Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

20-தந்தை தாய்பேண் தாத்தா படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்கு படுத்துக் கொண்டே இருந்ததால் புண் வந்துவிட்டது. பேரன், மகன், மருமகள் என எல்லோரும் பார்த்துக் கொண்டார்கள். வசதி எல்லாம் இல்லாதவர்கள் தான். ஆனால் அந்த குடும்பத்தில் அன்பு நிறைந்திருந்தது. படுத்து இருந்த நிலையிலும் கவனித்து பார்த்துக் கொண்ட பேரனை கண்கலங்க பார்க்கிறார் தாத்தா. பேச முடியாத நிலையிலும். கைகளை உயர்த்தி நல்லா இருக்க வேண்டும் என்று ஆசி வழங்குகிறார்.மகன், மருமகள் என எல்லோரையும் வாழ்த்துகிறார். இந்த அன்பால் தானே உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. தாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்து. குழந்தையை வலி பொறுத்து பெற்று தன் உதிரத்தை பாலாக்கி கொடுத்து வளர்க்கிறாள். வளரும் குழந்தையை தன் தோள்களில் சுமந்து தந்தை இந்த உலகத்தை காட்டுகிறார். தங்களை விட தங்கள் குழந்தை படிப்பிலும், வேலையிலும், மற்றவர் முன்னிலையிலும் உயர வேண்டும் என தாயும், தந்தையும் பேணி வளர்க்கிறார்கள். திருமண வயது வந்தவுடன்…

Read More

தானம் செய்வது தம் கடமை எனக் கருதி எந்த தானம் உரிய இடத்திலும் உரிய காலத்திலும் தகுதியானவர்களுக்கும் பிரதி உபகாரம் செய்யாதவர்க்கு தன்னலம் இன்றி கொடுக்கப்படுவது சாத்விகமாகும். உதவி செய்தவர்க்கு பதில் உதவி செய்து அதை தீர்த்து விட முடியாது. அவரை அழுத்திக் கொண்டே இருக்கும். ஸ்ரீ ராம சரித்திரத்தில் இராமபிரான் ஹனுமானிடம் கூறுகிறார். வானரத் தோழனே கேள்! உன்னைப் போல உபகாரம் செய்தவன். தேவனோ, மனிதனோ, முனிவரோ, உடல் படைத்த வேறு எவருமே இல்லை. “உனக்கு என்ன பதில் உதவி செய்துவிட முடியும், என் மனது கூட உன் முன்னே நிற்க முடியாது” என்கிறார் ராமன். செய் நன்றியை வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் உபகாரம் தானம் ஆகாது. தயங்காமல் உபகாரம் செய்ய வேண்டும். தயங்குபவர் செய்நன்றி கொன்றவர் ஆவார். தானம் செய்பவர் தானம் பெறுபவரிடம் இருந்து சிறிது கூட பதிலுதவி எதிர்பார்க்காமல் தன்னலம் கருதாமல் அளிக்க வேண்டும். அதுவே, சாத்விக தானமாகும்…

Read More

மேலும், விவரிக்கிறார். பிறர் மனம் புண்படாமல் கோள் சொல்லுதல், கடு கடுப்பாக பேசாமல், கடுமையாக குத்திக் காட்டாமல், அலட்சியப்படுத்தாமல், அவமதிப்பு முதலிய குறைகள் இன்றி எவ்விதத்திலும் அன்பாகவும், இனிமையாகவும், நேர்மையாகவும்,அமைதியாகவும் அமையும் சொல் பிரியம் ஆகும். இம்சை, பொறாமை, பகை கொள்ளாமல் இவற்றிற்கு அடிபணியாமல், அன்பு, கனிவு, மங்கலம் ஆகியன நிறைந்ததுமான சொல் இதம் ஆகும். மனதைப் புண்படுத்தாத சாத்தியமான பிரியமான, இதமான சொற்களும், சாஸ்திரங்களில் கூறப்பட்ட மாசற்ற பேச்சும் சொல்வழித் தவம் ஆகும். மேற்குறித்த செயல்களுடன் அவர் அவருக்கு இயன்றவாறு வேதங்கள், மந்திரங்கள், புராணங்கள், கீர்த்தனைகள் பாடுவது, சொல்வது அனைத்தும் வாக்குடன் தொடர்பு கொண்டவை. வாக்கின் மாசுகளை நீக்கி, மனதையும், பேச்சையும், புனிதமாக்கும் தன்மை வாக்கினால் செய்யக்கூடிய தவம் எனப்படும் என்கிறார் கிருஷ்ணன். மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, பகவானை இடைவிடாது சிந்தித்து இருக்கின்ற இயல்பு, மனவடக்கம், உள்ளத் தூய்மை இவை எல்லாம் மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படும். மனதின் சஞ்சலத்தை…

Read More

மனிதர்களின் குணங்களுக்கு ஏற்றவாறு அவரவருக்கு அந்தந்த குணம் அமைந்த உணவு பிடிக்கும்.ஆகவே, மனித குணத்தைச் சொல்லும் போது உணவைப் பற்றி சொல்லி அதில் இருந்து குணங்களையும் கூற முடியும் என்கிறார் கிருஷ்ணன். மேலும், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூடு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட எரிச்சல் உண்டு பண்ணக் கூடிய மற்றும் துன்பம், கவலை, நோய் உண்டாக்கக் கூடிய உணவு வகைகள் ராஜச குணம் உடையவர்களின் விருப்பமானவை. அதாவது, உண்ணும் போது தொண்டையை வருத்தக் கூடியவை நாக்கு, கடைவாய் இவற்றில் எரிச்சல், பற்களுக்கு கூச்சம், மெல்லும் போது வலி, கண்களில் நீர், மூக்கில் நீர், விக்கல் முதலியன துக்கங்களை உண்டு பண்ணக் கூடியவை. உண்ட பிறகு ஏன் ஒன்றும் என்று வருந்துவது துன்பம். உண்டதனால் வயிற்றில் ஏற்பட்ட வலி நோய்களாகும். இவற்றை உண்பதால் துன்பம், கவலை, நோய் உண்டாவதால் இவற்றை விலக்க வேண்டும் என்கிறார். அரைவேக்காடு உணவு, ரசமற்ற, துர்நாற்றம்…

Read More

அர்ச்சுனா! உணவும் எல்லோருக்கும் தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு மூன்று வகைகளில் பிரித்ததாக உள்ளது. அவ்வாறே, யாகமும், தவமும், தானமும் மூன்று வகைப்படும், அவற்றின் தனித்தன்மை கொண்ட இந்த வேறுபாட்டை சொல்கிறேன் நீ கேட்டு தெரிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! உணவைப் பற்றிக் கேட்காவிட்டாலும், கிருஷ்ணனே சொல்கிறார். மனிதன் எவ்வகை உணவு உண்கிறானோ அதற்கேற்றபடி அவன் உள்ளப் பாங்கு அமையும். உள்ளத்திற்குத் தக்கபடி சிரத்தை அமையும். உணவு சுத்தமாக இருந்தால் தான் உள்ளப் பாங்கு சுத்தமாக இருக்கும் என்கிறார். உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் எண்ணங்கள், மனப்பாங்கு, சிரத்தை முதலிய குணங்களும், செயல்களும் சுத்தமாக அமையும் அதனால்தான் இங்கு உணவைப் பற்றிக் கூறுவது அவசியம் ஆகிறது. எல்லோரும் பூசை, யாகம் செய்வதில்லை. ஆனால், எல்லோருமே உணவு உண்கிறார்கள். உணவு உண்ணும் விதத்தில் மூன்று வகை உண்டு அவற்றில் இருந்து அவர்களை தெரிந்து கொள்ளலாம். சாத்விக, ராஜச, தாமச குணம் போல சாத்விக…

Read More

கேசவா! இவர்களுக்கு எந்தவித கதி ஏற்படுகிறது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா!’மனம் போல் மாங்கல்யம்’ என்பது பழமொழி, தேவதைகளைப் பூசை செய்பவர்கள் தேவலோகத்தை அடைவார்கள். ராகு, கேது இவர்களை வழிபடுபவர்கள், பூத கணங்களை வழி படுபவர்கள் அவரவர் வழிபடும் இடங்களுக்கே செல்கின்றனர் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! எந்த மனிதர்கள் சாஸ்திர விதிமுறைகளை விடுத்து, மனம் போனபடி, கொடிய தவம் செய்கிறார்களோ, அவர்கள் அகங்காரம், பேராசை, விருப்பம் மற்றும் உடல் வலிமை இவற்றின் மீது கர்வமும் கொள்கிறார்கள். கேசவா!இவர்கள் கர்வம் உள்ளவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! அவர்களுக்கு உலகியல் போகங்களில் பேராசை இருக்கும். அவர்களின் உள்ளத்தில் பலவித போகங்களைப் பற்றிய ஆசை இடைவிடாது வளர்ந்து கொண்டே இருக்கும். “ நாம் விரும்பியதை அடைந்தே தீருவோம். நமக்கு உடல் வலிமை உள்ளது. நமது விருப்பத்திற்கு தடை போட எந்த சக்தியால் முடியும்” என்று திமிர் பிடித்து அலைவார்கள்.…

Read More

கேசவா! சாஸ்திர விதிமுறைகளை எவர்கள் மீறி சிரத்தையால் உந்தப் பட்டு தெய்வங்களை வழிபடுகிறவர்கள் நிலையைக் கூறுங்கள். சத்வ குணமும், ராஜச குணமும், இல்லாத தாமச குணம் உடையவர் நிலையையும் விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! முன்பு சாஸ்திர விதிமுறைகளை அலட்சியம் செய்து முறை மீறுவது பற்றிக் கூறினேன். இப்போது சாஸ்திர முறைகளை அறியாத காரணத்தால் முறை மீறுவது பற்றிக் கூறுகிறேன். இதுவே, இவற்றுக்கு உள்ள வேறுபாடு ஆகும். அதாவது, போதிய நேரமின்மையால் பாடுபட முடியாததால், சாஸ்திர பயிற்சியின் குறைபாட்டினால் சாஸ்திர முறைகளில் முழுமையான ஞானம் இல்லை. இந்த அறியாமை காரணத்தினால் சாஸ்திர முறைகளை விட்டு விடுகிறார்கள். தான் தோன்றித் தனமாகத் தனக்கு நல்லது என்று தோன்றுவதை செய்கிறான். இவனுக்கு சிரத்தை இருக்கிறது. ஈடுபாடு இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்க முடியாது என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! உலகில் ஐந்து விதமான மனிதர்கள் உள்ளனர். 1-சாஸ்திர முறைகளை கடைபிடிப்பவர்கள் சிரத்தை உடையவர்கள். 2-சாஸ்திர முறைகளை…

Read More

கேசவா! ‘செய்யத்தக்கது, செய்யத் தகாதது என்ற தீர்மானம் செய்வதற்கு சாஸ்திரம் தான் சான்று’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற ஒழுங்கு முறைகள் வேதங்களிலும், வேதங்களின் ஆதாரத்தில் தோன்றிய புராண, இதிகாசங்களிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்றன. ஆகவே, இந்த விசயத்தில் மனிதன் தன் மனம் போனபடி நடக்காமல் சாஸ்திரங்களின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் விதித்தவற்றைச் செய்தே தீர வேண்டும். தடை செய்தவற்றைச் செய்யக்கூடாது என்கிறார். கேசவா! ‘நீ சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கடமையை ஆற்றக் கடவாய்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! சாஸ்திரங்களில் கூறப்பட்டதை மதித்து கடமைகளை முறைப்படி ஆற்ற வேண்டும். பற்று அற்ற நிலையில் செய்ய வேண்டும். தடுக்கப்பட்டவற்றைச் செய்யக்கூடாது. இவ்விதம் கடைபிடித்தால் என்னை அடைய உதவும். ஆகவேதான், கடமையை சாஸ்திர முறைப்படி செய் என்கிறார் கிருஷ்ணன். பதினாறாவது அத்தியாயம் நிறைவுற்றது. பதினேழாவது அத்தியாயம்.…

Read More

19-இணக்கமறிந் திணங்கு ஒரு மரத்தின் கிளை, பூ, காய், கனி இப்படி எல்லாமே வெளியில் தெரியும். அதைப் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த மரத்துக்கு ஆதாரமான வேர் பகுதி பூமியில் இருந்து மரம் வளர உதவிக் கொண்டு இருக்கிறது. அது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அது போல் தான் நட்பும். வெளித் தோற்றத்தை வைத்து அவர்கள் சொல்லும் சொல்லுக்கு மயங்கி தீய நட்புடன் சேர்ந்து வீணாகும் நட்பை விலக்கி விட வேண்டும். வேர் போன்ற நட்பை தேர்ந்து எடுக்கும் போது அவர்கள் நம் இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நம்மை தாங்கி நம்முடன் இருப்பார்கள். என்பதை ஔவையார் “இணக்கமறிந் திணங்கு”என்று கூறிச் சென்று இருக்கிறார்.

Read More

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. என்று திருமந்திரம் கூறுகிறது. நமது தமிழர் பண்பாடு குருவைப் போற்றுவது. கல்வி கொடுத்தவன் வித்தியா குரு தீக்கை அளிப்பவன் தீட்சா குரு ஞானம் அளிப்பவன் ஞான குரு தீட்சா ஒரு தனிப்பட்டவருக்கு ஞானம் அளிப்பவர். ஞானகுருமார் சந்ததிகளுக்கே ஞானம் அளிப்பவர்கள். அவர்கள் உலக குரு என்றே சொல்லப் படுபவர்கள். சிவபெருமானின் நெற்றியில் காணப்படும் ஞானக்கண்களை சிவபெருமாள் திறந்த போது ஆறு அருட்பெருஞ்ஜோதி வெளிப்பட அதன் வெப்பம் தாங்காமல் தேவர்கள் எல்லோரும் திசைக்கு ஒருவராக ஓடினார்கள். சரவணப் பொய்கையில் இருந்த 1008 இதழ்கள் கொண்ட தாமரையில் வந்து இறங்கிய அந்த ஜோதிப் பிழம்பு ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறு குழந்தைகளாக முருகப் பெருமான் அவதாரம் கொண்டார்.ஆறுமுகங்களும் குணங்களும்… 1-முற்றறிவு -ஞானம் 2-இன்பம்- ஐசுவர்யம் 3-ஆற்றல் -அழகு 4-தன்வயமுடைமை- வீரியம்…

Read More