Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

16-சனி நீராடு சனிக்கிழமை! பள்ளி விடுமுறை. மகனை அழைத்து அவன் உச்சியில் நல்லெண்ணையை தேய்த்து, உடல் முழுவதும், கை, கால் என தேய்த்து விட்ட அம்மாவைப் பார்… ஏன்? எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும்? எனக் கேட்க… அம்மா சொன்னார்கள்! தலை உச்சியில் வெப்பம் தாக்கம் குறையவும், உடல் சூடு குறையவும், உடலில் உள்ள அழுக்கு கிருமிகள் வெளியேறவும் குளிக்கிறோம். சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை நமக்கு வழி வழியாகச் சொல்லிக் கொடுத்ததை ஔவைப் பாட்டியும் ‘சனி நீராடு’ என்று சொல்கிறார் என்றார் அம்மா. தன் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்துடன் குளிக்கச் சென்றான் ரவி.

Read More

பதினான்காவது அத்தியாயம் குண சம்பந்த யோகம் இந்த அத்யாத்தில் சத்வகுணம், ராஜச குணம், தாமச குணம் என்ற முக்கோணங்களின் சுயரூபம், அவற்றின் செயல்பாடு, காரணம், சக்தி, இவற்றை கூறுகிறது. அவை எந்த நிலையில் மனிதனை கட்டுப் படுத்துகிறது. அவற்றில் இருந்து மனிதன் விடுபட்டு பரமாத்மாவாகிய பரமா பதத்தை எவ்விதம் அடைவான். முக்குணத்தையும் கடந்து பரமாத்மாவை அடைந்து விட்ட மனிதனின் இலக்கணம் என்ன? முக்குணங்களைப் பற்றி தனித்தனியாக பிரித்து வர்ணித்து விளக்குகிறார். எனவே, இந்த அத்தியாயத்திற்கு ‘குண சம்மந்த யோகம்’ என்று பெயர். அர்ச்சுனா! எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருள் ஆன பரமேஸ்வரனையே சிந்தித்துக் கொண்டு இருக்கும் எல்லா முனிவர்களும். சம்சாரத்தில் இருந்து விடுபட்டு மிக மேலான சித்தியாகிய பரமாத்மாவை அடைந்திருக்கும் ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும், மிகச்சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன் என்கிறார் கிருஷ்ணன். அதாவது, ஞானம் மிகவும் ஆழ்ந்ததாகவும் எளிதில் புரியாததாகவும் இருப்பதால் இதை அறிவது கடினம்…

Read More

இந்த மனிதன் சராசரங்கள் அனைத்தினுடைய தனித்தனி தன்மை பரமாத்மா ஒருவரிடமே நிலை பெற்றிருப்பதாகவும், அந்த பரமாத்விடம் இருந்தே சகல சராசரங்களும் விரிவடைந்தனவாகவும் காண்கிறானோ அப்பொழுதே சத், சித், ஆனந்தமயமான பரமாத்மாவை அடைகிறான். அர்ச்சுனா! அனாதியான படியாலும், நற்குணமான படியாலும் இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்த போதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை எதிலும் ஒட்டுவதும் இல்லை என்கிறார்.எங்கும் நிறைந்த ஆகாயம் நுண்ணியதாக இருப்பதால் எதிலும் ஒட்டுவ தில்லையோ, அவ்வாறே இவ்வுடலில் எங்கும் நிலை பெற்றிருக்கும் ஆத்மா நிர்குணமாக இருப்பதால் உடலில் குணங்களில் ஒட்டுவதில்லை. எப்படி சூரியன் ஒருவன் இந்த பிரம்மாண்டம் முழுவதிலும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறான் என்கிறார். கேசவா! ஞானக் கண்ணால் அறிவது எவ்வாறு என விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! கனவு காணும் மனிதனுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் விழிப்பு ஏற்பட்டதும் தான் கண்டது கனவு என்பதை உணர்கிறான். உண்மையில் விழிப்பு…

Read More

கேசவா! தன்னைத் தானே அழித்துக் கொள்வது என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! தான் மற்றவர்களிடம் இருந்து வேறாக தனித்திருப்பதாக நினைத்துக் கொள்வான். உடன் பிறக்கும் போது தான் பிறப்பதாகவும் அது அழியும் போது தான் இறப்பதாகவும் நினைக்கிறான். அதனால், பல பிறவிகளில் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறான். இதுதான் தன்னைத் தானே அழித்துக் கொள்வது என்பதாகும். எவன் சமமாக பரமாத்மாவை எங்கும் காண்கிறானோ, அவன் தன்னைப் பரமாத்மாவைத் தவிர வேறாகக் கருதுவதில்லை. உடல்களுடன் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்வதில்லை. ஆகவே, உடல் அழியும்போது தன் அழிவைக் காண்பதில்லை. ஆகையால், அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில்லை. அவன் இருப்பது அழிவற்ற சத், சித், ஆனந்தமயமான பரபிரம்மமான பரமாத்மாவுடன் ஒன்றிய நிலை.ஆகவே, அவன் பிறப்பு இறப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டவன் ஆகிறான் என்கிறார் கிருஷ்ணன். எந்த மனிதன் எல்லா கர்மங்களும், எல்லா விதங்களிலும் பிரகிருதியினால் செய்யப்படுவன வென்றும். மேலும், ஆத்மாவைக் கடவுள்…

Read More

வேறு சிலர் அதாவது மந்த புத்தி உள்ளவர்கள் இவ்வாறு அறியாமல் தத்துவத்தை அறிந்த பெரியோர்களிடம் இருந்து கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்கிறார்கள். கேட்டு அறிந்து கொண்ட உபதேசத்தையே மேலான கதியாகக் கொண்டவர்களும் மரண ரூபமாகிய சம்சாரக் கடலை சந்தேகம் இன்றி கடக்கிறார்கள். மோட்ச நாட்டம் என்பது கற்றவர், கல்லாதவர், மேலோர், கீழோர் என எல்லோருக்கும் நாட்டம் உண்டாவது வியப்பில்லை. கற்றவர் கடைபிடிப்பது முடியும். என்றாலும், கல்லாதவர் கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் வழி நடந்து மோட்சம் அடையலாம். ஜபாலா என்பவளுடைய குமாரன் சத்யகாமன். அவன் பிரம்மத்தை அறியும் விருப்பத்துடன் கௌதம கோத்ரத்தைச் சார்ந்த காரிதுருமதர் என்ற மகரிஷியிடம் சென்றான். அவன் வருகையை புரிந்து கொண்ட மகரிஷி. மிகவும் மெலிந்த பலவீனமான நானூறு பசுக்களைப் பொறுக்கி அவனிடம் ஒப்படைத்து… ‘நல்ல பிள்ளாய்!’ இப்பசுக்களின் பின்னே போ என்று ஆணையிட்டார். குருவின் ஆணையை ஏற்று மிகுந்த நம்பிக்கைடனும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நானூறு பசுக்களையும்…

Read More

கேசவா! பரமாத்மா எங்கும் நிறைந்தவர். அப்படி இருக்க இதயத்தில் சிறப்பாக விளங்குவது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஆதவன் உடைய ஒளி அனைத்து இடங்களிலும் சமமாகப் பரவினாலும், கண்ணாடியில் நன்றாக பிரதிபலிக்கின்றது. பூதக் கண்ணாடியில் நெருப்பு கூட உண்டாகின்றது. மற்ற பொருட்களில் அப்படி ஏற்படுவதில்லை அதுபோல… பரமாத்மா எங்கும் சமமாக நிறைந்து இருந்தாலும் இதயங்களில் தான் அவருடைய சிறப்பான வெளிப்பாடு தெரிகிறது. பரமாத்மாவை உணரும் இடம் இதயம். ஞானியின் இதயத்தில் அவர் நேராக வெளிப்படுகிறார். இதை விளக்குவதற்காகவே இங்கு அனைவருடைய இதயங்களிலும் சிறப்பாக வீற்றிருக்கிறார் என்று கூறுகிறார் கிருஷ்ணன். இவ்விதம் இந்த மனித உடம்பின் ரூபமும், ஞானமும் அறிய வேண்டிய பரமாத்மா ரூபமும் சுருக்கமாக சொல்லப் பட்டிருக்கிறது. என்னுடைய பக்தன் இதை தத்வரீதியாக அறிந்து என்னுடைய சுயரூபத்தை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன். மனிதனுடைய உயிர் எந்த உடம்பில் இருப்பினும் அது உண்மையில் பரமாத்மா தான் சாட்சியாக இருக்கிறார்.…

Read More

பிரம்மம் இருக்கிறது என்று நம்பப்படுவது ‘சத்’ என்றும். இல்லை என்பது ‘அசத்’ என்றும் கூறப்படுகிறது. ஆனால், பிரம்மம் இல்லாத இடம் என்று எதையும் சொல்ல முடியாது. பிரம்மம் இருப்பதை நம்புவதற்கு ‘சத்’ என்றும். இல்லை என்று சொல்பவர்களுக்கு ‘அசத்’தாக இருந்தாலும் அங்கும் நான் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன். மேலும், எல்லா புலன் நுகர் பொருள்களையும், அறிவது ஆனால், உண்மையில் எல்லா புலன்களும் அற்றது. ஒன்றிலும் பற்றற்றது. ஆனாலும், எல்லாவற்றையும் தாங்குவது, காப்பது. குணம் அற்றதாக இருந்தாலும், குணங்களை அனுபவிப்பது. இதுதான் பரப்பிரம்மமான பரமாத்மாவின் உலகியலுக்கு அப்பாற்பட்ட தன்மையாவும். மனித குணத்தில் இருந்து பற்றுடன் இருப்பது. இறை குணத்தில் பற்று இல்லாமல் இருப்பதும் தள்ளி இருப்பதாகும். சராசரமான எல்லா பிராணிகளின் உடைய உள்ளும், புறமும் பரப்பிரம்மமான பரமாத்மா கடலில் கிடக்கின்ற பனிக்கட்டியின் உள்ளும், புறமும் எங்கும் நீர் நிறைந்திருப்பது போல நிறைந்து இருக்கிறார். அசைவன, அசையாதனவற்றில் வடிவிலும் கூட பரப்பிரம்மமே நிறைந்திருக்கிறது. நீர்தான்…

Read More