என்னிடத்தில் மனதை நிலைக்க வைப்பதற்காக சாஸ்திரங்களில் பலவாறு கூறப்பட்டுள்ளன. அவற்றை எல்லோருமே கடைப்பிடிக்கலாம்.1- சூரிய கதிர்கள் வரும் திசைக்கு எதிராக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டால் மனதில் எங்கும் சமமாக ஒரு ஒளி பரவுவது தெரியும் 2- அதைவிட ஆயிரக்கணக்கான மடங்கு ஒளி பகவானிடம் உள்ளது. என மனதில் சிந்தனை செய்து பரமாத்மாவினுடைய அந்த ஒளிமயமான ஜோதி ரூபத்தில் மனம் நிலைக்குமாறு அடிக்கடி முயல வேண்டும்.3- நெருப்புக் குச்சியில் நெருப்பு நிறைந்துள்ளது போன்று, பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு மனம் எங்கெல்லாம் துள்ளி ஓடுகிறதோ, அங்கெல்லாம் சர்வ வல்லமை பெற்ற பேரன்புக்குரிய பகவான் உடைய சுயரூபத்தை பேரன்புடன் திரும்பத் திரும்ப சிந்திக்க வேண்டும்.4- மனம் எங்கு ஓடினாலும் தடுத்து நிறுத்தி தமக்கு பிடித்த தெய்வத்தினுடைய ரூபத்தை வெளிப் படத்திலும், உள் மனதிலும் பார்த்து திரும்பத் திரும்ப நாம ஜபம் செய்ய வேண்டும்.5- வண்டு ரீங்காரம் செய்வது போல் ஒரே குரலில்…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

“கேசவா! பக்தியோகம் என்பதையும், அதன் மூலம் பகவானைச் சிந்தித்துக் கொண்டே எவ்வாறு உபாசிப்பது என்பதை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எனக்குப் பரமேஸ்வரனைத் தவிர வேறு யாருமில்லை அவரே எனக்கு எல்லாம் என்று அறிந்து தன்னலம் கருதாமல் மிகுந்த சிரத்தையுடன் அன்யோன்யமான பிரியம் செலுத்த வேண்டும். இதில் தன்னலமோ, அகம்பாவமோ இல்லாமல் எப்போதும் பூரணமாகவும், அசையாததாயும் இருக்க வேண்டும். வேறு பொருட்களில் சிறிதுகூடப் பற்று இருக்கக் கூடாது. அதன் காரணமாக கணநேரம் பகவானை மறந்தால் கூட அது பொறுக்க முடியாததாக ஆகிவிட வேண்டும். இதுதான் சிந்தித்துக் கொண்டே இருப்பதாகும். மேலும், பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள், லீலைகள் இவற்றைக் கேட்பதும், கீர்த்தனம் செய்வதும், அவருடைய திருநாமங்களை ஓதுவது, ஜபம் செய்வது இவைகள் எல்லாம் உபாசனைகள் ஆகும், என விவரிக்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! இவ்விதம் என்னிடம் மனதை ஈடுபடுத்தியவர்களான பிரியமான பக்தி செய்பவர்களை சீக்கிரமாகவே நான் மரண வாடிவான சம்சாரக் கடலில் இருந்து கரையேற்றுபவனாக…
நானும் பிரம்மமும் வேறல்ல என்கிறார் கிருஷ்ணன். பிரம்மம் என்பது என்னைத் தவிர வேறென்று நான் பிரம்மத்தை தவிர வேறல்ல” என்கிறார். நிர்குண உபாசகர்களுக்கு பகவான் சகுண சுயரூபத்தை தரிசனம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், சகுண உபாசகர்களுக்கு பகவானுடைய தரிசனமும் கிடைக்கும். சகுண உபாசனையின் சிறப்பும் இதுதான். அர்ச்சுனா!சத்,சித்,ஆனந்தமயமான உருவமற்ற பிரம்மத்தில் மனதை ஈடுபடுத்தும் மனிதர்களுக்கு சாதனையின் உழைப்பு அதிகமாகும். ஏனெனில், உடலில் பற்றுள்ளவர்களால் உருவம் அற்ற பிரம்ம விசயமான மார்க்கம் மிகுந்த சிரமத்துடன் அடைப்படுகிறது. அதாவது, தனது என்ற பற்று இருந்தால் நிர்குண பிரம்மம் பற்றிய தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். எனவே, உடலில் பற்று உள்ளவர்கள் மிகவும் கடினமான உழைப்பினால் தான் அந்த நிலையை அடைய முடியும். சகுண உபாசகர்களுக்கு அவ்வளவு உழைப்புத் தேவை இல்லை. ஏனெனில், உபாசனை எளிதானது. மேலும், அவர்கள் பகவானிடமே தங்கள் பொறுப்பை ஒப்படைத்து விட்டதால், அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளும்…
14-கண்டொன்று சொல்லேல் ஒருவன் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த ஒருவன் மற்றொருவரிடம் அவன் கருப்பு… கருப்பாக வாந்தி எடுக்கிறான் என்றான். அவன் மற்ற ஒருவனிடம் சென்று அவன் காக்கா…. காக்காவாக வாந்தி எடுக்கிறான் என்றான். அதைக் கேட்டு வியந்த அவன் காக்காவாக வாந்தி எடுத்ததைப் பார்த்தாயா என்றான். இல்லை என்றவன் அவன் கருப்பாக என்றான். காக்கா கருப்பகத்தானே இருக்கும் என்று இழுத்தான். அவன் பார்வையைப் பார்க்க முடியாமல் தலைகுனி தான். கண்ணால் பார்க்காததைப் பார்த்தது போல் பொய் சொல்லக் கூடாது. என்பதைத் தான் ஔவைப் பாட்டி “கண்டொன்று சொல்லேன்” என்று கண்ணைப் பார்த்துப் பேசு கண்ணால் கண்டதைப் பேசு என்கிறார்.
பனிரெண்டாவது அத்தியாயம் பக்தி யோகம் இந்த அத்தியாயத்தில் பக்தி செய்வதற்கான பலவிதமான சாதனைகளைப் பற்றியும், பகவானை பக்தி செய்வது பற்றியும் பக்தர்களின் இலக்கணங்களும் கூறப்படுகின்றன. இதன் ஆரம்பமும், முடிவும் பகவானுடைய பக்தியைப் பற்றியே இருக்கின்றன. மூன்று சுலோகங்களில் மட்டும் ஞானத்திற்குரிய சாதனைகளைப் பற்றி சொல்லப்படுகிறது. பக்தி யோகத்தையும், ஞான யோகத்தையும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும் முறையில் அவை அமைந்துள்ளன. ஆகவே, இந்த அத்தியாயத்திற்குப் ‘பக்தி யோகம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. “கேசவா! வேறொன்றிலும் நாட்டம் இல்லாமல் உங்களிடம் அன்பு கொண்ட எந்த பக்தர்கள் எப்பொழுதும் உங்களுடைய பஜனையிலும், தியானத்திலும், ஈடுபட்டு சகுண ரூபனான பரமேஸ்வரனான உங்களை உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்கள். மேலும், அழிவற்ற சத்,சித்,ஆனந்த மயமான உருவமற்ற பிரம்மத்தையே உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்கள். இவ்விரு வகையான உபாசகர்கள் இடையே யோகத்தைச் சிறந்த முறையில் அறிந்தவர்கள் யார்? எனத் தெரிவிக்கும்படி கேட்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! என்னிடத்தில் ஒருமுகப்படுத்தி எப்பொழுதும் என்னை…