Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
15- ஙப்போல் வளை ஒரு புறாவிற்கு இறகில் அடிபட்டு விட்டது. அதனால், பறந்து சென்று உணவு உண்ண முடியவில்லை. அதனுடன் இருந்த உறவு புறாக்கள் அலகால் உணவைக் கொண்டு வந்து அடிபட்ட புறாவுக்கு கொடுத்தன. அடிபட்ட புறாவும் உணவை உண்டு மகிழ்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த ஔவைப் பாட்டி இப்படி நமக்குச் சொல்கிறார்… தமிழ் எழுத்துக்களில் ‘ஙகர’ வரிசையில் ‘ங’ எழுத்து பயன்படுகிறது. ஙா, ஙி முதலிய எழுத்துக்களையும் தன்னோடு தழுவிக் கொண்டு இருப்பது போல, உன்னைச் சேர்ந்தவர்களுடன் உறவாக இருக்க வேண்டும் என்கிறார்.
கேசவா! ’மௌநீ’ என்றால் பேசாதவர் என்று தானே பொருள். ஆனால், இங்கே பகவானே எப்பொழுதும் சிந்தித்து இருப்பவர் என்று பொருள் கூறுவதன் உள்நோக்கம் என்ன என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! மனிதன் வாயைத் திறந்து மட்டும் பேசுவதில்லை. மனதாலும் பேசுகிறான். ஓயாமல் பல விசயங்களைச் சிந்திப்பது தான் மனம் பேசுவதாகும். பக்தனுடைய மனதில் பகவானைத் தவிர வேறு நினைவே இருப்பதில்லை. எப்போதும் பகவானுடைய சிந்தனையிலேயே தன்னை மறந்து விடுவான். இது தான் உண்மையான மௌனம். வாய்விட்டுப் பேசாமல் மனதில் மற்ற விசயங்களைச் சிந்திப்பது புறத்தோற்றத்தில் காணப்படும் மௌனம். மனதில் வேறு எண்ணமே இல்லாமல் சொல்லைத் தூயதாகவும், கட்டுப்படுத்தியும் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படும் வெளிப் படையான பயன் தரும். அன்பு கொண்ட பத்தனின் இலக்கணத்தை கூறுகிறார். அவருடைய சொல் இயல்பாகவே.பரிசுத்தமாகவும் கட்டுப்பட்டும் இருக்கும். பக்தன் பேச்சில் மட்டும் மௌனமாக இருக்கிறார் என்று பொருள் அன்று. அவருடைய நா ஓயாமல் பகவத்…
எவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, வெறுப்பதில்லையோ, துயரப்படுவதில்லையோ, எதற்கும்… ஆசைப்படுவதில்லையோ அவன். நல்லதும், தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவன் என்னிடம் பக்தி உள்ளவன். எனக்குப் பிரியமானவன் என்கிறார். என்னுடைய பக்தன் அகில உலகும் பகவானுடைய ரூபம் என நினைக்கிறான். அதனால், எந்த உயிரிடத்தும் வெறுப்புக் கொள்வதில்லை. மகிழ்ச்சியில் ஏற்படும் விகாரம் இல்லாதது போலவே, சோகத்திலும் விகாரம் இருப்பதில்லை. பொதுவாகப் பிரியம் இல்லாதது வந்து சேர்ந்தாலும், பிரியம் உள்ளது பிரிந்தாலும் மனதில் துயரம் உண்டாகும். ஆனால், என்னுடைய பக்தனுக்கு எனது லீலைகளின் ரகசியம் தெரிந்ததால் அவன் எப்பொழுதும் பரமானந்த அனுபவத்திலேயே திளைத்திருப்பான் என்கிறார். எவன் பகைவனிடமும், நண்பனிடமும், மதிப்பிலும், அவமதிப்பிலும், சமபுத்தி உடையவனாக இருப்பவன். தட்ப,வெட்பம், சுக, துக்கம், சமபுத்தியுடன் இருப்பான். தன்னை வெட்ட வந்தவன் ஆனாலும் சரி, தண்ணீர் ஊற்றுபவன் ஆனாலும் சரி இருவருக்கும் வேற்றுமை இன்றி எப்படி மரம் நிழல், பழங்கள், பூக்கள் முதலியவற்றைக் கொடுத்து பணி புரிகிறதோ, அதுபோல… பக்தரும்…
கேசவா! பட்சபாதமற்றவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! நீதிமன்றத்திலும், பஞ்சாயத்திலும் சாட்சி கூறும் போதோ அல்லது பூசலை தீர்க்கும் போதோ இப்படி வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் போதோ.. தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றோ, தனக்கு வேண்டியவன் என்றோ, நண்பன் என்றோ அல்லது தனக்கு வேண்டாதவன் என்ற வெருப்பினாலோ, வேறு எந்த காரணத்தினாலும் பொய் சாட்சி சொல்வது… நீதிக்குப் புறம்பாகத் தீர்ப்புக் கூறுவது, வேறு ஏதாவது நேர்மையற்ற முறையில் ஆதாயம் கருதியோ, பிறருக்குத் துன்பம் விளைவிக்க வேண்டும் என்றோ, எண்ணாதவன் இப்படிப்பட்ட செயலை செய்யாதவன் பாராபட்சம் பார்க்காதவன் ஆவான் என்கிறார். கேசவா! “பகவானுடைய பக்தன், துக்கங்களில் இருந்து விடுதலை பெற்றவன் என்று கருதுவதை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! துயரத்தைத் தரக்கூடிய நிகழ்ச்சி நேரும் போதும்,துயரம் அடையாதவர் என்று பொருள். அதாவது, உடலில் நோய் வந்தாலும், மனைவி, மக்கள் பிரிவு வந்தாலும். செல்வம், வீடு இவற்றை…
எவனிடம் இருந்து எந்த உயிருக்கும் பாதிப்பு இல்லையோ, எவன் எந்த உயிர்கள் மூலம் பாதிப்படைய மாட்டானோ, அவன் மகிழ்ச்சி, பொறாமை, பயம், பாதிப்பு முதலியவற்றில் இருந்து விடுபட்டவனாக இருக்கும் பக்தன் எனக்குப் பிரியமானவன் ஆவான் என்கிறார். சாதாரண மனிதன் துன்பம் கண்டு துவண்டு போய்விடுவான். சாதாரண மனிதன் முதல் யோகி வரை மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால், ஞானியான பக்தன் எங்கும் பகவானைக் காண்கிறான். அவன் எல்லா நிகழ்ச்சிகளையும் பகவானுடைய லீலை என்றே நினைக்கிறான். ஆகவே, அவனுக்குப் பொறாமையோ, பாதிப்போ, பயமோ ஏற்படுவதில்லை என விவரிக்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! என்னை அடைந்துவிட்ட பக்தனுக்கு எந்தப் பொருளாலும் எவ்விதப் பயனும் இருக்காது. ஆகவே, வேறு எதிலும் சிறிது கூட விருப்பமோ, ஆசையோ, முன் பழக்கத்தினால் ஈடுபாடோ இருக்காது பூரணமாகி விடுவதால் எதையும் எதிர்பார்க்காதவன் ஆகிறான். கேசவா! விருப்பமோ, தேவையோ இல்லாமல் போனால் காரியத்திலும் ஈடுபட மாட்டானே! எப்படி செயல் புரியாமல் வாழ்வான் என…
