சோம.சந்திரன்,எம்.ஏ, தினத்தந்தி ஆசிரியர், ஸ்ரீ ஐஸ்வரியம் ஆசிரியர், சக்திநகர் சங்கம்தோற்று வித்த தலைவருக்கு, நினைவு அஞ்சலி ! உழைப்பவர் மதிக்கும் தினம் மே படைக்கும் இறைவனுக்கு ஐந்து தொழில் கழை துளைபோட இசை வரும் காற்றில் இசை பரவுவது போல் உழைத்து உயர்ந்த உத்தமர் நீங்கள் உமது புகழ் மறைந்தும் வாழ்கிறது தோழமை மனங்களில் சிம்மாசனம் இட்டு ராஜாவாக வாழ்கிறீர் தனியிடம் பிடித்து. இல்லம் நிறைந்து எங்கும் நீங்கள் என்ன செய்தாலும் அதில் நினைவு நல்ல செயல்கள் என்றும் நிலைக்கும் விதைத்த விதைகள் வளர்ந்து கொண்டு பல்லாண்டு வாழ்ந்த பேரு பெற்றீர் பரமன் பாத அடி அடைந்து அல்லல் படும் பிறவி இல்லாமல் நல்லவை செய்து பெயர் பெற்றீர் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் வாழ்வது சுற்றும் பூமியின் சுழற்சியில் சுழன்று காழ்த்தல் அன்பு மறக்கா மனம் கடத்தும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மூழ்கும் பணியில் உறைந்து போனாலும் உருவம் இல்லா உறவில்…
Author: admin
40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே! கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே! விதண்டம் செய்பவன் நீயே !மண்ணை விரட்டும் மந்திரம் நீயே! மண்ணின் பொறுமை நீயே! குண்டலினி மகா சக்தி நீயே! குண்டிகை சக்தியும் நீயே!
திணை வீட்டு முருகன் நீயே! திறமை தருபவன் நீயே! சாணை தீட்டும் கருவி நீயே! சாதிக்க வைப்பவன் நீயே!இணை இல்லா முருகன் நீயே ! இன்னல் துரத்துபவன் நீயே! பிணைத்து எம்மை கட்டியவன் நீயே! பிறவி அறுப்பவன் நீயே!
27-சிக்கல் தீர்க்கும் வேலன் நீயே ! சிங்கார அழகன் நீயே! நக்கன் நங்கை மகன் நீயே ! நகைப்பு சொல் நீயே! நிக்கும் மலை கனி நீயே! தமிழ் கடவுளும் நீயே! துக்கரம் செய்யும் செயல் நீயே ! துதிக்கும் தெய்வம் நீயே!
413- முள் பாதை கடினம் தான் எடுத்து எறிந்து நட. 414-தொலை நோக்குப் பார்வையை பதித்து விட்டு தொடர் முயற்சியால் வெற்றி. 415-தோல்விகள் தோளை தொடும்முன் உயர்ந்து விடு தோல்விகள் தேய்ந்து போகும்.416- நேரம் அறிந்து செயல் படு நேர்மையால் உயர்ந் திடு.417- எண்ணமெனும் ஏணிப்படியின் மேல் செல்ல ஏற்றமெனும் தளம் கிட்டும்.418- குழந்தை வளர்ந்தால் குடும்பம் மகிழும் குடும்ப வளர்வு நாட்டு உயர்வு.
23-முத்தமிழ் முருகா மூச்சு நீயே ! முக்கனி சுவை நீயே! வித்தகம் செய்யும் குரு நீயே ! விண் ஒளி நீயே! புத்தகக் கருவின் பொருள் நீயே ! புத்துயிர் தருபவன் நீயே !குத்தன் நீயே சித்தம் நீயே! சிந்தனை தெளிவும் நீயே!
407-புற அழகால் புகழப் படுபவர் அக அழகாய் சுருங்கி.408- மனப் பக்குவமே வாழ்க்கை பக்குவம் மகிழ்ச்சி மனதின் எழுச்சி.409- நேர்மை வழியானால் முட்கள் விலகும் இலக்கு வளர வாழ்க்கை சுவைக்கும்.410- ஒருகண் மற்றொரு கண்ணை பார்க்காது குறை பார்க்காது நட்பு. 411-தெளிந்த நீரோடை போன்ற மனதில் தெளிவான சிந்தனை ஊற்று. 412-வாழ்க்கை என்பது ஒருவழிப் பாதை போகும்போதே பார்த்துப் போ.
19-வென்று வந்த இடம் இன்றும் வெற்றி முரசு கொட்டுகிறது! கன்றுதல் கொண்டேன் முருகா உன்னைக் கண்டு ஆனந்தம் கொள்ள !சன்னதி முன் நின்று துதிக்க சரணம் புகுந்தேன் முருகா ! வன்மை தாராய் முருகா உன் புகழ் பாடி வழிபட!
18-மயில் மேல் வருபவனே முருகா! மனம் நிறைந்தவனே முருகா !துயில் கொள்ளும் மாமன் மருமகனே! துணையாய் நிற்கும் முருகா!குயிலுவர் இசை கேட்டு முருகா! குதூகலம் அடைவாய் முருகா !மயில்கள் மேகம் கண்டு ஆடுவதால்! அகம் மகிழ்வாய் முருகா!
மேவி உனை வணங்க முருகா ! தாயாய் நீ இருக்க! காவி உடை உடுத்த வேண்டாம் ! காட்சியாய் நீ இருக்க! பாவி என்ற பெயர் வேண்டாம்! பார்வையில் நீ இருக்க! சாவி இல்லாமலே திறந்து விட்டாய்! அருளென்ற கதவை நீ!
