கவிஞரின் பெயர்: கலை ரத்னா முனைவர் த.பச்சையம்மா பா
சிதறி அழும் வர்த்தைகளை விட மெளனம் சிறத்தது
மெளனம் என் சப்தகளை அசைத்து பார்கிறது
அவளின் விழிகள் தொடுக்கும் போருக்கு
இதழ்கள் எடூக்கும் ஓய்வு தான் மெளனம்
மொழிகள் அர்த்தம் அற்று போய் விடுகிறது
மெளனம் பொருள் சுமந்து அழகாகிறது
நீர் நிரப்பிய விழிகளுடன் வார்த்தைகள்
இல்லாததால் மெளனிக்கின்றேன் என்
கண்ணீராவது மெளனத்தின் மொழி ஆகிறது
நண்பர்கள் பிரியும் போது வலிக்கவில்லை
ஆனால் கூடேவ இருக்கும் உறவுகள் பிரியும்
போது மற்றும் நடந்து கொள்ளும் விதம்
வலிக்கிறது
முகம் சுழிக்கும் வார்தைகளும் முள்ளயாய்
குத்தும் கோபகளும் முரண்பட்டூ நிற்கும் போது
மெளனம் ஒரு அழகிய மொழி தான்.
என் தனிமையின் மெளனம் எவ்வளவு
அழகானது உன்னை பற்றியே சிந்தித்து
உன்னகான கவிதைகளை உதிர்த்து விடூகிறது
ஒரு நொடி மெளனம் கோபத்தை வெல்லும்
ஒவ்வொரு நொடியும் மெளனம் எதிராளியை
வெல்லும்.
வறுமை தாண்டவம் ஆடும் ஏழைகள் வீட்டில்
பசியின் ஆளுமை மெளனம்
புயலுக்கு பின் ஒரு அமைதி உலகை புரட்டி
போட்ட இயற்கையின் கோவம் மெளனம்
மொழி தெரியா விழிகள் சிரித்தாலும் தரும்“
கண்ணீர் துளிகள் மெளனமே தான்

