Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

தேவர்கள், ஒளிமிக்கவர்கள், பூஜிக்கத் தக்கவர்கள், பரம தேகமயமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை மேற்கூறிய சிறப்புகளுடன் அர்ச்சுனன் பார்த்தார் என்கிறான் சஞ்சயன். ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே காலத்தில் உதயமானால் எத்தகைய பிரகாசம் ஏற்படுமோ அந்தப் பிரகாசம் விஸ்வரூப பரமாத்மாவின் பிரகாசத்திற்கு நிகராக ஒரு கால் இருக்கக் கூடுமோ என்கிறார் திருதராஷ்டிர். விராட் விஸ்வரூபம் எடுத்த பகவானின் ஒளிக்கு உவமையே கூற முடியாது. ஆகாயத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் உதித்தாலும் சூரியனின் ஒளிக்கு இணையாக முடியாது. ஒரே நேரத்தில் ஆகாயத்தில் ஆயிரம் கதிரவன் உதித்தாலும் அந்தப் பிரகாசம் கூட விராட் விஸ்வரூபமான பகவானுடைய ஒலிக்க இணையாகாது. காரணம் என்னவென்றால் ஆதவனின் ஒளி அநித்யமானது, பௌதிகமானது, அளவுக் கடங்கியது, விராட் விஸ்வரூபனுடைய ஒளியோ தெய்வீகமானது. நித்தியமானது, உலகியலுக்கு அப்பாற்பட்டது, அளவற்றது என்கிறார் சஞ்சயன். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், மரங்கள் முதலிய போகங்களை அனுபவிப்பன.பூமி,ஆகாயம், சொர்க்கம், பாதாளம் முதலிய அனுபவிக்கும்…

Read More

பின் அர்ச்சுனனுக்கு காட்டிய தெய்வீக விஸ்வரூப காட்சியை வர்ணித்துக் கூறுகிறார் மிகப் பெரிய யோகிகள் கூட அத்தகைய ரூபத்தை காட்ட முடியாது. சாட்சாத் பரமாத்மா மட்டுமே காட்ட முடியும். தூய்மையானதும், எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்ததுமான உலயகிலுக்கு அப்பாற்பட்ட பொருளின் தனிச்சிறப்பை உணர்த்துவது ‘பரமம்’ என்ற சொல்.ஈஸ்வரனுடைய குணங்கள், தெய்வீக சக்தியினால் உண்டான சுயரூபம், ஐஸ்வர்யம் ஆகும். தமக்கு பிரியமான பக்தனான அர்ச்சுனனுக்கு அருள் புரிந்து, தம் அற்புத பிரபாவத்தை உணர்த்துவதற்காகத் தம்முடைய அற்புத யோக சக்தியின் மூலம் அந்த சுயரூபத்தை வெளிப்படுத்தினார். இக்கருத்துக்களைப் பலப்படுத்தவே ‘ரூபம்’ என்ற சொல்லுக்கு ‘பரமம்’ ‘ஐஸ்வர்யம்’ என்ற இரு அடைமொழிகளை கொடுக்கிறார் சஞ்சயன். பலவிதமான எண்ணற்ற முகங்களும், கண்களும் உடையவர் அர்ச்சுனன் பார்த்த பகவானுடைய விஸ்வரூபத்தில் முக்கியமான கண்கள் சந்திரனும், சூரியனும். ஆனால், உள்ளே எண்ணற்ற முகங்களும் நயனங்களும் காணப்பட்டன. இதற்கு முன் காணக் கிடைக்காததும், விசித்திரமான வியப்பை அளிப்பதுமான காட்சி ‘அற்புத தரிசனம்’ எனப்படுகிறது.…

Read More

பர்த்தா! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும், பற்பல விதங்களாகவும், பல நிறங்களாகவும், பல உருவங்களாகவும் கொண்ட வையாகவும் உள்ள தெய்வீகமான உருவங்களைப் பார் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! உலகில் காண்பதற்கரியதும் வியப்பை அளிப்பதுமான பொருள் ‘திவ்யம்’ எனப்படும். என்னுடைய மேனியில் காணப்படுகின்ற வெவ்வேறான எண்ணற்ற வடிவங்கள் அனைத்தையும் பார். அற்புதமான யோக சக்தியின் மூலம் படைக்கப்பட்டவை, உலகியலுக்கு அப்பாற்பட்டவை, ஆச்சரியமானவை, தெய்வீகமானவை என்கிறார் கிருஷ்ணன். பரத குல தோன்றலே அர்ச்சுனா! அதிதியின் புத்திரர்களான பன்னிரண்டு,ஆதித்யா களையும், எட்டு வசூக்களையும்,பதினோரு ருத்திரர்களையும், அசுவினி குமாரர்களையும் இதற்கு முன் கண்டிராத பற்பல ஆச்சரியமான உருவங்களையும் பார் என்கிறார் கிருஷ்ணன். உறக்கத்தை வெற்றி கொண்ட அர்ச்சுனா! இப்பொழுது என்னுடைய உடலில் ஒரே இடத்தில் சகல சராசரங்களோடு கூடிய உலகம் முழுவதையும் மற்றும் எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ அதைப் பார். அதாவது, என்னுடைய குணங்கள், பிரபாவங்கள், இவற்றை விளக்குகின்ற ஏதாவது காட்சியையோ அல்லது…

Read More

11-ஓதுவ தொழியேல் புத்தகம் ஒரு நண்பன் என்று சொல்கிறார்கள் அது எப்படி அம்மா என்று கேட்டான் குமார். பள்ளிப் படிப்பை நல்ல முறையில் முடித்து விட்டேன்.என்று அடுத்து கல்லூரிப் படிப்பு…. அவர்…அவர்கள் எடுக்கும் பாடத்தை வைத்து மூன்று ஆண்டு, நான்கு ஆண்டு என்று படித்து முடித்தவுடன் கற்பது முடிந்துவிட்டது என்று நிறுத்தி விடாமல் எந்த வயதிலும் வாழ்க்கைக்குப் பயன் படும் வகையில் நல்ல நூல்களைத் தேர்வு செய்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் ஒரு சிறந்த நண்பனைப் போன்றது. என்று கூறிய அம்மா…போனை வைத்து விளையாடி நேரத்தை போக்கு வதை விட ஒரு புத்தகம் படித்தால் மனமும் அமைதியாக இருக்கும் நல்ல விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். என்பதை தான் ஔவையார் “ஓதுவ தொழியேல்” என்று கூறுகிறார் என்றார்கள்.

Read More

12-ஔவியம் பேசேல் குமாரும், சிவாவும் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள். குமார் முதல் மார்க்கு வாங்குவான். சிவாவும் 90க்கு மேல் வாங்கும் மாணவன் தான். இருவரும் நண்பர்கள் என்பதால் இருவரின் அம்மாவும் நட்புடன் பழகி வந்தார்கள். வீடுகளுக்கும் போய் வருவார்கள். சிவாவின் அம்மா தனது மகனை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மேலும், குமார் முதல் மார்க் வாங்கி விடுகிறான், என்று அவ்வப்போது தனது மகன் முதல் மார்க் வாங்கவில்லை என்பதை பொறாமை கலந்த வார்த்தைகளால் சொல்லுவார்கள். போகப்… போக முதல் மார்க்கு வாங்குவான் என்று குமார் அம்மா சொன்னாலும், சிவாவின் அம்மா மனம் சமாதானம் ஆகாது, பொறாமை வார்த்தைகளைப் பேசுவார்கள். இதைத்தான் ஔவையார் “ஔவியம் பேசேல்” என்று சொல்கிறார்.

Read More