“அர்ச்சுனா!மனித உலகில் உன்னைத் தவிர வேறு யாராலும் இந்த விஸ்வரூபம் தாங்கிய நான் காணப்பட இயலாதவன்.” “வேதங்களையும், யாகத்தின் செயல் முறைகளையும், கற்பதாலோ, தானங்களாலோ காணப்பட இயலாதவன்.” “கர்மங்களாலும் கூடக் காணப்பட முடியாதவன். மற்ற உலகங்களிலும் சாதனை எதுவும் புரியாமலும் யாரும் பார்க்க முடியவே முடியாது,நீ சிறந்த வீரன். நீ இவ்விதம் பயப்படுவது அழகன்று” என்கிறார். இத்தகைய என்னுடைய கோரமான இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து உனக்கு கலக்கம் வேண்டாம். மதி மயக்கம் வேண்டாம். நீ பயத்தைத் துறந்து மன மகிழ்ச்சியுடன் அதே என்னுடைய விஸ்வரூபத்தில் சங்கு, சக்கர, கதை, பத்மம் இவற்றை நான்கு கரங்களிலும் ஏந்தி உள்ள விஸ்வரூபத்தை மறுபடியும் நன்கு பார். அந்த விஸ்வரூபம் இதோ உன் முன்னால் இருக்கும்போதே மறைந்து விட்டது. அதன் இடத்தில் விஷ்ணுவின் இந்த சதுர்பூஜரூபம் வெளிப் பட்டிருக்கிறது. பயம் நீங்கி மகிழ்ச்சியோடு நீ இருந்த சதுர்புஜ ரூபத்தைப் பார் என்கிறார் கிருஷ்ணன். “வாசுதேவனான பகவான்…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
மேலும், கிரீடம் தரித்தவராகவும், கதாயுதத்தையும், சக்ராயுதத்தையும் கைகளில் ஏந்தியவராகவும் உள்ள அந்த விஸ்வரூபத்திலே உங்களை தரிசிக்க விரும்புகிறேன். ஆகையால், விஸ்வரூபம் கொண்டவரே! ஆயிரக்கணக்கான திருக்கரங்கள் உடையவரே! அதை நான்கு கைகள் கொண்ட சதுர்பூஜனாகத் தரிசனம் அளியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! அனுக்கிரக பூர்வமாய் என்னால் என்னுடைய யோக சக்தியினால் மிகச்சிறந்ததும் ஒளிமயமானதும் எல்லாவற்றிற்கும் முதலானதும், முடிவானதும் ஆன உனக்குக் காட்டப்பட என்னுடைய விராட் விஸ்வரூபம் உன்னைத் தவிர வேறு எவராலும் இதற்கு முன் பார்க்கப்படவில்லை. உன்னுடைய பக்தியினாலும் வேண்டுகோளினாலும் உன்னிடம் மகிழ்ச்சி அடைந்த நான், உன் மீது கருணை கொண்டு என்னுடைய குணங்கள், பிரபாவங்கள், தத்துவங்கள் உனக்குப் புலப்பட வைக்க வேண்டும் என எண்ணி உலகியலுக்கு அப்பாற்பட்ட என் விஸ்வரூபத்தை நான் உனக்கு காண்பித்தேன். இந்நிலையில் உனக்கு பயமும், துன்பமும், மோகமும் ஏற்பட வேண்டியதில்லை. பின் ஏன் பயத்தினால் இப்படி நடுக்கம் அடைகிறாய் என்கிறார் கிருஷ்ணன். “என்னுடைய விஸ்வரூபத் தரிசனம் எல்லோருக்கும்…
தாம் பிழை செய்ததாகக் கருதும் சமயங்களைக் குறிப்பிடுகிறான். நாம் இருவரும் சேர்ந்து நடந்து போகும்போதோ, படுக்கையில் படுத்திருக்கும் போதோ, மேல், கீழான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் போதும்… உண்ணும் போதோ, நான் உங்களைப் பல தடவை அலட்சியமாக நடந்தி இருக்கிறேன் இப்படி தனிமையில் பிழை செய்திருந்தாலும், பலர் முன்னிலையில் செய்திருந்தாலும், அவையெல்லாம் மிகத் தவறு என்று இப்போது உணர்கிறேன். அந்த ஒவ்வொரு தவறுக்காகவும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்கிறான் அர்ச்சுனன். நீங்கள் என் பிழைகளைப் பொறுத்தருளக் கடமைப்பட்டவர். நீங்கள் இந்த அசைவனவும், அசையாதனமும் கொண்ட உலகத்திற்குத் தந்தையாகவும், எல்லோரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த குருவாகவும் போற்றத் தகுந்தவராகவும் இருக்கிறீர்கள். இணையற்ற மகிமை உடையவரே! மூவுலகிலும் எவரும் உங்களுக்கு நிகரானவர் கிடையாது. பின் உங்களிடம் மேம்பட்டவர் எவ்வாறு இருக்க முடியும். கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. “ஒப்பாரும், மிக்காரும், இல்லையாய மாமாயன் நீங்கள். இந்த நிலையில் நீங்களே என் பிள்ளைகளைப் பொறுக்காவிட்டால் கருணை…
பகவான் கேசவன் இவ்வாறு ஆறுதல் கூறிய பிறகும் கூட அர்ச்சுனனுக்கு பகவானுடைய நெடிய பயங்கர விஸ்வரூபத்தைப் பார்த்த பயம் நீங்கவில்லை. நடுங்கிக் கொண்டே அந்த விஸ்வரூபத்தை மறைத்துக் கொள்ளுமாறு அவர் பகவானை வேண்டுகிறார் என்று கூறுகிறார் சஞ்சயன். பகவானே! உங்களுடைய திருநாமம், குணங்கள், பிரபாவம் இவற்றைக் கீர்த்தனம் செய்வதாலேயே உலகம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது, அன்பு கொள்கிறது. பயந்துபோன அரக்கர்கள் எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றனர். மேலும், சித்தர்களின் கூட்டம் அனைத்தும் வணங்குகிறார்கள். இவை எல்லாம் தான் கண்ட காட்சிகளாக அர்ச்சுனன் வர்ணிக்கிறான். தேவ தேவா! உலக நாயகனே! உலகத்திற்கு இருப்பிட மானவரே! அழியாத சத்,சித், ஆனந்த பரபிரம்மமான பரமாத்மா நீங்களே! ஆகவே, உங்களை வணங்குவது எல்லா பரமபதமாகவும் இருக்கிறீர்கள். “உங்களுடைய ரூபங்கள் எல்லையற்றன எண்ணற்றன. அவற்றின் எல்லையை அடைந்தவர்கள் யாரும் இல்லை” என்கிறார். “அகில உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் நீங்கள் ஊடுருவி இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாத இடமே இல்லை” என்று…
அர்ச்சுனா! துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரனையும், கர்ணனையும் அவ்வாறே என்னால் கொல்லப்பட்ட இன்னும் மற்ற அனேக போர் வீரர்களையும் நீ கொல்வாயாக! பயப்படாதே! போரில் எதிரிகளை ஐயமின்றி வென்று விடுவாய். ஆகவே, போர் புரிவாயாக! என்கிறார். துரோணாச்சாரியார் தனுர் வேதத்திலும் மற்ற அஸ்திர சாஸ்திரங்களை பிரயோகம் செய்வதில் மிகவும் வல்லவர். போர் கலையில் தேர்ச்சி பெற்றவர். யாரும் விழித்த முடியாது என்ற புகழ் அவருக்கு உண்டு. எனவே, அவரை வெற்றி கொள்ள முடியாது என்று அர்ச்சுனன் நினைத்தான். மேலும், அவர் தமக்கு குரு. அவரை வதைப்பது மகா பாவம் என நினைத்தான். பாட்டனாரான பீஷ்மருடைய வீரம் உலகப்புகழ் பெற்றது. பரசுராமர் போன்ற ஜெயிக்கவே முடியாத வீரர்களை அவர் தோற்கடித்திருக்கிறார். மேலும், தமது தந்தை சந்தனுவிடம் ஒரு வரம் பெற்று இருக்கிறார். அதன்படி அவராக விரும்பாத வரை எமனால் கூட அவருக்கு மரணம் ஏற்படாது. எனவே, பீஷ்மரை ஒரு காலும் வெற்றி கொள்ள முடியாது.…
