ?
வைகை கரையில வைத்தோம் கையை!
மண்ணுகடியில் மறைந்த வரலாற்றை
யாரால் மறுக்க முடியும்?
கீழடி எங்கள் தாய் மடி
அதன் எச்சம் சொல்லும்
தமிழ்குடியின் உச்சம்
அச்சம் அறியா மக்களின்
எச்சங்களை ஆராயந்தால்
அகிலம் புருவம் உயர்த்தும்
பழமை பெருமை வெளிப்பட்டு
மெய் பரவிடும் என அஞ்சி
அகழாராய்ச்சியை நிறுத்தி
ஆய்வாளர் அமர்நாத் அவர்களை மாற்றி
அறத்தை சிதைக்கும் ஆரிய குடிகளே….
நன்கு அறிந்து கொள்ளுங்கள்
யாவரும் கேளீராய் வாழ்ந்தவர்கள் எம் மக்கள்
தன் வரலாற்று உரிமை பேண
யாசகம் கேட்டு நின்பார்கள் என நினைத்தாரோ??
கடலையும் காற்று மண்டலதையும் கடந்து
கண்டங்கள் பல பரவி
சன்றோர்களால் போற்ற பெற்று
ஆங்கிலேயரும் அருமை அறிந்து
கவி மாலை சூட்டி
மொழி பெயர்த்து பரப்பிய எம்
அன்னையின் அருமையை நாங்கள்
அறிந்து போற்றுவோமே!!!
மலை தொடர் தாண்டி மண்ணை கவர
வளத்தை அடைய, மொழியை திணிக்க
மற்ற சாம்ராஜ்யம் முயற்சித்தும்
வீரத்தால் முறியடித்து
முவேந்தர்கள்கீழ் முன்னேற்றம் கண்டதை
மூடி வைத்திட முடியுமோ??
காவேரி கரையில் வேங்கை மக்கள்
ஒற்றை கல்லில் கோபுரம் வைத்த
பெரிய கோவில் பெருமை சேர்த்து
கலைகள் வளர்த்து கல்லனை வடித்து
ஆழியை எரியாய் - ஆமை கண்டு பயணிக்க
அயல் நாட்டு வணிகத்தில் செழுமை கண்டோம்
மலையில் வாழும் குடிகளும்
மருத்தவத்தில் மன்னராய் – வில் ஏந்திய
சேர மக்களும் பெருமை சேர்த்தனரே!!
அன்னை தமிழினை
அழிக்கும் நோக்கில்
இயற்கையும் இகல் கொண்டவர்களும்
இன்னமும் முயற்சிக்க- யான்
இறவா நிலை கொண்ட இறை மொழியே!
இடர் எத்தணை கண்டாலும்
இன்முகத்தோடு சொல்லுவேன்
இமயமாய் எம்மக்கள் காத்திட
இளமை மாறா சதாசிவமும் ஆனவள் நான்
வஞ்சகம் எத்துணை கண்டாலும்
வீழ்வேன் என நினைத்தாயோ??

