எழுத்து வடிவில் எளிமையாய் வந்து எழுச்சி கூட்டி எய்யாமை அகற்ற எம்மான் எம்முன் எழிலாய் எழுவாய் எதிர்ப்பட்டு எத்தனம் எத்தனிக்க அருள்வாய்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
கந்தா கடம்பாகார்த்திகை மைந்தா! கதியில்லை உலகில் உன்னை விட்டால்! கதிர்வட்டக் கதிர்ப்பு தருபவனே வேலா! கண்பார்த்து கணித்து கடைக்கண் அருள்வாய்.
இலக்கு நோக்கி இயங்கச் செய்பவனே! இருக்கையில் அமர்ந்து இன்புற்று ரசிக்க! இனிக்கும் சாறு பழம் பிழிந்து உனக்கு! இசைத்தமிழ் இசைத்துப் பாட அருள்வாய்.
புண்ணியம் செய்தேன் பாதகமலம் பணிய! புதையலாய் கிடைத்த புராதான தெய்வமே!புட்கரிணி யில்ஆறு மகனாகப் பிறந்தவனே! புலமை கொடுக்க ஒரு முகமாய் அருள்வாய்.
மயில் வாகனத்தில் அமர்ந்து வருபவனே! மயிலையில் துணையுடன் காட்சி தருபவனே! மகவாய் கார்த்திகை கரங்களில் தவழ்ந்தவனே!மருந்தாய் மூலிகையில் இருப்பவனே அருள்வாய்.
ஆறுபடை வீட்டில் எழுந்தருளும் ஆறுமுகனே! ஆரியக்கூத்து ஆடி ஆருடம் சொன்னவனே! ஆரவர் நடுங்கச் செய்த செந்திலாண்டவனே! ஆண்டியே! ஆதரவு தந்து அருள்வாய்.
கருணையே வடிவான கார்த்திகை மைந்தனே! கருவியாய் இயக்கும் மூலமே முருகனே! கனிந்த பார்வையால் காரியம் செய்பவனே! கந்தா குகனே கற்கண்டே அருள்வாய்.
கருணையே வடிவான கார்த்திகை மைந்தனே! கருவியாய் இயக்கும் மூலமே முருகனே! கனிந்த பார்வையால் காரியம் செய்பவனே! கந்தா குகனே கற்கண்டே அருள்வாய்.
அகரத்தில் அமர்ந்த அன்பில் சிறந்தவனே! அகம் மகிழும் தமிழைத் தந்தவனே! அலங்காரம் செய்ய அணிநூலாய் வந்து நீ! அரவிந்தம் மலரிலே எழுந்து அருள்வாய்.
தனித்து நின்ற தண்டபாணி தெய்வமே! தரணி போற்றும் தரம் பெற்ற தனிகாசலா! தமிழ் கடவுளாய் தராதரமின்றி தரிசனம் தருபவனே! தவத்திரு அடியவருக்கு அடியவனே அருள்வாய்.
