என் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை என்று எண்ணாதே என்னை நோக்கி அடி…. எடுத்து வை உன் பயணம் யாரும் அறிவதில்லை என்று எண்ணாதே நீ வாழ்வது காரணமின்றி இல்லை இதுவே என் அருள். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
Author: admin
உலகம் சொல்வது போல் வாழ வேண்டாம் குழந்தாய் உண்மைதான் உறைவிடம்- அதில் இருக்க மாட்டாயா? மெய்நெறி கையில் உண்டு -அருள் வழி தெரியும் நம்பிக்கையுடன் நிலை கொள்- நான் உனக்கே துணை. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
செவியால் அவன்குரல் கேட்டாலும்- செவி வேல் கூர்மை பெற்றுவிடும் கையால் அவனை வணங்கிடவே- எழுத சக்தியை தருவான் சக்திபாலான்
“உங்கள் கிருபையினால் நான் செய்ய வேண்டியதைச் செய்தவன் ஆனேன். நான் செய்ய வேண்டிய கடமையில் மீதம் ஒன்றும் இல்லை. உங்கள் சொற்படி உலகத்திற்கு வழிகாட்டும் முறையில் வெறும் நிமித்தமாக இருந்து நீங்கள் எப்படிச் செய்வீக்கிறீர்களோ, அவ்வண்ணமே விளையாட்டாகச் செய்து முடிப்பேன்” என்கிறான் அர்ச்சுனன். பகவான் ஸ்ரீ வாசுதேவருக்கும், மகாத்மாவான அர்ச்சுனனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த அற்புதமான உட்பொருள் கொண்ட புல்லரிக்கக் கூடிய உரையாடலைக் கேட்டேன் என்கிறார் சஞ்சயன். மகாத்மாவான அர்ச்சுனன் கேட்க சாட்சாத் பரமாத்மா திருவாய் மலர்ந்தருளிய இந்த உபதேசம் மிகவும் அற்புதமானது, ஆச்சரியமானது, தனிச்சிறப்புடையது. இதன் மூலம் மனிதன் பகவானுடைய தெய்வீகமான உலகியலுக்கு அப்பாற்பட்ட குணங்கள், பிரபாவங்கள், ஆளுமையுடன் கூடிய முழு விஸ்வரூபத்தின் முழுமையான ஞானம் கிடைக்கப் பெறுகிறான். மனிதன் இதை எவ்வளவு நுட்பமாகக் கேட்கிறானோ, அறிகிறானோ, அதற்கு ஏற்ப மகிழ்ச்சியும், ஆச்சரியமும் பெற்று மெய் சிலிர்ப்பு அடைகிறான். உடல் முழுவதும் புல்லரிக்கிறது என்று அர்ச்சுனன் கூறிய… “அற்புதமான, ஆச்சரியமான…
படகு அல்லது தெப்பத்தின் துணை கொண்டும், நீந்தி நீரின் மேற்பரப்பில் ஆற்று ஓட்டத்தின் வழியிலேயே செல்பவன் ஆற்றை எளிதில் கடந்து கரை சேர்கிறான். அவ்விதமே இயற்கையின் ஓட்டத்தில் சிக்கிய மனிதன் இயற்கையோடு மோதுகிறான். செய்ய வேண்டிய கடமைகளான கர்மங்களைப் பிடிவாதமாக தியாகம் செய்து அந்த இயற்கையைக் கடக்க முடியாமல் அதிலேயே மேலும் சிக்கிக் கொள்கிறான். பகவான் கர்ம யோகம், ஞான யோகம் இவற்றைப் பற்றிக் கொண்டு இயற்கைக்கு மேலே உயர்த்திக் கொண்டு கர்மங்களைச் செய்து வருபவன் கர்மத்தளையில் இருந்து விடுபட்டு இயற்கையை கடந்து செல்கிறான். அதாவது, பகவானே அடைந்து விடுகிறான் என்கிறார். அர்ச்சுனா! உடல் என்கிற இயந்திரத்தில் அனைத்து பிராணிகளையும் பகவான் தன்னுடைய மாயையினால் அவர் அவர்கள் கர்ம வினைக்கு ஏற்றவாறு சுழலச் செய்து கொண்டு அனைத்து இதயத்திலும் வீற்றிருக்கிறார். கேசவா! உடலை இயந்திரத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதன் காரணத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ரயில் வண்டியில் மனிதன் அமர்கிறான். அவன்…
கேசவா! பிரம்மத்தில் ஒன்றிய யோகி வருந்துவதில்லை என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பிரம்மம் ஆகிவிட்டவர் எங்கும் எதிலும் பிரம்மம் என்ற புத்தி கொண்டவர் ஆதலினால் உலகியல் பொருள் எதுவும் அவருக்கு வேராகவோ, கவர்ச்சி உள்ளதாகவோ, தன்னுடையது என்றோ தோன்றுவதில்லை. ஆகவே, உடல் உட்பட எதனுடன் எது வந்து சேர்ந்தாலும், எது பிரிந்தாலும் அவரிடம் எத்தகைய மாறுதலும் ஏற்படுவதில்லை. எந்த நிலையிலும் அவர் சிறிது கூடக் கவலையோ, வருத்தமோ கொள்வதில்லை அவர் ஆசைகள் எல்லாம் நிறைவேறப் பெற்றவர். ஏனெனில், எந்தப் பொருளும் பிரம்மம் தவிர வேறில்லை. ஆதலால், அவர் எதையும் விரும்புவதில்லை. அவருக்கு எதிலும் வேற்றுமை காணும் எண்ணம் இராது. அத்தகையவர் சம பாவனை உள்ளவர் ஆவார். ஞான யோகத்தின் பயன் இது தான். ஞான யோகத்தினால் பெறக்கூடிய மிக உயர்ந்த நிலை ‘தத்துவ ஞானம்’ அல்லது ‘பராநிஷ்டை’ என்பர். இந்தப் பராபக்தி பரமாத்மாவின் உண்மை சுயருபத்தை நேரில்…
கேசவா! சிற்றின்ப போகங்களுக்காகவே நீதிக்குப் புறம்பான முறைகளில் செல்வம் சேர்க்கிறார்கள் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! சிற்றின்பங்களை நுகர வேண்டும் என்பதற்காகக் காமத்திற்கும், கோபத்திற்கும் ஆட்பட்டு திருட்டு, புரட்டு, கொள்ளை, பொய், கபடம், வஞ்சனை, பகட்டு, அடிதடி, நயவஞ்சகம், சூதாட்டம், ஏமாற்று வேலைகள். விஷம் வைப்பது, பொய் வழக்குத் தொடுப்பது, அச்சுறுத்துவது போன்ற நெறிமுறைகளுக்குப் புறம்பான முறைகள் மூலம் பிறருடைய செல்வத்தைக் கவர்வது தான் சுகபோகத்திற்காக நீதிக்குப் புறம்பான முறையில் செல்வம் சேர்ப்பதாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன். மேலும், இவர்கள் எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என எண்ணுவார்கள். அதனால், என்னால் இன்று இது அடையப்பட்டது மேலும் இந்த விருப்பத்தையும் பூர்த்தி செய்து கொள்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் உள்ளது. மேலும், இவ்வளவு கிடைக்கப் போகிறது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் விரும்பிய இந்தப் பொருளை நானாகவே என் சொந்த முயற்சிகளினால் அடைந்து விட்டேன். அடுத்து மனம் விரும்புகிற…
கேசவா! வேதாந்தம் என்பதை விவரியுங்கள். அதை தாங்களே செய்வதாகச் சொல்வதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! வேதங்களின் உட்கருத்துக்களை நிர்ணயிப்பதாகும். வேதங்களில் ஏற்படும் சந்தேகங்களை நீக்கி பரமாத்மாவிடம் எல்லாவற்றிற்கும் இணக்கம் காண்பது தான் வேதாந்தம். அவற்றைச் செய்பவனும் நானே என்கிறார். மேலும், இவ்வுலகில் அழிபவன் என்றும், அழியாதவன் என்றும் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். உடல் அழியக்கூடியது, ஆத்மா அழியாதது. எவர் மூவுலகங்களிலும் உட்புகுந்திருந்த போதிலும், உடல் அழிந்தாலும், ஆத்மா என்றும் அழியாதவராய், விகாரம் அற்றவன் ஆனந்தமயமானவன் அசுர குணங்களை அடக்கி ஆள்பவர். ஈஸ்வரன், சர்வ வல்லமை படைத்தவன், குணாதீதர், சுத்தர், அனைத்துக்கும் ஆத்மாவான புருசோத்தமன் நானே என்கிறார். அழியக்கூடிய சட வர்க்கத்திற்கு அப்பாற் பட்டவனாகவும், அழியாத ஆத்மாவைக் காட்டிலும் சிறந்தவனாகவும் உள்ளேன். இக்காரணத்தினால் உலகிலும், வேதத்திலும் புருசோத்தமன் எனப்புகழ் பெற்று உள்ளேன் என்கிறார். பரதகுலத் தோன்றலே! எந்த ஞானி என்னை இவ்விதம் புருசோத்தமன் என்று தத்துவ ரீதியாக அறிகிறானோ, அவன்…
பழம் வேண்டியா பழனி சென்றான் பக்தரைக் காக்கத் தானே அழகு முருகனை அன்புடன் வேண்டா வரம் தருபவன் தானே மழலை மக்கள் காக்க வேண்டி குன்றில் எழுந்தான் முருகன் வழங்கி வழங்கி சிவந்த கரத்தில் அருளைக் கொடுத்தான் முருகன்.
