கேசவா! நம்பிக்கைஅற்ற மனிதர்கள் என்னை அடையாமல் மரண வடிவான சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! 84 லட்சம் பிறவிகளில் மாறி மாறிப் பிறந்து உழலும் ஜீவனுக்கு எப்பொழுதாவது பகவானுடைய கிருபையால் இந்த சம்சார சக்கரச் சுழலில் இருந்து விடுபட்டு பகவானை அடைவதற்காக மானிடப் பிறவி கிடைக்கிறது.பகவானை அடையச் செய்யும் தகுதி உள்ள எளிதில் கிடைக்காத இந்த மானிடப் பிறவியைப் பெற்றும் கூட பகவானுடைய வசனங்களில் நம்பிக்கை இல்லாத காரணத்தால்…. பஜனை, தியானம் முதலிய சாதனைகளைப் புரியாததால் பகவானை அடையாமல், பிறப்பு, இறப்பு சுழலான இந்த சம்சார சக்கரத்தில் சிக்கிக்கொண்டு முன் போலவே உழல்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! உருவமற்ற பரமாத்மாவான என்னால் இந்த அனைத்து உலகமும் பனிக்கட்டியில் நீர் போல் நிறைந்து உள்ளது. எல்லா உயிரினங்களும் என்னுடைய சங்கல்பத்தின் பலத்தினால் நிலை பெற்றுள்ளன. ஆனால், உண்மையில் நான் அவற்றில் நிலைபெற்று இருக்கவில்லை. …
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
கேசவா! ‘பவித்ரம்’ என்றும் ‘உத்தமம்’ என்றும் கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். நம்பிக்கையுடன் கேட்டுச் சிந்தித்து அதன்படி நடப்பவர்களுடைய அனைத்துப் பாவங்களையும், தீய குணங்களையும் அடியோடு அழித்து… அவர்களை எக்காலத்திலும் பரிசுத்தமாக வைத்திருக்கக் கூடியது இந்த உபதேசம். இதுவே ‘பவித்திர’ மானதாகும். உலகில் உள்ள சிறந்த பொருட்கள் அனைத்திலும் சிறந்தது. ஆகவே, இது ‘உத்தம’மானது என்கிறார் கிருஷ்ணன். மேலும், இவற்றில் எவ்வளவுக் எவ்வளவு இதில் முன்னேறுகிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு தீய குணங்கள், தீய நடத்தைகள், துக்கங்கள் எல்லாம் நாசம் அடைந்துவிடும். அவனுக்கு பரம சாந்தியும், சுகமும், நேரிடையான அனுபவத்திற்கு வரும் ஞானத்தை முழுமையாக அடையப் பெற்ற உடனே, பகவானை அடைந்து விட முடியும். எத்தனை விதமான கடமைகள் சொல்லப் பட்டிருக்கின்றனவோ, அவற்றிற்கு முரண் பாடமல் இயல்பாகவே தர்மமாக இருப்பதால்… எல்லாவற்றிற்கும் சிறந்தது ‘தர்மயம்’ எனப்படும் என்கிறார் கிருஷ்ணன். கேசவா! கடைபிடிப்பதற்கு வேண்டியது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.…
கேசவா! மறைத்துப் போற்றிக் காப்பாற்ற வேண்டியவற்றில் சிறந்தது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! உலகியலிலும், சாஸ்திரங்களிலும் மறைத்து போற்றப்பட வேண்டிய இரகசியங்கள் அனைத்தையும் விட முழுமையான ஆளுமை படைத்தவன் பகவான். புருசோத்தமனுடைய தத்துவம், பிரம்மை,குணம், பிரபாவம், விபூதி, பெருமை இவற்றுடன் கூடிய சரணாகதியில் சுயரூபம் மறைத்துக் காப்பாற்றப்பட வேண்டும். இதைத்தான் குகியதமம் என்று வர்ணிக்கப்படுகிறது என்கின்றார் கிருஷ்ணன். அர்ச்சுனா! விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் அனைத்து வித்தைகளுக்கும் ராஜா. மறைத்து போற்றப்பட வேண்டியவற்றில் சிறந்தது. மிகச்சிறந்தது கண்கூடாக உணர்வதற்குரியது. தர்மநெறிக்குட்பட்டது, கடைபிடிப்பதற்கு மிகவும் எளிதானது அழிவற்றது என்கிறார். கேசவா! ‘இதம்’ ராஜ வித்யா, ராஜ குகியம் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! விஞ்ஞானத்தோடு கூடிய ஞானமே இங்கு ‘இதம்’ எனப்படுகிறது. உலகில் அறிந்து கொள்ளப்பட்டவை, அறிந்து கொள்ளப்படாதவை என எத்தனையோ உள்ளன அவற்றில் எல்லாவற்றையும் காட்டிலும் சிறந்தது. வித்தையின் உண்மையான அனுபவத்தைப் பெற்றவனுக்கு மேலும்…
ஐந்தாம் படை வீடு திருத்தணி பல்லவி சீற்றம் கொண்டு சூரனை வென்றாய் முருகா சீற்றம் தணிந்து திருத்தணி வந்தாய் முருகா (சீற்ற) அனுப்பல்லவி தேனும் தினையும் உண்டு மகிழ வள்ளியை மணம் புரிந்து மகிழ (சீற்ற) சரணம் மானின் வயிற்றுப் பிள்ளை வள்ளி வேடவர் வளர்ப்பு பிள்ளை வள்ளி தினைப் புறம் காக்கும் வள்ளியை திருமணம் புரிய வந்த முருகா (சீற்ற) சரணம் யானை வடிவம் கொண்ட கணேசன் ஏதும் தெரியாமல் பயந்த வள்ளியை சூது செய்து சூழ்ந்து கொண்டு வயது முதிர்ந்த கிழவனே முருகா (சீற்ற)
ஒன்பதாவது அத்தியாயம் ராஜ வித்தை ராஜ ரகசிய யோகம் இந்த ஒன்பதாவது அத்தியாயத்தில் இதற்கு முன் செய்த உபதேசம் எல்லாவற்றிலும் தலைசிறந்தது. மறைத்து போற்றப்பட வேண்டிய ரகசியங்களிலும் தலை சிறந்தது. ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு ராஜ வித்தை ராஜ ரகசிய யோகம் என்று பெயர். அர்ச்சுனா! எதை அறிந்து கொண்டதாலேயே துக்க வடிவான உலகியலில் இருந்து விடுதலை பெறுவாயோ! மிகவும் மறைத்து போற்ற வேண்டிய விஞ்ஞானத்தோடு இந்த ஞானத்தை குற்றம்,குறை காணாத இயல்புடைய பக்தனான உனக்கு மறுபடியும் நன்றாக விளக்கிக் கூறப் போகிறேன் என்கிறார் கிருஷ்ணன். கேசவா! ‘அநஸீயு’ என்று என்னை அழைத்ததன் காரணத்தை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பண்புள்ளவர்களின் பண்பை மதியாமை, குணங்களில் குற்றம் காண்பது, அவர்களை நிந்திப்பது, அவர்களின் மீது பொய்யான பொல்லாங்கு கூறுவது இவையெல்லாம் ‘அநஸீயு ‘ஆகும். இயல்பாகவே இக்குணங்கள் இல்லாதவனை ‘அநஸீயு’ என்றேன். எவனுக்கு என்னிடம் நம்பிக்கை உள்ளதோ, பற்று கிடையாதோ அவன் தான்…
சுவாமிமலை பல்லவி தகப்பன் சுவாமியே முருகா சுவாமி மலையில் தந்தைக்கு குருவான(தக) அனுப்பல்லவி ஓம்காரப் பொருள் சொன்ன முருகா மெய்ஞான கருவாகி சிவனுக்கு குருவான (தக) சரணம் பிரணவ உபதேசம் செய்த சுப்ரமணியா பிரம்மனை சிறையில் அடைத்த பாலமுருகா பிரமிக்கும் தமிழ்த் தலைவன் சுவாமிநாதா பிரகாச வாழ்வு தரும் முத்துக்குமாரா (தக) சரணம் காணும் இடம் எங்கும் கந்தவேலா காணும் பொருளில் எல்லாம் கதிர்காமா பார்க்கும் விழியில் எல்லாம் பாலமுருகா மனதில் நிறைந்தது பரமானந்தம் முருகா (தக)
கேசவா! மோகம் அடைவதில்லை என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எவர் இந்த இரண்டு மார்க்கங்களையும் தத்துவரீதியாக அறிந்து கொண்டு, எல்லா லோகங்களினுடைய போகங்களும் அற்பமானவை, அழியக் கூடியவை என்று உணர்ந்து பரமாத்மாவை அடையவும், சாதனங்களிலேயே ஈடுபடுகிறவர்களே மோகம் அடையாதவர்கள் என விவரிக்கிறார். அர்ச்சுனா! நீ இதற்கு தகுதி பெற்றவன். எனவே, நீயும் எப்பொழுதும் யோகத்தில் ஈடுபட்டவனாக இரு. பகுதி பிரதானமான கர்ம யோகத்தில் சிரத்தையுடன் ஈடுபடுவாயாக என்கிறான் கிருஷ்ணன். அர்ச்சுனா! மனிதப் பிறவி குறுகிய காலத்தது. எப்பொழுது மரணம் நேரும் என்பது தெரியாது. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் சாதனையில் ஈடுபடுத்த முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யாவிட்டால், சாதனையின் இடை இடையே தடைபடும்.தொடராமல் விட்டால் மறுபடியும் பிறக்க நேரிடும். ஆகவே, பகவானை அடைவதற்காக மனிதன் எப்பொழுதும் இடைவிடாது சாதனை புரிய வேண்டும். யோகி ஆனவன் இந்த ரகசியத்தை தத்துவ ரீதியாக அறிந்து வேதங்களை அத்தியாயனம் செய்வதிலும்,…
6-ஊக்கமது கைவிடேல் ஒரு விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்ச்ச தங்கள் வயலில் ஒரு பகுதியில் கிணறு வெட்ட எண்ணினான். ஆள் விட்டு வெட்டினால் அதிக பணம் செலவாகும் என்று எண்ணிய விவசாயி, தானே வெட்ட முயற்சித் தான். அவனுடைய எண்ணத்திற்கு வலிமை சேர்ப்பது போல் அவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் முன் வந்தார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து அதிகாலையில் தொடங்கினார்கள். ஒருவர் வெட்டிக் கொடுக்க மற்றவர்கள் மண்ணை வாங்கி வேறு இடத்தில் கொட்டினார்கள். இப்படியே நாட்கள் கடந்தன கிணறு ஆழமாகப் போய்க் கொண்டு இருந்தது. இன்னும் தண்ணீர் வரவில்லையே என்று சோர்வு ஏற்பட்டது. இன்னும் முயற்சி செய்து பார்ப்போம். என்று முயற்சியை கைவிடாமல், இன்னும் கொஞ்சம் தோன்றினால் தண்ணீர் வந்து விடும் என்று எண்ணியபடி முயற்சித்தார்கள். என்ன ஆச்சரியம்! அவர்கள் எண்ணப்படி பாறை தெரிந்தது. அந்தப் பாறையை உடைத்தால் ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் வந்துவிடும்.மேலே வந்த விவசாயி பாறை உடைப்பவரை…
மூன்றாம் படை வீடு பழனி பல்லவிமாங்கனி வாங்க வந்தாய் முருகா மயில் மேலே ஏறி உலகைச் சுற்றி (மாங்) அனுபல்லவிஉமா மகேஸ்வரனைச் சுற்றி வலம் வந்து உண்ணும் கனி வாங்கி நின்றான் கணேசன் (மாங்) சரணம் சினம் கொண்டு எழுந்தாய் முருகா சிங்கார முகம்வாடி நின்றாய் முருகா மாங்கனி வேண்டி வந்தாயா முருகா மங்காத வாழ்வு மக்களுக்கு தரவேண்டி (மாங்) சரணம் தனியாக நின்றாய் முருகா பழனியில் தண்டபாணித் தெய்வமாய் மக்களுக்கு அருள ஞானம் கொடுத்து வாழ்விற்கு வழிகாட்டும் ஞானப் பழமே நீதானே முருகா (மாங்)
கேசவா! மார்க்கங்களுக்கு “சுக்ல” “கிருஷ்ண” என்று பெயர் வைத்திருப்பதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பரமாத்மாவினுடைய பரம பதத்திற்குச் செல்லும் மார்க்கம் ஒளிமயமானது திவ்யமானது. அதை ஆளும் தேவதைகளும் ஒளிமயமானவர்கள். அதில் செல்லும் சாதகர்களுடைய உள்ளங்களிலும், எப்பொழுதும் ஒளிமயமான ஞான ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஆகவே, அந்த மார்க்கம் “சுக்லம்” ஒளிமயமானதாகும். நரக லோகங்கள் இருள்மயமானது. அதில் வருகின்ற தேவதைகளும் இருண்ட சுயரூபம் கொண்டவர்கள். அதில் செல்பவர்களும் அஞ்ஞான இருள் சூழ்ந்தவர்கள்.ஆகவே,அதற்கு ‘கிருஷ்ணம்’ இருள் மயமானது என்று பெயராகும். கிருஷ்ண மார்க்கத்தில் செல்லும் மனிதன் எந்த உலகங்களுக்குச் சென்றாலும் எல்லாம் அழியக் கூடியவை. ஆகவே, இந்த மார்க்கமாகச் செல்கின்றவன் மனித உலகிற்குத் திரும்பத்தான் வேண்டும் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! இந்த இரண்டு மார்க்கங்களையும் தத்வரீதியாக அறிந்த எந்த யோகியும் மோகம் அடைவதில்லை. அவன் பற்றற்ற நிலையிலேயே சாதனையைச் செய்வான். ஆசையில் சிக்கிக் கொள்ள மாட்டான். ஆகையால், அர்ச்சுனா! எல்லா காலங்களிலும்…
