“உங்களுடைய இந்த பயங்கர விஸ்வரூபத்தில் கௌரவப் படையினரும் எங்கள் படையினரும் அனேகமாக எல்லா வீரர்களுமே கண்ணெதிரில் அழிந்து போவதாக காட்டுகிறீர்கள். இதை எதற்கு காண்பித்தீர்கள். நீங்கள் அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறீர்கள் என்ற ரகசியம் எனக்குத் தெரியவில்லையே” தயவுசெய்து இந்த ரகசியத்தை வெளிப்படுத்துங்கள் என்று வேண்டுகிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற பெருகி வளர்ந்துள்ள மகா காலனாக இருக்கிறேன். இப்போது உலகங்கள் எல்லாவற்றையும் சம்காரம் செய்வதற்கு முனைந்திருக்கிறேன். நானே அகில உலகத்தையும் படைத்துக் காத்து ஒடுக்கிக் கொள்ளும் சாட்சாத் பரமேஸ்வரன், தற்போது எல்லோரையும் சம்கார மகா காலன் என்று என்னை அறிந்து கொள். எந்தப் போர் வீரர்கள் எதிரிப் படைகளில் இருக்கின்றார்களோ, அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும் இருக்கப் போவதில்லை. எல்லோரும் போரில் அழிந்தே போவார்கள் என்கிறார். கௌரவப் படையினரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் அர்ச்சுனனை மேலும், உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக பேச்சு யுத்தியை…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
13-அஃகஞ் சுருக்கேல் பண்ணையார் நிலத்தில் நெல், தானியம், காய்கறிகள் என பயிர் செய்வதில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல். அறுவடை செய்தவர்களுக்கு பணத்திற்குப் பதில் நெல், தானியம் என பண்ணையார் கொடுக்கச் சொன்னார். அளந்து கொடுப்பவர் குறைவாகவே அளந்து கொடுத்து அதில் ஒரு லாபம் சம்பாதித்து கொண்டார். இதைக் கண்டும் கேட்க முடியாமல் வேலை ஆட்கள் கொடுத்ததை வாங்கிச் சென்றார்கள். கடையிலும் தராசுக்கு அடியில் காந்தத்தை வைத்து குறைவாக அளந்து கொடுத்து ஏமாற்றுவதையும் கண்ட ஔவையார் “அஃகஞ் சுருக்கேல்” என்று பாடிச் சென்றார்.
பீஷ்மர், துரோணரும் தோற்றுப் போவதோ, கொல்லப் படுவதோ, மிகவும் கடினமான செயல் இவர்களும் உங்கள் பயங்கரமான வாயில் போகிறார்கள். மற்ற மன்னர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கர்ணன் சூரவீரத் தனத்தினால் ஏற்பட்ட கர்வம் காரணமாக அவன் கூட பகவான் உடைய வாயில் நுழைந்து அழிகிறான். பெரிய பெரிய கோரப் பற்களோடு கூடிய கோரமான முகங்களில் இரண்டு பக்க படையைச் சேர்ந்த போர் வீரர்களும் நுழைந்து உமது பல் இடுக்குகளில் சிக்கி மடிவதைப் பார்க்கிறேன். சிலருடைய தலைகள் தூள் தூளாகி விட்டன அவர்கள் தலையற்ற அங்கங்களுடன் உங்கள் பற்களில் பரிதாபமாக சிக்கிக் கொண்டு உள்ளதையும் பார்க்கிறேன் என்று அர்ச்சுனன் கூறுகிறான். ஆறுகளுடைய பற்பல வேகமான நீரோட்டங்கள் இயற்கையாகவே கடலை நோக்கி பாய்ந்து ஒன்றாக கலந்து விடுவது போல, மண்ணுலக வீரர்கள் தீக்கொழுந்து வீசுகின்ற உங்களுடைய வாய்களில் புகுந்து இரண்டறக் கலக்கிறார்கள். அதாவது, ஜோதி மயமாக உள்ள உங்களுடைய முகங்களில் நுழையும் சூர வீரர்கள்…
பதினோரு ருத்திரர்களும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், எட்டு வசூக்களும், சாத்யர்களும், விஸ்வதேவர்களும்,இரண்டு அசுவினி குமாரர்களும், நாற்பத்தொன்பது மருந்துகளும். பித்ருக்களின் கூட்டங்களும், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் இவர்களின் கூட்டங்களும் ஆக அவர்கள் எல்லோருமே ஆச்சரியம் அடைந்தவர்களாய் உங்களைப் பார்க்கிறார்கள். நீண்ட தோள்களை உடையவரே! பல முகங்களும், கண்களும், பல கைகள், தொடைகள், திருவடிகளும், பல வயிறுகளும். பல கோரப் பற்கள் கொண்டும்.பயங்கரமான உங்களுடைய பெரிய உருவத்தைப் பார்த்து மக்கள் எல்லோரும் மிகவும் பயந்து நடுங்கி நிற்கிறார்கள். அவ்விதமே நானும் பயந்து நடுங்கி நிற்கிறேன். என்கிறான் அர்ச்சுனன். ஏனெனில், விஷ்ணுவே! வானளவிய பிரகாசமான பல வண்ணங்கள் கொண்டு மிக விரிந்த வாயும், ஒளிமிக்க அகன்ற கண்களும் உடைய உங்களைப் பார்த்து பயத்தினால் மிகவும் நடுங்கிய மனமுடைய நான் தைரியத்தையும், அமைதியையும்,அடையவில்லை. ஸ்ரீ மகா விஷ்ணுவான நீங்கள் பூமியின் பாரத்தை குறைப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித் திருக்கிறீர்கள். என் நடுக்கத்தைத் தீர்ப்பதற்காக இந்த விஸ்வரூபத்தைச் சுருக்கிக்…
அற்புதமான ஒளிமிக்கதாக இருந்தால் சாதாரண மானுட கண்களுக்கு விழித்துப் பார்க்க இயலாது. அர்ச்சுனனுக்கு பகவான் கொடுத்த தெய்வீகப் பார்வையால் ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தைப் பார்க்க முடிந்தது. பகவானுடைய குணங்கள் பிரபாவம், சக்தி, சுயரூபம் இவற்றை எவரும் எந்த உபாயத்திலும் முழுமையாக அளந்து அறிந்து கொள்ள இயலாது என்று கூறுகிறார் அர்ச்சுனன். நீங்கள் அறியத் தக்க மிக உயர்ந்த அழிவற்ற பரபிரம்ம பரமாத்மா நீங்களே! இதில் அகில உலகத்திற்கும் மேலான உறைவிடம் நீங்களே! நிலையான தர்மத்தைக் காப்பாற்றுபவர் நீங்களே! அழிவற்றவரும் நீங்களே என்பது என்னுடைய கருத்து என்கிறான் அர்ச்சுனன். பரம்பொருளே! உங்களை முதல், நடு, முடிவு அற்றவராகவும், எல்லையற்ற தோள்கள் உடையவராகவும் இருக்கின்ற நீங்கள்… சூரிய, சந்திரன் இவர்களைக் கண்களாகக் கொண்டவராகவும், கொழுந்து விட்டெரியும் தீ போன்ற வாய் உடையவராகவும், தம்முடைய வெப்பத்தினால் இந்த உலகத்தை வாட்டுபவராகவும் பார்க்கிறேன் என்கிறான் அர்ச்சுனன். பரமாத்மாவே! விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியும் எல்லா…
பகவான் பூஜிக்கத் தக்கவர் என்ற எண்ணம் அர்ச்சுனனுடைய மனதில் விழித்தெழுந்தது. அந்தப் பாவனை மின்னல் போல அவர் உடலில் பாய்ந்து அர்ச்சுனனை தலை வணங்கச் செய்தது. சரணங்களில் விழச் செய்தது, கைகளைக் கூப்பவைத்தது. மிகவும் வினயத்துடனும், சிரத்தையுடனும், பக்தியுடனும் பகவானைத் துதிக்க ஆரம்பித்தார். தேவனே! நான் உங்களுடைய திருமேனியில் எல்லா தேவர்களையும், அநேக பிராணி வர்க்கங்களையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவனையும், மகா தேவனையும், எல்லா ரிஷிகளையும், தெய்வீகமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன். “என் முன்னே இதோ ஸ்ரீ கிருஷ்ணனாக நிற்கிறீர்களே இந்த திருமேனியிலேயே இவை எல்லாவற்றையும் காண்கிறேன்” என்கிறார். பிராணிகளை காட்டிலும் தேவர்கள் சிறந்தவர்கள். தேவர்களை காட்டிலும் பிரம்ம தேவனும், பரமசிவனும் தேவர்களுக்கு தேவர்களாக இருக்கிறார்கள். எனவே, தனித்தனியாக குறிப்பிட்டு கூறுகிறார் அர்ச்சுனன். பிரம்மதேவன் பகவான் விஷ்ணுவின் நாபியிலிருந்து வெளிவந்த தாமரை மலர் மீது வீற்றிருக்கிறார் என்று கூறும்போது… “அவர் உதித்த கமலத்திற்கு ஆதாரமான உங்களுடைய ஸ்ரீமந்நாராயண சுரூபத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…
