அர்ச்சுனா! பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லை அந்த அவயம் பிரகாசமான பரம பதத்திற்கு சூரியன், சந்திரன், அக்னி தேவன் மூவரும் ஒளி தருவதில்லை. அது என்னுடைய மேலான இடமாகும். மாயையைக் கடந்த என்னுடைய பரமபதம் என் சுயரூபம். அதை அடைவதே பரமகதியாகும். அர்ச்சுனா! ஆதவன் சுடுவதில்லை, காற்று வீசுவதில்லை, நிலா ஒளி வீசுவதில்லை, நட்சத்திரங்கள் மின்னுவதில்லை, நெருப்பு எரிப்பதில்லை. எப்பொழுதும் ஆனந்தமயமானது, பரமானந்த மயமானது, அமைதியானது, பழமையானது, எப்பொழுதும் மங்கலமயமானது எல்லோரும் விரும்பத்தக்க இடமே பரமபதம் என்கிறார் கிருஷ்ணன். மனித உடலில் என்றும் உள்ள ஆத்மா என்னுடைய அம்சமே. அதுவே, பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்க்கிறது. கேசவா! ‘மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்ப்பது’ என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஐந்து அறிவுப் புலன்களும், மனமும் ஆக ஆறும் தான் எல்லா போகங்களையும் அனுபவிப்பதில் முக்கியமானது. ஆத்மா ஒரு உடலில் இருந்து…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
ஆதியும், அந்தமும் தொடர்ச்சியாகத் தோன்றித் தோன்றி மறையும் இந்தப் பரம்பரை எப்போது தொடங்கியது எதுவரை தொடரும் என்பதும் தெரியாது. இப்படி இருக்கும் போது ஒரு கணம் இருப்பது போல் தெரிவது, மறுக்கணம் இருக்காது. ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கும். சம்சார மரத்தின் ஆதி, அந்தம், இருப்பு மூன்றும் புலப்படாதவை என்கிறார் கிருஷ்ணன். ஆகையால் சம்சாரத்தைப் பற்றிச் சிந்திப்பதைத் துறந்து அதற்கு ஓய்வு கொடுத்து அகங்காரம், மமகாரம், வாசனை, முன்வினை இவற்றை வைராக்கியம் என்னும் கோடாரியால் வேரோடு வெட்டி எறிந்து விடு என்கிறார் கிருஷ்ணன். பரமேஸ்வரனிடம் சென்ற மனிதன் மீண்டும் சம்சாரத்திற்குத் திரும்பி வருவதில்லை. அழியாத வேராகிய பரமேஸ்வரனை சரணடைந்து தியானிக்க வேண்டும் என்கிறார். மேலும், தற்பெருமை, மோகம் அகன்றவர்கள் பற்று என்ற குறைபாட்டை வென்றவர்கள் பரமாத்மா சுய ரூபத்தில் என்றும் நிலை பெற்றவர்கள். ஆசைகளை முழுமையாக அழித்துக் கொண்டவர்கள். இன்பம், துன்பம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்கள் ஆகிய ஞானிகள் அழிவற்ற…
17-ஞயம் படவுரை பக்கத்து வீட்டு பாட்டு வீடு வீடாகப் போய் உட்கார்ந்து வேண்டாத பேச்சுக்களைப் பேசி நேரத்தை செலவு செய்வார்கள். இதனால், வீட்டில் உள்ள செய்திகளை பக்கத்து வீட்டிலும், பக்கத்து வீட்டு விசயங்களை அடுத்தவர்களுக்கும் சொல்வதால்… சில நேரங்களில் வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டும். சண்டை போட்டுக் கொண்டும் இருக்கும் அந்தப் பாட்டியிடம்… ஏன் பாட்டு! வீட்டுப் பிரச்சனைகளை வெளியில் சொல்வதால் தானே உங்க வீட்டில் சண்டை வருகிறது. இனி சொல்லாதீர்கள், அமைதியாக இருங்கள். வயதான காலத்தில் நல்லபடியாக இருக்க அதுதான் உதவும் என்று பக்கத்து வீட்டு மணி சொல்வதைக் கேட்ட பாட்டி. ஆமம் கண்ணு! என் மேலேயும் தப்பு இருக்கிறது. இனி வீட்டு விவரங்களைப் பேச மாட்டேன் என்றார்கள் அந்தப் பாட்டி. இனிமையாகப் பேசிய மணி. பாட்டியின் செயலைச் சுட்டிக்காட்டி உணர வைத்தார்கள். இதைத்தான் ஔவையார் பாட்டி ‘ஞயம் படவுரை’ என்கிறார்.
பதினைந்தாவது அத்தியாயம் புருசோத்தம யோகம் இந்த அத்தியாயத்தில் அகில பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, தம்முன் அடக்கி ஒடுக்கிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்த பரமேஸ்வரனே சரண்புகத் தக்கவர். அவர் தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும், தோழனாகவும், சகலமும் ஆக இருக்கும் பரமாத்மாவை புருசோத்தமன் என்று ஏன் அழைக்க வேண்டும் அதன் சிறப்பு என்ன, அவரை எப்படி அடையலாம் என்ற விபரங்கள் நன்கு விளக்கப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு ‘புருசோத்தம யோகம்’ என்று பெயர். அர்ச்சுனா! ஒரு அரச மரத்தை வைத்து கூறுகிறேன் கேள். பரமேஸ்வரன் மரத்தின் வேராக உள்ளவரை அது அழியாது. நடுமரமாக பிரம்ம தேவனும், கிளையாக பிரபஞ்சமும், இலைகளாக வேதங்களும் இருப்பதை தத்துவ ரீதியாக எவன் அறிகிறானோ, அவனே வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆவார். பிரபஞ்சம் என்ற அரச மரத்தின் கிளைகள் முக்கணங்கள், நீரினால் வளர்ந்து புலன் நுகர் பொருட்களாகிய தளிர்களுடன் கூடி தேவ, மனித, விலங்கு முதலிய பிறவி உருவாகிறது. மனிதப்…
கேசவா! ‘பிரம்மத்தை அடைய தகுதி பெறுகிறான்’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். குணாதீீத நிலையை அடைந்தவன் பிரம்மத்தை அடையவும் தகுதி பெறுகிறான். குணம் அற்ற, உருவமற்ற சத்,சித், ஆனந்தமயமான பூரண பிரம்மத்தை அடைகிறான். பிரம்மத்தை அடைந்தவனுக்கு அடைய வேண்டியது வேறு ஒன்றும் இல்லை. பிரம்மத்துடன் இரண்டறக் கலக்கும் தகுதியைப் பெறுகிறான். உடனே, அவனுக்கு பிரம்ம நிலை கிடைத்து விடுகிறது. அர்ச்சுனா! அழிவற்றதான பரபிரம்மத்திற்கும், இறவா நிலைக்கும் எப்பொழுதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடம் நானே என்கிறார் கிருஷ்ணன். கேசவா! ‘பிரம்மத்திற்கு நானே உறைவிடம்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பிரம்ம சகுணமான பரமேஸ்வரன் ஆகிய என்னைத் தவிர வேறல்ல பிரம்மத்தை அடைவது என்னை அடைவதாகும். சிவபெருமான், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் முதலிய பகவானுடைய சகுணமான உருவமுள்ள விஸ்வரூபமும் அகில உலகமும் பகவானுடைய விராட் ரூபமே என்கிறார் கிருஷ்ணன். ‘தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் வேறு பயனைப்…
கேசவா! பெருமை, சிறுமை, இவற்றில் சமமாக இருப்பது எவ்வாறு,என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! மானம், அவமானம் எல்லாம் உடலைத்தான் சாரும். உடலில் அபிமானம் கொண்டு உலகியலில் பழகுபவன் தான் பெருமை கிடைத்தால் விருப்பமும், சிறுமை நேர்ந்தால் வெறுப்பும் கொள்கிறான். அதனால், பெருமையில் மகிழ்ச்சியும், சிறுமையில் வருத்தமும் ஏற்படுகிறது. அதனால், பெருமை படுத்துப்பவனிடம் அன்பும், சிறுமை படுத்துபவனிடம் பகையும் உண்டாகின்றது. குணதீதனுக்கு எல்லாம் சமமாக ஏற்றுக் கொள்வதால் பெருமை, சிறுமை செயல்கள் உட்பட அனைத்தும் கனவு போல மாயை. எனவே, விருப்பு வெறுப்பு, மகிழ்ச்சி, வருத்தம் ஏற்படுவதில்லை. இதுவே, பெருமை, சிறுமை சமமாக ஏற்றுக் கொள்வதாகும் என்கிறார் கிருஷ்ணன். உடல், மனம், புத்தி, புலன்களால் சாஸ்திரங்களில் கூறப்பட்ட கடமைகளை, பிராப்தத்தை ஒட்டி உலகத்திற்கு வழிகாட்டும் முறையில் அதாவது உலக மக்களைத் தீய வழியில் இருந்து திருப்பி நல்ல வழியில் ஈடுபடுத்துவது என்ற நல்ல குறிக்கோளுடன் செய்வான். ஆனால், அந்தக் கர்மங்களில் சிறிது…
சத்வ குணம் மேலாங்கும்போது இறப்பவர்கள், செல்லும் உலகம் மாசு அற்றதாக இருக்கும். ராஜச குணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைபவன், கடமைகளில் பற்றுள்ள மனிதர்கள் இடையே பிறக்கிறான். தாமச குளத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது இறப்பவன், புழு, பூச்சி, விலங்கு என அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான். சிறந்த செயலின் பயனே சாத்வீகமானது. சுகம், ஞானம், வைராக்கியம் கொண்டது தூய்மையானது. ராஜச செயலின் பயன் துயரமானது. தாமச செயலின் பயன் அறியாமை ஆகும் என்கிறார். முக்குணங்களைத் தவிர வேறு ஒருவனைக் கடவுள் என்று பார்க்காதவன், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட சத்,சித், ஆனந்த மயமான பரமாத்மாவான என்னை தத்துவ ரீதியாக அறிகிறானோ அப்பொழுது அவன் என் சுய ரூபத்தை அடைகிறான். மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு இவற்றில் இருந்து பிற எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன். கேசவா! இந்த மூன்று குணங்களையும் கடந்த…
அர்ச்சுனா! உடலிலும், உள்ளத்திலும், சக்தியின் ஒளி வெளிப்பாடும், விவேக ஞானமும் உண்டாகிறதோ, அப்போதே சத்வ குணம் மேலோங்கி உள்ளது என்பதை அறிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன். மேலும், சத்வ குணத்தின் உதவியுடன் மனிதன் மோட்சத்தை அடைய முடியும். மற்ற பிறவிகளில் இந்த வாய்ப்புகள் கிடையாது. எனவே, இந்த வாய்ப்பை அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் தன் மனதை வழிபாடு, தியானம் இவற்றில் ஈடுபடுத்தி உயர்வு கொள்ள வேண்டும். இல்லை என்றால், ராஜச, தாமச குணங்கள் அழுத்தி அதன் செயல்பாட்டைத் தொடங்கி விடும். விவேகம் விழித்து இருப்பது தான் ‘ஞானம்’ உண்டாவதாகம். பிரகாசமும், விவேக ஞானமும், உண்டாகும் போது இயல்பாகவே உலகியலில் வைராக்கியமும், மனதில் ஓய்வும் உண்டாகி வெள்ளம் போல சுகமும், அமைதியும் பெருகிவரும். விருப்பு, வெறுப்பு, துக்கம், சோகம், கவலை,பயணம், சஞ்சலம், தூக்கம், சோம்பல், கவனமின்மை இவைகள் இல்லாதது போல் ஆகிவிடும் என்கிறார். அர்ச்சுனா! ராஜச குணம் அதிகமாகும் போது பேராசை, உலகியல் கர்மங்களில்…
கேசவா!கர்மங்களின் சங்கம் என்றால் என்ன? என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! இந்தக் கர்மங்களை நான் செய்கிறேன். கர்மங்களுக்கு நான் கடவுள் என்ற அபிமானம் ஏற்பட்டு… இதைச் செய்வதால் இந்தப் பயன் கிடைக்கும் என்று கருதி கர்மங்களுடனும், அவற்றின் பயன்களுடனும் தொடர்பை நிலை நிறுத்திக் கொள்வது கர்ம சங்கம் ஆகும். இதன் மூலம் ஆத்மா பிறப்பு, இறப்பு வடிவான சம்சாரத்தில் சிக்க வைக்கிறது. கர்ம சங்கத்தின் மூலம் உடல் உள்ள ஆத்மாவிற்கு பந்தம் ஏற்படுகிறது என்கிறார் கிருஷ்ணன். 3- அர்ச்சுனா! உடற் பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடிய தாமச குணம் அஞ்ஞானத்தில் இருந்து உண்டானதாக அறிந்து கொள். வீணான செயல்களில் ஈடுபடுத்துவது சோம்பல், தூக்கம், இவற்றால் கட்டப்படுகிறது. உள்ளத்திலும் புலன்களிலும் அறியும் சக்தியை இழக்கச் செய்து மயக்கத்தை உண்டாக்குவதையே தாமசகுணம். உடல் பற்றுடைய அனைவரையும் மயக்கும் தன்மை உடையது. புலன்களும், உள்ளமும் வீண் செயல்களில் ஈடுபடுவதும், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் அவற்றை…
பெரிய படைப்பின் ஆரம்பத்தில் தத்தம் சம்சாரங்களுடன் உயிர் உள்ள சமுதாயம் ஏற்படுகிறது. அதனால், அது தான் சேர்தல் தொகுப்பின் கர்ப்பத்தை கர்ப்பப்பையில் சேர்ப்பதாகும். தத்தம் கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதலிய பற்பல பிறவிகள் உற்பத்தியாகின்றன. உற்பத்தி மகா பிரளயத்திற்குப் பிறகு மகா பிறப்பின் ஆரம்பத்தில் மேலே சொன்ன இணைப்பில் இருந்து முதன் முதலாக கிரண்யகர்பனும், அதன் பின் மற்ற சராசரங்களும் உண்டாகின்றன. அர்ச்சுனா! பலவிதமான அனைத்துப் பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள், உடல்கள் கொண்ட உயிர்கள் உண்டாகின்றனவோ, அவை எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான கருத்தரிக்கும் தாயும் நானே, விதை அளிக்கும் தந்தையும் நானே என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! சத்வ குணம், ராஜச குணம், தாமச குணம் இம்மூன்று குணங்களும் வெவ்வேறு ஆனவை. இவற்றை அழிவற்ற ஆத்மா அழியக்கூடிய உடலில் கட்டுகின்றன. அதாவது, உடலின் போகப் பொருட்களிலும், மமகாரம், பற்று, அபிமானம் இவற்றை உண்டாக்குவதே முக்குணங்கள். இதுவே, உடலைக்…
