Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

இவ்விதம் பக்தன் துயரங்களையும், தளைகளையும் அறவே அடித்துக் கொண்டு போய்விடும். பின் துயரங்கள், தளைகள் அனைத்தும் நீங்கப் பெற்று எப்பொழுதும் பரமானந்தத்தைப் பெறுகிறான். ஆனந்த மயமான பூரண பிரம்மமான பரமாத்மாவை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! மறை பொருளுக்கு எல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்கு கூறப்பட்டது. இப்பொழுது நீ ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய் என்கிறார். கேசவா! மறை பொருளுக்கு எல்லாம் மறைபொருள் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! உலகியலிலோ, சாஸ்திரங்களிலோ எத்தனையோ மறைத்து போற்றப்பட வேண்டிய ரகசியங்கள் இருக்கலாம். அவை, எல்லாவற்றிலும் பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள் சுயரூபம் இவற்றின் உண்மை அறிவைப் புகட்டக் கூடிய உபதேசம். மேலும், சிறப்பாக மறைத்துப் போற்றப்பட வேண்டியது ஆகும். ஆகவே, இவ்வுபதேசத்தின் பெருமையையும், தகுதியற்றவர்களுக்கு இந்த உபதேசத்தை வெளியிடக்கூடாது. என்பதையும் உணர்த்துவதற்காக “மறைபொருளுக்கு எல்லாம் மறைபொருளான ஞானம்” என்ற அடைமொழி…

Read More

கேசவா! நான் தங்கள் பக்தன். என் பக்தன் அழிய மாட்டான், வீழ்ச்சி அடைய மாட்டான் என்று கூறினீர்கள். இப்போது நீ அழிவாய், வீழ்ச்சி அடைவாய் என்கிறீர்கள். இம் முரண்பாட்டிற்கு என்ன விளக்கம் கூறப்போகிறீர்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஒரு கால் என்ற சொல்லை உபயோகப்படுத்தி இருக்கிறேன். எனது பக்தனுக்கு ஒரு காலும் வீழ்ச்சி ஏற்படாது என்பது முற்றிலும் உண்மை. அர்ச்சுனன் எனது பக்தன் என்பதும் உண்மை.ஆகவே, அவர் பகவானுடைய சொல்லைக் கேட்காமலோ, ஆணையைக் கடைப்பிடிக்காமலோ ஒருபோதும் இருக்க மாட்டார். ஆனால், அகங்காரத்துக்கு கட்டுப்பட்டு பகவானுடைய ஆணையைப் பொருட்படுத்தாவிட்டால் அவரை பகவானுடைய பக்தன் என்று கருத இயலாது. எனவே, வீழ்ச்சி ஏற்படும் என எச்சரிக்கிறார் கிருஷ்ணன். எந்த அகங்காரத்தில் வசப்பட்டு நீ “நான் யுத்தம் செய்ய மாட்டேன்” என்று நினைக்கிறாயோ உன்னுடைய இந்தத் தீர்மானம் பொய்யானது. ஏனெனில் உன்னுடைய இயல்பு வலுவில் போரில் ஈடுபடுத்தும். நீ யுத்தம் செய்ய மாட்டேன் என்பது வெறும்…

Read More

பக்தி பிரதானமான கர்ம யோகம் செய்பவனின் உள்ளத்து உணர்ச்சி கண்டு கருணை கூர்ந்து அவனுக்கு அதிசயமான அருள்பாலித்து பகவான் தாமே அவனுக்குப் பரா பக்திரூபமான புத்தியோகத்தை அருளுகிறார். அந்தப் புத்தி யோகத்தின் மூலம் பகவானுடைய இயல்பான சுயரூபத்தை அறிந்த அந்த பக்தன் பகவானிடம் ஒன்றி விடுகிறான். சத்,சித் ஆனந்தமயமான பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறான். இதுதான் பரமபதத்தை அடைவது என்பதன் பொருள் என விளக்குகிறார் கிருஷ்ணன். எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக என்னிடம் அர்ப்பணம் செய்து அப்படியே சம புத்தியாகிய யோகத்தைக் கடைப்பிடித்து என்னையே அடைக்கலமாகக் கொண்டு மேலும் எப்பொழுதும் என்னிடம் உள்ளம் பதித்தவனாக இருப்பாயாக என்கிறார். கேசவா! “எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக எனக்கு அர்ப்பணம் செய்து” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எவன் அவனுடைய புத்தி, மனம், உடலையும் அவற்றின் மூலம் செய்யப்படும் கர்மங்களையும், கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் பகவானுடையவை என்று அறிந்து… எல்லாவற்றிலும் தன்னுடையது என்ற எண்ணம்…

Read More

கேசவா! ஒலி முதலிய புலன்நுகர் போகப் பொருட்களைத் துறந்து தூய்மையான இடத்தில் தனித்திருந்து என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எல்லாப் புலன்களாலும் நுகரக்கூடிய போகப் பொருட்கள் அனைத்தையும் துறந்து அவற்றை நுகர்வதில் தன் வாழ்க்கையின் அருமையான நேரத்தைக் கழிக்காமல்… சாதனை புரிவதற்கு உகந்த தூய காற்று வசதி, மக்கள் சந்ததி இல்லாத சூழ்நிலை உள்ள நதிக்கரையோ கோவிலோ, காடோ, மலைக் குகையோ, பெருக்கி மெழுகிச் சுத்தப்படுத்தப்பட்ட துப்புரவான இடமோ இருந்தால் அங்கு வசிக்க வேண்டும். இதுதான் ஒலி முதலிய போகப் பொருட்களைத் துறந்து தனிமையில் இருப்பது என்பதாகும். கேசவா! அகங்காரம், உடல் வலிமை, கர்வம், காமம், கோபம், சொத்து சேர்த்தல் இவற்றை நீக்கி தியான யோகத்தில் இடைவிடாது ஈடுபட்டிருப்பது என்றால் என்ன பொருள் என்பதை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! உடலிலோ, புலன்களிலோ, மனதிலோ உள்ள நான் என்ற நினைப்பு அகங்காரம் எனப்படும். இதன் காரணமாகத்தான் மனமும்,…

Read More

உழவு செய்தலும், பசுக்களை காத்தலும், பொருட்களை வாங்கி விற்பதில் நேர்மையாகவும், வியாபாரம் செய்தலும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள். மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல் நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம் அதனால் எளிதுமாகும் என்கிறார். தத்தம் இயல்பான கடமைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிய சித்தியை அடைகிறான். தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரம நிலையை அடைகிறானோ அந்த முறையை சொல்கிறேன் கேள் என்கிறார். கேசவா! தத்தம் கடமைகளில் ஈடுபட்டவன் பரமசித்தியை அடைவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! நான்கு வர்ணத்தவர்களில் ஒவ்வொரு வர்ணத்தையும் சார்ந்த ஒவ்வொரு மனிதனையும் குறிக்கும். அவன் தன்னுடைய கர்மங்களில் ஈடுபடுவதால் பரமசித்தியை அடைவான். எனவே, மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் மோட்சம் அடையத் தகுதி உண்டு என்று உணர்த்துகிறார். பரமாத்மாவை அடைவதற்காக தன்னுடைய கர்மங்களை ஆற்றாமல் துறந்து விடுவது தேவை அன்று. பரமாத்மாவை…

Read More

21- நன்றி மறவேல் உயரமான புகை கூண்டில் அணில் ஒரு குட்டி போட்டு வளர்த்து வந்தது. அணில் குட்டியும் பெரிதாக வளர்ந்து விட்டது. தாய் அணில் குட்டிக்கு உணவு கொண்டு வர போய்விட்டது. குட்டி அணில் இங்கும், அங்கும் நடந்து… எட்டிப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தது. எதிர் பாராத விதமாக வீட்டிற்குள் விழுந்து விட்டது அணில். மேலே ஏறப் பார்த்தது. சமதளமான மதில் சுவர் என்பதால் அணில் குட்டிக்கு ஏற முடியவில்லை. இதைப் பார்த்த அந்த வீட்டு அம்மா, கதவை திறந்து விட்டு வெளியே போ! அம்மா அணில் உன்னை தேடும் போ என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். புரிந்தது போல் அணிலும் வெளியில் சென்று விட்டது. அம்மா அணிலும், குட்டி அணிலைக் கண்ட சந்தோசத்தில் கொஞ்சி மகிழ்ந்தது. குட்டி அணில் கம்பி மேல் நின்று கொண்டு சின்னக் குரலில் கீச்.. கீச்…என இனிமையாக கத்தியது. அந்த சத்தத்தைக் கேட்ட அந்த…

Read More

பகவானை அடைவதற்கு அனைவருக்கும் தகுதி இருக்கிறது. எனவே, பெரும் முயற்சி செய்தாவது தர்மங்களை கடைப்பிடித்து பகவானை அடைய விரும்ப வேண்டும். சூரவீரத்தனமும், தேக உறுதியும், திறமையும், போரில் புறம் காட்டாமையும், கொடையும், ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள். வலிமை உள்ளோர்களிலும் மிகப்பெரும் வலிமை பொருந்திய எதிரியையும் நியாயமான முறையில் எதிர்த்து தாக்குவதில் பயமின்மை. நியாயமாகப் போராடுவதில் எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பது, யுத்தத்தின் போது சாகசத்துடனும், பெருமிதத்துடனும் துணிந்து நின்று போரிடுதல் வேண்டும் என்கிறார். எந்த சக்தியின் பிரபாவத்தினால் பிறருடைய பயமுறுத்தலுக்கு ஆளாக நேரிடுனும். எந்த ஒரு கடமையில் இருந்து மனிதன் தவறுவதில்லையோ, நீதிக்கு எதிராகச் செயல்படுவதிலும், பயப்படுகிறார்களோ அந்த சக்தியே ‘துணிவு’ என்று சொல்கிறார். மிகப் பெரும் இடுக்கண்கள் நேர்ந்தாலும், போர்க்களத்தில் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டாலும், தன் புதல்வர்களும், பேரன்களும் மரித்தாலும் எல்லாச் சொத்துக்களும் அழிந்துவிட்டாலும்… எவ்விதமான மிகப்பேராபத்துக்கள் வந்தாலும் கலங்காமல் ஒருவன் தனது கடமையில் இருந்து வழுவாமல்…

Read More

கிருஷ்ணா! பிராமணன், சத்ரியன், வைசியன் இவர்களுடைய மற்றும் நான்காம் வர்ணத்தவருக்கும் கர்மங்கள் பிரிக்கப் பட்டிருக்கின்றன என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! முதல் மூவரும் இரு பிறப்பாளர்கள். மூவருக்கும் பூணூல் உண்டு. வேதம் கற்கவும், வேள்வி முதலிய கர்மங்களைச் செய்யவும் தகுதி உண்டு. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கூறினார். நான்காம் வர்ணத்தவர் இரு பிறப்பாளர் அல்லர். அவர்கள் பூணூல் தரிக்க வேண்டும் என்றோ, வேதங்களைக் கற்க வேண்டும் என்றோ நியதி இல்லை. வேள்வி முதலான வைதீக தர்மங்களில் அவர்களது பங்கு குறிப்பிடப் படவில்லை. ஆகவே, அவர்களைப் பிரித்துக் கூறுகிறார். உள்ளத்தை தன் வசப்படுத்திக் கலங்காமல் அமைதியாக வைத்துக் கொள்வதும், உலகியல் போகங்களின் சிந்தனைகளைத் துறப்பதும் மனவடக்கம் எனப்படும். எல்லாப் புலன்களையும் தன் வசப்படுத்தி, வெளிப்பொருட்களில் நாட்டம் கொள்ளாமல் தடுத்துப் பரமாத்மாவை அடைவதற்கான உபாயங்களில் முனைவது தமம் எனப்படும். சுயதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுப்பது அகிம்சை. சிறந்த விரதங்களைக்…

Read More

நோயற்றவன் உடலுக்கு ஒவ்வாத பொருளை அருந்தி நோய் அதிகமாகி துன்புறுகிறான். அல்லது இறந்து போகிறான். மனிதன் விளைவை ஆலோசியாமல் சுகம் என நினைத்து போகப் பொருட்களில் ஈடுபட்டு முடிவில் பலவிதமான பயங்கரமான துன்பங்களை அனுபவிக்கிறான் என்கிறார் கிருஷ்ணன். கணநேர சுகபோகதினால் உள்ள பற்றினால் சுகம் போலத் தோற்றம் அளிக்கிறது, ராஜசக் குணத்தின் விளைவு ராஜசமானது. அது மனிதனைப் பந்தப்படுத்தும். எனவே, மேன்மையை விரும்புபவர்கள் இவ்வித சுகத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிறார். எந்த சுகம் அனுபவிக்கும் காலத்தில் ஆத்மாவை மயக்கம் அடையச் செய்கின்ற தூக்கம், சோம்பல், கவனமின்மை இவற்றில் இருந்து தோன்றும் சுகம் தாமசம் எனப்படும். அர்ச்சுனா! உறக்கத்தின் போது மனம், புலன்கள் இவற்றின் செயல்கள் நின்று விடுகின்றன. களைப்பினால் ஏற்படும் துன்பமும் ஏற்படுவதில்லை. மனம், புலன்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதனால், அது சுகம் போலத் தோன்றுகிறது. அதைத்தான் தூக்கத்தினால் ஏற்படும் சுகம் என்கிறார் இது கணநேரத்தில் அழியக் கூடியது. மனம்,…

Read More

பரதகுலச் செம்மலே அர்ச்சுனா! மூன்று விதமான சுகம் பற்றி சொல்கிறேன் என்னிடம் கேள் என்கிறார் கிருஷ்ணன். அதாவது, சுகத்தில் சாதகனான மனிதன் பஜனை, தியானம், சேவை முதலிய பயிற்சியினால் இன்புறுபவன். முடிவில் துன்பத்தையும் அடைகிறான். அப்படிப்பட்ட சுகம் முதலில் விஷத்தை போல தோன்றினாலும் முடிவில் அமிர்தத்திற்கு ஒப்பாகும். பகவானைப் பற்றிய தெளிவான சுகமே சாத்விகம் எனப்படும். அர்ச்சுனா! வீட்டில் உள்ளவர்கள் கல்வியின் பெருமை பற்றி சொல்வதை எல்லாம் கேட்டு ஒரு சிறுவன் படிக்க ஆரம்பிக்கிறான். கல்வியின் பெருமையை முற்றிலும் அனுபவத்தில் பெறாததால், கல்வி பயிலும் போது தொடக்கத்தில் விளையாட்டுகளை விட்டுவிட்டுப் படிப்பில் ஈடுபடுவது மிகவும் துன்பமாகவும், கடினமாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது அதுபோல… சாத்விக சுகத்தைப் பெறுவதற்காகப் பயிற்சியில் இறங்கியவனுக்கு போகங்களைத் துறந்து புலன்களை அடக்கி விவேகம், வைராக்கியம், புலன் அடக்கம், மன அடக்கம், பொறுமை முதலிய சாதனைகளைக் கடைபிடிப்பது மிகுந்த சிரமம் நிறைந்ததாகவும் துன்பம் தருவதாகவும் தோன்றுகிறது. இதுதான் ஆரம்பக் காலத்தில்…

Read More