Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

கிருஷ்ணரின் கீதை குருகுலத்தில் சிறந்தவனே அர்ச்சுனா! என்னுடைய விபூதிகள் தெய்வீகமானவை ஆகும். இப்பொழுது உனக்கு அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் கூறுகிறேன். என்னுடைய விரிவுக்கு முடிவு இல்லை என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! நான் எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும், ஆத்மாவாக இருக்கிறேன். மேலும், உயிரினங்களுக்கு எல்லாம் ஆதியாகவும், நடுவராகவும், முடிவாகவும் நானே இருக்கிறேன். அதாவது,’ நானே ஆதி, நடு,முடிவு’ என்று கூறுகிறார் கிருஷ்ணன். அதிதியின் புதல்வர்கள் ஆன பன்னிருவர்களுள் நான் விஷ்ணுவாகவும், ஒளிர்பவைகளுள் கிரணங்களோடு கூடிய சூரியனாகவும், நாற்பத்தொன்பது வாயு தேவர்களுள் தேஜஸ் ஆகவும். நட்சத்திரங்களுள் அவற்றின் தலைவனான சந்திரனாகவும் இருக்கிறேன் என்கிறார். மேலும் கூறுகிறார், வேதங்களுள் சாம வேதமாக இருக்கிறேன். ஏன்என்றால்.. வேதங்களின் சாம வேதம் மிகவும் இனிமையான சங்கீத மயமானது. பரமேஸ்வரனைப் பற்றிய அழகிய துதிகள் கொண்டது ஆகவே, வேதங்களுக்குள் சாம வேதத்திற்கு முக்கியத்துவம் உண்டு அதனால், பகவான்தம் ரூபமாக இருக்கிறேன் என்கிறார். தேவர்களிள் இந்திரனாக இருக்கிறேன், பொறிப் புலன்களுள் மனதாக…

Read More

வடிவேலா வரணும் என்று நினைக்க வரவுகள் கை கூடும் தடிபிடித்த தண்டபாணி தாழ் பணிய தரம் உயர்ந்து போகும் மடிஏந்தி வரம் கேட்க முருகன் அருள் வந்து சேரும் அடிமீது அடிவைத்து அடி தொழுதால் அன்பு முகம் பார்க்கும்.

Read More

கேசவா! என்னிடம் கூறியவற்றை எல்லாம் உண்மை என எண்ணுகிறேன் பகவானே! உங்களுடைய திருவிளையாடலுக்காக ஏற்றுக் கொண்ட ரூபத்தை அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை. தேவர்களும் அறிந்து கொள்ளவில்லை. ஆக்கம், காத்தல், அழித்தல் இம்மூன்று தொழிலையும் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் தாங்கள் என்று நம்புவதுடன் தாங்கள் செய்யும் உபதேசங்களையும் ஐயம் இன்றி ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான் அர்ச்சுனன். முழுமையான ஈஸ்வர சக்தி, தர்மம், புகழ்,செல்வம், ஞானம், வைராக்கியம் இந்த ஆறும் ‘பக’ எனப்படும். இவற்றைப் பெற்றவன் ‘பகவான்’ என அழைக்கப்படுகிறார். எல்லா ஐஸ்வர்யங்களும் தம்பால் கொண்ட எல்லாம் அறிந்த ஸ்ரீ கிருஷ்ணன் சாட்சாத் பரமாத்மா தான். இதில் சிறிதும் ஐயம் இல்லை என்கிறான் அர்ச்சுனன். மேலும், உயிரினங்களைத் தோற்றுவித்தவரே உயிரினங்களின் தலைவரே தேவர்களுக்கு தேவனே, உலக நாயகனே, மனிதர்களில் சிறந்தவரை, நீங்கள் தான் உங்களை அறிய வல்லவர் என்கிறான் அர்ச்சுனன். கேசவா! எந்த விபூதிகளினால், சிறப்புகளினால் இந்த உலகங்களை வியாபித்து நிற்கிறீர்களா, அந்த…

Read More

குருவாய் உன்னை ஏற்றவர் வாழ்வில் குறைகள் ஓடிப் போகும் முருகா என்று சொன்னால் போதும் முதுமை கூட ஓடும் திருவே என்று சொன்னால் போதும் தீமை விலகி ஓடும் கருவில் இருந்தே கந்தனை நினைக்க கால பயமும் ஓடும்.

Read More

கேசவா! தேவரிஷியின் இலக்கணம் என்ன? அத்தகைய தேவதரிஷிகள் யார் யார் எனக் கேட்கிறான் அர்ச்சுனன். தேவைலோகத்தில் வசிக்கும் இவர்கள் மங்களமான தேவரிஷிகள் ஆவார்கள். இவர்களின் இலக்கணம் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது இவற்றை அறிவதுடன், எல்லா விதங்களிலும் சத்தியமே பேசுவது தேவ ரிஷிகளின் இலக்கணம் ஆகும். இவர்கள் இயல்பாகவே மிகுந்த ஞானம் அமையப் பெற்றவர்கள். இவர்களின் மாயையால் உலகியலில் தொடர்பு கொண்டவர்கள், தவத்தினால் புகழ் பெற்றவர்கள். இவர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஞானம் புகட்ட வல்லவர்கள். மந்திரங்களை உபதேசிப்பவர்கள். தமது ஈஸ்வரச் சக்தியால் எங்கும் செல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். தேவரிஷிகளில் பலர் உள்ளனர். சிலரை வாயுபுராணம் தெரிவிக்கிறது தர்மத்தின் புதல்வர்கள் ஆன நரன், நாராயணன் என்ற இருவர். கிரதுவின் புதல்வர்கள் ஆன வாலகில்யர்கள் புலகருடைய புதல்வரான கர்தமர், பர்வதர், நாரதர், கச்யபருடைய பிரம்ம ஞானிகளான அஸிதர், வத்சரர் இவர்கள் தேவதைகளை வசப்படுத்தி விட்டபடியால் தேவதரிஷிகள் எனப்படுகின்றனர். கேசவா! உங்கள் பெருமையை பாடுவதும்,…

Read More

சிக்கனப் பிடித்தால் சிறுவன் முருகன் சித்தி வந்து சேரும் உக்கிரமாக இருப்பவர் கூட வந்து உறவாய் கூடக் கூடும் தீக்குறி எல்லாம் பார்வை பட்டு தீர்த்தமாய் புனித மாகும் பிக்காரி கூட தோசம் நீங்கி பீடம் வந்து சேரும்.

Read More

கேசவா! ‘ஏதாம் விபூதிம்’ என்பதன் பொருளை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! புத்தி அதன் குணங்கள், மகரிஷிகள், தம்மிடம் தோன்றியவை, தேவதைகளும், அவர்களின் தன்மைகள் இவை எல்லாம் தான் ‘ஏதாம் விபூதிம்’ என்ற சொல் குறிக்கிறது என்கிறார் கிருஷ்ணன். மேலும், அகில உலகமும் பகவானால் படைக்கப்பட்டது. எந்தப் பொருளுக்கும் ஏதாவது சக்தி இருந்தால், தனிப்பெருமை இருந்தால் அது பகவானுடைய ‘விபூதி’ ஆகும். பிரபஞ்சமே பகவானுடைய விபூதி தான். எல்லாம் அவன் செயலே என்பதை உணர்வதும், உணர்த்துவதுமே விபூதியையும், யோகத்தையும் தத்வ ரீதியாக அறிவதாகும். வாசுதேவனான நானே அனைத்துலகும் தோன்றுவதற்குக் காரணம் என்னாலேயே அகில உலகமும் இயங்குகிறது என்று புரிந்து கொண்டு நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அறிஞர்களான பக்தர்கள் என்னை இடையறாது உபாசிக்கிறார்கள். என்னிடமே மனம் செலுத்தியவர்களும், என்னிடமே உயிரை அர்ப்பணம் செய்தவர்களுமான பக்தர்கள். பக்தியின் விளக்கத்தின் மூலம் தங்களுக்குள்ளே என்னுடைய பிரபாவத்தை விளக்கிக் கொண்டும், பேசிக் கொண்டும் எப்போதும் மகிழ்கிறார்கள் என்னிடமே…

Read More

பஞ்ச பூதத்தை அடக்கும் சக்தி பாதம் பணிந்தால் கிட்டும் பஞ்சம் எதுவும் வராமல் இருக்க பரமன் மகனைத் தொழுவோம் வஞ்சம் இல்லா மனம் பெற்று கடமை செய்து உயர்வோம் தஞ்சம் முருகா என்று சொன்னால் தடைகள் விலகி ஓடும்.

Read More

எல்லோருக்கும் முன் தோன்றியவர்களான ஸநகர், ஸநந்தனர்,ஸநாதனர்,ஸநத்குமாரர் இவர்கள் நான்கு பேரும் பிரம்மா படைக்கும் தொழில் செய்வதற்கு முன் தவம் செய்தார். அத்தவத்தின் இடையில் தோன்றியவர்களே இவர்கள். இவர்கள் தர்மத்தையும், ஞானத்தையும் உபதேசித்தார்கள். எனவே, இவர்களுக்கு அனைவரும் சீடர்கள் என்ற முறையில் அவர்களுடைய குழந்தைகள் ஆவார்கள். பிரம்மதேவனுடைய ஒரு நாளில் பதினான்கு மனுக்கள் தோன்றுகிறார்கள். ஒவ்வொரு மனுவினுடைய அதிகார காலத்தையும் மன்வந்தரம் என்று அழைக்கப்படுகிறது. எழுபத்தொரு சதுர்யுகங்களுக்கு கொஞ்சம் அதிகமான காலம் ஒரு மன்வந்தரம். மனித வருட கணக்குப்படி ஒரு மன்வந்தரம் என்பது 30 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு கொஞ்சம் அதிகம். தேவ வருடங்களின் கணக்குப்படி பார்த்தால் எட்டு லட்சத்து 52 ஆயிரம் தேவ வருடங்களுக்கு கொஞ்சம் அதிகமாகும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் தர்மத்தின் நெறிமுறைகளை நிறைவேற்றவும், உலகத்தைக் காக்கவும் வெவ்வேறு சப்தரிஷிகள் உண்டாகிறார்கள். இப்படி மன்வந்தரம் முடிந்த பிறகு வேறு மனு மாறும் போது அவருடன் கூடவே சப்தரிஷிகள்,…

Read More

கந்தா! கந்தா!என்று சொன்னால் கருணை வந்து பாயும்! சிந்தையில் என்றும் நிலைத்து விட்டால் சிகரம் கூட எட்டும்! பந்தம் பாசம் பெரிது இல்லை பக்குவம் வந்து விடும்! சந்தம் போல மணம் வீசும் சங்கரன் மகனைத் தொழ!

Read More