Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

அப்போது அங்கு வந்த சிறுவன் பெரியவரே! என்ன நினைக்கிறீர்கள் பிருந்தாவனம் போக வேண்டுமா? என்றான். பிருந்தாவனம் என்ற சொல்லைக் கேட்டதுமே, பெரியவருக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது அடுத்த கனமே தன் இயலாமை அவரை ஏங்க வைத்தது. சிறுவா இக்குருடன் எப்படிப் போவேன். என்றார், வருத்தம் கலந்த குரலில். பெரியவரே! இந்தத் தடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் அழைத்துப் போகிறேன் என்று சிறுவன் சொன்னான். பில்வமங்களருக்கு உள்ளம் மலர்ந்தது. அந்தத் தடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கல்லையும், முள்ளையும் விலக்கி, இப்படி வாருங்கள், இங்கே திரும்புங்கள், காலைத் தூக்கி வையுங்கள். என்று இனிமையாகச் சொல்லிக் கொண்டே பக்தனை அழைத்துச் சென்றார் பகவான். என்ன கருணை எத்தனை தயாள குணம் ஐயா! இதோ பிருந்தாவனம் வந்து விட்டது நான் போகிறேன் என்றான் சிறுவன். உடனே, தடியை விட்டு விட்டுப் பையனுடைய கையை சிக்கெனப் பிடித்துக் கொண்டு விட்டார் பில்வமங்களர். சிறுவன் கையைத் தொட்டதுமே உடலில்…

Read More

பில்வமங்களர் (லீலாசுகர்) பக்தி ரசம் நிரம்பிய ‘கிருஷ்ண கர்ணா மிருதம்’ எந்தன் நூலை இயற்றிய பில்வமங்களரை எடுத்துக்காட்டாக கூறலாம். தென்னாட்டில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் ஒரு கிராமத்தில் ராமதாசர் என்ற பெயர் கொண்ட பக்தரான அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய குமாரர் பில்வமங்களர் நல்ல கல்வி அறிவுடையவர், அமைதியான இயல்பு, நன்னடத்தை உடையவர். தந்தையை சிறுவயதிலேயே இழந்து விட்டார். தீய சேர்க்கையில் சோர்ந்து தீய நடவடிக்கைகளை கைக்கொண்டார். வேசியின் வீட்டிலேயே பலியாக கிடந்தார். இரவு, பகலாக பாவச் செயல்களில் ஈடுபட்டார். சிந்தாமணி என்ற பெயர் கொண்ட அவ்வேசி ஆற்றின் அக்கரையில் குடியிருந்தாள். தந்தையின் திவசம் வந்ததால் அந்த பகல் முழுவதும் தன் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது. இருந்தாலும் மனம் முழுவதும் வேசியின் நினைவாகவே இருந்தது. திவசம் முடிய மாலைப் பொழுது ஆகிவிட்டது. அப்போதே வேசியின் வீட்டிற்கு ஓடினார். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இன்று போக வேண்டாம் எனத் தடுத்தும் கேட்கவில்லை.…

Read More

ரத்தி தேவர் ரத்தி தேவர் என்ற அரசன் இருந்தார். அவர் வீரமும், கருணையும் மிகுந்தவர். ஏழைகளின் துயரைத் துடைப்பதற்காக தம் செல்வத்தை எல்லாம் தானம் அளித்தார். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தினார். அப்பொழுதும் கூட தனக்கு எது கிடைத்தாலும், பிறருக்கு கொடுத்து பட்டினி கிடந்தார். அரசர் ஆண்டியாகி குடும்பத்துடன் துன்பப்பட்டார். ஒரு சமயம் நாற்பத்தெட்டு நாட்களாக அரசருக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. பசியும், தாகமும் மிகவும் சோர்வுறச் செய்தது அரசரை. அச்சமயத்தில் நாற்பத்தொன்பதாவது நாள் அறுசுவை உணவு கிடைத்தது. அவ்வுணவை குடும்பத்தினருடன் உண்ண அமரும்போது ஒரு அந்தணர் வந்தார். அந்த சமயத்தில் தங்கள் பசியை ஒரு பொருட்டாக நினைக்காமல் அந்தணரை வரவேற்று உணவைப் பரிமாறினார். அந்தணரும் உண்டு மகிழ்ந்து சென்று விட்டார். மீதம் இருந்த உணவை உண்ணலாம் என எண்ணும் போது ஒருவர் வந்தார். அவருடன் ஒரு நாயும் வந்தது. நாங்கள் இருவரும் மிகவும் பசியால் வாடுகிறோம் உணவு படையுங்கள்…

Read More

சபரி சபரி என்ற வேடவப் பெண்ணின் பக்தியால் கொடுத்த கனியை உண்டு மகிழ்ந்த ராமபிரானின் தயா உள்ளத்தைப் பார்ப்போம். சபரி என்ற வேடவப் பெண் பகானின் மேல் பக்தி கொண்டவள். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை தண்டகாரண்யத்தில் ஒளிந்து. மறைந்து முனிவர்களுக்கு சேவை செய்து கழித்தாள். முனிவர்கள் நீராடச் செல்லுகின்ற நேரத்தில் அவர்கள் செல்லும் பாதையைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள். கரடு முரடான தரை மீது மணலைப் பரப்பி சமப்படுத்துவாள். காட்டில் இருந்து விறகு வெட்டிக் கொண்டு வந்து முனிவர்களின் ஆசிரமத்தில் சேர்ப்பாள். இவற்றை எல்லாம் கவனித்த மதங்க முனிவருக்கு அவளிடம் கருணை பிறந்தது. சபரியை அழைத்து பகவானின் நாமத்தை உபதேசித்தார். அவர் பிறவி நீங்கி பரலோகம் போகும்போது சபரியிடம் சொன்னார். உனது குடிலுக்கு பகவான் ஸ்ரீ ராமன் வருவார். அவரை தரிசனம் செய்து நீ பிறவிப் பயனை அடைவாய். அதுவரை இங்கேயே வழிபட்டுக் கொண்டு இரு என்று கூறிச் சென்றார். சபரியின் வழிபாடு…

Read More

கிருஷ்ணன் கூர்ந்து பார்த்தார். பாத்திரத்தில் ஒரு கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை கையில் எடுத்த கிருஷ்ணன். ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தாயே! இந்தக் கீரை இலையினால், மூவுலகம் திருப்தி அடையுமே என்றவர் வாயில் போட்டுக் கொண்டு சொன்னார். “எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவான பகவான் உணவை ஏற்பவன். இந்த கீரை இலையினால், திருப்தி அடையட்டும்” என்கிறார் கிருஷ்ணன். சாப்பிட்ட பின் சகாதேவனை அழைத்து “ரிஷிகளை சாப்பிட அழைத்து வா” என்று கூறுகிறார் கிருஷ்ணன். அச்சமயம் ரிஷிகளின் வயிறு நிரம்பி விட்டன. ஏப்பம் வர ஆரம்பித்து விட்டது. சீடர்கள் துர்வாசரிடம் சொன்னார்கள். சுவாமி! எங்களுக்கு கழுத்து வரை உணவு நிரம்பி விட்டது அங்கு போய் என்ன சாப்பிடுவோம் என்றனர். துர்வாசருக்கும் அதே நிலைதான். குழந்தைகளே! இங்கிருந்து விரைவில் ஓடிவிடுங்கள். இந்தப் பாண்டவர்கள் சிறந்த தர்மாத்மாக்கள், ஞானிகள், நன்னடத்தை உடையவர்கள். கிருஷ்ண பக்தர்கள் அவர்கள் நினைத்தால் பஞ்சுப் பொதியைப் பொசுக்குவது போல்…

Read More

திரௌபதி திரௌபதியின் அழைப்பை ஏற்று பாண்டவர்களுக்கு நற்பெயர் ஏற்படுத்திய சம்பவமும் உண்டு. பாண்டவர்கள் வனத்தில் துன்பமயமான நாட்களை கழித்துக் கொண்டிருந்தார்கள். பாண்டவர்களுக்கு தீங்கு செய்ய நினைத்த துரியோதனன், துர்வாச முனிவரை அழைத்து நன்கு உபசரித்தான். அவர் மகிழ்ந்திருந்த சமயம் இவ்வாறு வேண்டினான். தாங்கள் ஒரு நாள் பாண்டவர்கள் வசிக்கும் வனத்திற்கு தாங்கள் பதினாயிரம் சீடருடன் செல்ல வேண்டும். எல்லோரும் பகல் உணவு உண்ட பின் திரௌபதியும் உண்டு ஓய்வில் இருக்கும் நேரத்தில் விருந்துக்குச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டான். திரௌபதி சாப்பிட்டு முடித்து விட்டாள் என்றால் சூரிய தேவனால் அளிக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்து அன்னம் மீண்டும் கிடைக்காது. அதனால், சீற்றமே இயல்பாக கொண்ட துர்வாசர் பாண்டவர்களைச் சபித்து சாம்பல் ஆக்கிவிடுவார். எமது காரியம் எளிதாகிவிடும் என துரியோதனன் எண்ணினான். நேர்மையான உள்ளம் படைத்த துர்வாசருக்கு இந்த சூது தெரியவில்லை. ஆயினும் அவர் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். வனத்தில் திரௌபதி…

Read More

8-ஏற்பது இகழ்ச்சி மகன் வாரிசு இல்லாத அறுவது வயதிற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப் படுவதை கண்ட அரசு முதியவர்களை காக்கும் பொருட்டு மாதம்…மாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார்கள். கணக்கு எடுக்கும் போது மகன் இருப்பவர்களும், சொந்த வீட்டில் மகனுடன் இருப்பவர்களும் அரசு கொடுக்கும் பணத்தை வாங்க வேண்டும் என்பதற்காக… மகன் இல்லை என எழுதி கொடுத்து மாத… மாதம் பணம் வாங்குபவர்கள் மகன் இருக்கும் போதே மகனைக் கொன்றவர்கள் ஆகி, அரசையும் ஏமாற்றுபவர்கள் ஆகிறார்கள். இவர்களைப் போன்றவர்களைப் பார்த்த ஔவையார் “ஏற்பது இகழ்ச்சி” என்று பாடிச் சென்று இருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

Read More

ஓடி வந்து பார்த்ததுமே உளமுருகிக் கதறுகிறார். நண்பரே! இத்தனை நாள் வராமல் இருந்தீரே! கால் எல்லாம் முள்குத்தி காயங்கள் உண்டாயினவே! என்றுரைத்துக் கண்ணீரால் பாதங்களைக் கழுவி விட்டார். மார்போடு அணைத்து அவரை மாளிகைக்குள் அழைத்து வந்தார். சீர்மிகுந்த கட்டில் மிசை அமர வைத்து சிறப்பு செய்தார். கமலத் திருக்கரத்தால் திருப்பாத பூசை செய்தார். அமலன் தம் தலைமீதில் அந்நீரை தெளித்துக் கொண்டார். அன்புக்குரிய நண்பரின் மேனியில் திவ்ய பரிமளச் சந்தனம் பூசினார். நெற்றியில் கஸ்தூரி குங்குமம் இட்டார். மனம் நிறைந்த தூபம், நெய், தீபம் எல்லாம் காட்டி பூஜை செய்தார். சிறப்பாக விருந்து அளித்தார் தாம்பூலம் வழங்கினார். அந்தணர் சுதாமாவின் மேனி மிகவும் மெலிந்து அழுக்கடைந்து இருந்தது. மேனி முழுவதும் நரம்புகள் புடைத்திருந்தன. கந்தல் துணியை உடுத்தி இருந்தார். என்றாலும், மகாலட்சுமியின் அவதாரமான ருக்மணி தேவி தன்னுடைய தோழிகள் கூட இரத்தினம் பதித்த பிடியுடைய சாமரங்களை கையில் ஏந்தி பகவானுடைய உற்ற…

Read More

சுதாமா நினைத்தார், “பாவம் துயரம் தாங்காமல் இவள் கலக்கமுற்று பணத்திற்காக என்னை அங்கு அனுப்ப விரும்புகிறாள்” என்று. இதற்காக நண்பருடைய வீட்டிற்குச் செல்வதில் அவருக்கு தயக்கமாக இருந்தது. பேதையே!பணத்திற்காக நீ அங்கே அனுப்ப நினைக்கிறாய் பகவானை பஜனை பண்ணுவது தான் நம்முடைய கடமை பசி வந்தால் எங்கேயாவது பிட்சை எடுக்கலாம் என்றார் சுதாமா. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால், பிட்சை எடுப்பது கூட நடக்காது போலிருக்கிறது என் கந்தல் துணியையும், பசியினால் துடிக்கும் குழந்தைகளின் முகங்களையும் பாருங்கள். எனக்கு பணம் வேண்டாம், அவரிடம் சென்று ராஜ்யத்தையோ, அளவற்ற செல்வத்தையோ கேளுங்கள் என்று நான் சொல்லவில்லை. கஷ்டமான இந்நிலையில் ஒரு தடவை அவரைப் போய் தரிசித்து வாருங்கள் என்று தானே கூறுகிறேன் என்றாள். சுதாமா மிகவும் தயங்கினார். முடிவில் இதை ஒரு காரணமாகக் கொண்டு சென்றால்… ஸ்ரீ கிருஷ்ணனுடைய பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று நினைத்து போவதாக தீர்மானித்தார். வெறும் கையுடன் போகலாமா?…

Read More

கேசவா! அவற்றை விவரித்து கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன். விதுரர் அர்ச்சுனா! பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பின், ஒரு வருடம் தலைமறைவாக வாழ்ந்து கெடுவை முடித்த பின், பாண்டவர்களுக்கு துரியோதனன் ராஜ்ஜியத்தை திருப்பித் தர மறுத்துவிட்ட நிலையில்… தூதராகக் கௌரவர்களிடம் சென்றேன். வெளிப் பார்வைக்கும் உபச்சாரம் செய்வது போல காட்டிக் கொள்வதற்காக துரியோதனன் பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தான். விருந்துக்கு அழைத்தான் நான் மறுத்து விட்டேன். அதாவது, விருந்து இரண்டு விதமாகும். எங்கே பேரன்பு உள்ளதோ, அங்கு எது கிடைத்தாலும் அதை மகிழ்ச்சியோடு உண்ணலாம். பசியின் கொடுமையால் உயிர் பிரியும் நிலை ஏற்பட்டால் எங்கே, எது எந்த மனோபாவத்தில் வழங்கப்பட்டாலும் அதை ஏற்று வயிற்றை நிரப்பலாம். தற்சமயம் இந்த இரண்டு காரணங்களும் இல்லை. துரியோதனனிடன் பிரியம் என்ற அம்சமே இல்லை. எனக்கோ, பசியே இல்லை என்ற கிருஷ்ணன் மேலும் கூறுகிறார். அழையா விருந்தினராக பக்தனான விதுரர் வீட்டிற்குச் சென்றேன். அவர் கொடுத்த…

Read More