Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

முன்பு தங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது தங்கள் உபதேசத்தின் மூலம், தங்கள் குணங்கள் பிரபாவம், ஐஸ்வர்யம், ரகசியம், சுயரூபம் இவற்றைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டேன். ஸ்ரீ கிருஷ்ணன் தான் பரமாத்மா என்று புரிந்து கொண்டேன். என்னுடைய அறியாமை அழிந்ததற்கு தங்கள் உபதேசமே காரணம் என்று புரிந்து கொண்டேன் என்கிறான் அர்ச்சுனன். தாமரைக் கண்ணனே! உங்களிடம் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன. நீங்கள் அவற்றைக் காப்பாற்றுகிறீர்கள் அவை உங்களிடமே லயம் அடைகின்றன. இந்த விசயத்தை தாங்கள் பலமுறை சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கேசவா! உயிரினங்களின் உற்பத்தி அழிவு பற்றி மட்டும் தான் உங்களிடம் கேட்டுக் கொண்டேன் என்பது பொருள் அன்று. உங்களுடைய அழிவற்ற பெருமையையும் கேட்டறிந்தேன். அகில பிரபஞ்சத்தைப் படைத்தல்,காத்தல், ஒடுக்குதல் ஆகிய முத்தொழில் செய்தாலும் நீங்கள் கடவுள் இல்லை. எல்லாவற்றையும் அடக்கி ஆண்டாலும், அவற்றால் பாதிக்கப்படாமல் ஒதுங்கி நின்று சாட்சியாக இருக்கிறீர்கள். எங்கும் நிறைந்து இருந்தாலும், உலகில் உள்ள…

Read More

பதினொன்றாவது அத்தியாயம் விஸ்வரூப தரிசன யோகம் அர்ச்சுனனுடைய வேண்டுகோளுக்கு இணங்க கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். இந்த அத்தியாயத்தில் உள்ள விசயம் பெரும்பாலும் விஸ்வரூபத்தைப் பற்றியதாகும். விஸ்வரூபத்தை துதிப்பது பற்றியதாகவும் வருகிறது.ஆகவே,இந்த அத்தியாயத்திற்கு ‘விஸ்வரூப தரிசன யோகம்’ என்று பெயர். கேசவா! எனக்கு அருள் புரிவதற்காக உங்களால் மிக உயர்ந்ததும், மறைத்து காப்பாற்றத் தக்கதும் ஆன உபதேசம் கூறப்பட்ட பின் என்னுடைய அஞ்ஞானம் அழிந்தது. கேசவா! என் மனதில் நன்றி உணர்ச்சி, மகிழ்ச்சி, அன்பு இவற்றின் அலைகள் எழுந்தன. அகிழ உலகங்களுக்கும் அதிபதியான பகவானே! அற்பமான என்னிடம் எவ்வளவு கருணை வைத்துள்ளாய்! இந்த அர்ப்பனை உமது பக்தன் என்கிறாய், உன்னுடைய மகிமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறாய். முழு நம்பிக்கையுடன், மறுபடியும் யோக சக்தியையும், விபூதிகளையும் எடுத்துச் சொல்லும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க. கிருஷ்ணா! நீ வர்ணித்த விதம் எனது உள்ளத்தில் பகவத் கிருபையால் ஏற்பட்ட அடையாளம் பதிந்தது. இதற்கு முன்…

Read More

நடைப் பயணம் நோய் குறைக்க நல்ல அருளும் கிடைக்க கொடைத் தன்மை வாழ்வு செழிக்க வருபவர் மனமும் மகிழ தடை எல்லாம் தகர்த்து எரிய தன்னம்பிக்கை நாளும் வளர படை போல பக்தர் கூட்டம் பார்க்கத்தான் முருகன் அமர்ந்தான்.

Read More

கேசவா! என்னுடைய தெய்வீகமான விபூதிகளுக்கு முடிவே கிடையாது என்பதை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! என்னுடைய சாதாரண விபூதிகள் ஒருபுறம் இருக்க என்னுடைய தெய்வீக விபூதிகளுக்கு முடிவு கிடையாது. நீர், நிலம் இவற்றின் பரமணுக்களை எண்ண முடியாது.அது போலவே என்னுடைய விபூதிகளையும் எண்ணிக் கணக்கிட முடியாது. அவை எத்தனை என்று யாரும் அறியவும் முடியாது. எடுத்துச் சொல்லவும் முடியாது. கணக்கற்ற பிரம்மாண்டங்களில் கணக்கற்ற விபூதிகள் உள்ளன. அவற்றைக் கடக்கவும் முடியாது. ஆகவே, இத்துடன் இந்த வர்ணனையை முடித்துக் கொள்கிறேன் என்கிறார் கிருஷ்ணன். எது எது சிறப்புடையதோ, ஒளி உடையதோ, சக்தி படைத்தோ அந்த அந்தப் பொருள் எல்லாம் என்னுடைய ஒளியின் ஒரு பகுதியின் வெளிப்பாடே என்று நீ அறிந்து கொள். தவிரவும் அர்ச்சுனா! இவ்வாறு அதிகம் தெரிந்து கொள்வதால் உனக்கு என்ன பயன். நீ கேட்டதால் என்னுடைய மிகவும் முக்கியமான விபூதிகளை எல்லாம் உனக்கு எடுத்துச் சொன்னேன். இவ்வளவு மட்டும் அறிந்தால்…

Read More

கேசவா! வேதங்களில் உள்ள சந்தங்களில் காயத்ரியில் நான் இருக்கிறேன் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எல்லா வேதங்களின் சாரம் என்று கூறுவது காயத்ரி உபாசனையைத்தான். பிரம்மா முதலான தேவர்களும் அந்தி நேரத்தில் காயத்ரியை தியானித்து ஜபிக்கிறார்கள். எல்லா வேதங்களிலும் காயத்ரி உபாசனை நித்யம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதை கைவிடுபவர்களுக்கு வீழ்ச்சி ஏற்படும். காயத்ரியை ஜபிக்கின்ற பிறப்பாளன் விரும்பிய லோகத்திற்குச் செல்வான் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். காயத்ரி வேதத்தின் தாய். காயத்ரி பாவங்களை அழிக்க வல்லது. இவ்வுலகிலோ, பரலோகத்திலோ தூய்மைப்படுத்துவதற்கு காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்தது எதுவுமே கிடையாது. நரகத்தில் விழ்பவர்களைக் கை தூக்கிக் கரையேற்றக் கூடியது பாவங்களைப் போக்குவதில் காயத்ரியை விட சிறந்தது கிடையாது. பிரணவத்துடனும், மூன்று வியா கிருதிகளுடனும் கூட காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் ஆங்காங்கு காயத்திரியின் பெருமை வெகுவாக நிறைந்து விளங்குகிறது. எனவே, காயத்ரி எனது ரூபமாக…

Read More

எண்ண நினைவில் எழுச்சி தந்து ஏற்றம் பெறச் சொன்னான் வண்ண அழகின் வடிவம் அவனே வணங்கி வாழவும் சொன்னான் திண்ண மனதில் திறமை வளர்த்து திடமாய் வாழச் சொன்னான் புண்ணியம் செய்து புதுமைகள் புரிந்து… புரிந்து வாழச் சொன்னான்.

Read More

கேசவா! ‘வாதம்’ என்பதை ஒரு விபூதி என்று கூறுவதன் பொருளை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா சாஸ்திர சர்ச்சை மூன்று வகைப்படும்.1-அல்பம் 2-விதண்டா 3-வாதம் என்பதாகும். நியாயமானதா என்பதை பொருட்படுத்தாமல் தான் எடுத்துக் கொண்ட கட்சிக்கு வலுவூட்டுவதற்காகவும், எதிர்க்கட்சியைக் கண்டிப்பதற்காகவும் பேசுவது ‘அல்பம்’ எனப்படும். எதிர்க்கட்சியைக் கண்டிப்பதற்காக மட்டும் பேசுவது ‘விதண்டா’ எனப்படும். தன் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாராமல் உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டுச் செய்யப்படும் சர்ச்சை ‘வாதம்’ ஆகும். உண்மையின் நிர்ணயமும், நன்மை ஏற்பட வழியும் துலங்கும். அல்பம், விதண்டாவினாலும். தீயவை, கோபம், இம்சை, கர்வம் முதலிய குற்றங்கள் வளரும். எனவே, இவைகளைத் தவிர்க்க வேண்டும். தேவையானால் வாதத்தை ஏற்கலாம். இந்தச் சிறப்பினால் அதன் ரூபமாக இருக்கிறேன் என விவரிக்கிறார். அர்ச்சுனா! நான் எழுத்துக்களுள் அகரமாகவும், தொகைகளில் அல்லது தொடர்களில் உம்மைத் தொகையாகவும் இருக்கிறேன். அழிவற்ற முதலில் முடிவுமற்ற காலமும் ஆகவும். எல்லாப் புறங்களிலும் எனது முகம்…

Read More

பன்னிரு கரத்தால் பாமரன் காக்க குன்றில் எழுந்தான் குமரன் துன்பம் போக்கி துயரம் நீக்கி தூயவன் அருளைக் கொடுத்தான் ஈன்றவன் போல் காக்கும் கடமையை முருகன் ஏற்றுக் கொண்டான் தன்னை உணர்ந்து தடைகள் களைந்து வாழ வழியும் சொன்னான்.

Read More

ஆறுமுகத்தில் ஒரு முகம் பார்த்தால் பாவம் விலகி ஓடும் கூறுமுகத்தில் ஒரு சொல் கேட்டால் வீடு பேரு கிட்டும் சேறும் இடம் நல்லது ஆனால் சேவல் கொடியும் அசையும் சிறுநகை பார்த்து வணங்கி வந்தால் சிரமம் கூட ஓடும்.

Read More

பொருட்களுள் இமயமலையாக இருக்கிறேன். உறுதியும், உயரத்திலும் தவம் செய்வதற்கும் முக்தி பெறவும் உதவும் இடம் எனவே, நான் அங்கு இருக்கிறேன். மரங்கள் அனைத்திலும் அரச மரமாகவும், தேவ ரிஷிகளுள் நாரதராகவும், கந்தர்வர்களுள் சித்ரரதன் ஆகவும் திகழ்கிறேன். சித்தர்களில் கபில முனிவராகவும் விளங்குகிறேன். கபிலர் இயல்பாகவே என்றும் அறியாத ஞானம், ஐஸ்வர்யம், தர்மம், வைராக்கியம் முதலிய நற்பண்புகள் அமைந்தவர் இவர் தம்ரூபம் என்கிறார். பாற்கடலை கடைந்த போது அமுதத்துடன் கூடவே வெளிப்பட்ட ‘உச்சைஸ்வரஸ்’ என்ற குதிரையாகவும், யானைகளில் சிறந்தது கஜேந்திரன். இந்த யானைகளில் சிறந்தது அமுதத்துடன் வந்த ‘ஐராவதம்’ இது என் ரூபம் என்கிறார். மனிதர்களுள் ஆளுமை, ஆட்சி, அறவழியில் நடத்திச் செல்லும் அரசனாகவும் இருக்கிறேன். நான் ஆயுதங்களுள் வஜ்ராயுதமாகவும், பசுக்களுள் காமதேனுவாகவும் உள்ளேன். சாஸ்திர முறையில் மகப்பேற்றுக்கு காரணமான மன்மதனாக இருக்கிறேன். சர்ப்பங்களுள் சர்ப்ப ராஜாவான வாசுகி ஆகவும் இருக்கிறேன். நான் நாகங்களுள் ஆதிசேஷன் ஆகவும், நீர்வாழ்வன வற்றிற்கும், சல தேவதைகளுக்கும்…

Read More