Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

சித்தம் நிறைந்து சித்தனை தெளிந்து சித்தி தரவே வந்தான்! புத்தம் புதுமலராய் பூக்களாய் பிறந்து பூசைக்கு தான் வந்தான்! குத்தம் செய்தால் கூட மன்னித்து மறுவாழ்வு தரவே வந்தான்! யுத்தம் செய்த போதும் வாழ்த்தியே அருளைத் தந்தான் முருகன்.

Read More

செந்தமிழ்வாணி டாக்டர் ச. மல்லிகாவின்  ஹைக்கூ கவிதைகள்                  கண்ணாடி       நிலாச்சோறு முழு நிலா முழுங்காத உணவு அம்மா இல்லை.       பயம்துறந்து உயர்ந்த சாலை ஊசி வளைவுகள் இயற்கையில் இணைந்து                பனி பச்சைக் கம்பளத்தில் முத்துப்  புள்ளிகள் மார்கழிப் பனி.              உறவு ஊர்  ஊராக மாற்றும்  வேலை உறவுகள்  பல.                ரசிப்பு ஓலை  வீடு ஊடுருவிய  சூரியன் ரசிக்கும்  சிறுமி.       செஞ்சோலை சமாதானம் பேசி சோலை வனத்து பூக்கள் சவக்கிடங்கில்.            ஆசான் மனசாட்சி ஆசான் தூண்டுதல்  தொல்லை உணர்வதே உண்மை.             திறமை உடலுக்குத்  தலை உயர்வுக்குத் தலைமை நடத்துவதே  திறமை.              நரகம் பண்பு வேசமானால் பாசம்  மோசமாகி வாழ்வு  நரகமாய்.          வெற்றி நகர்வது  இலக்கு நடத்துவது குறிக்கோள் அடைவது வெற்றி.                               தொடரும்

Read More

அலைகள் அசைந்தாடும் கடலின் ஓரத்தில் உடைந்த நிலையில் தரை தட்டி நின்று கொண்டிருந்தது ஒரு கப்பல் அதன் அருகில் ஒரு அறிவிப்பு பலகை. அதில்… உள்ளே சென்று பார்க்க நபர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய். மக்கள் வரிசை வரிசையாக சென்று உடைந்த கப்பலை பார்த்துக் கொண்டிருந்தனர். இருள் கவ்வத் தொடங்கியது. மற்றொரு புறத்தில்… இரண்டு இரண்டு பேர்களாக பெரிய பெரிய பெட்டிகளைத் தூக்கிச் சென்றனர். பெட்டிகளை வாங்கி ஒருவர் அடுக்கிக் கொண்டிருந்தான். ம்…சீக்கிரம் போங்கள். என்று வேகப்படுத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ஒருவன். உடைந்த கப்பலின் நேர் எதிரில் ஒரு பெரிய பங்களாவின் மொட்டை மாடியில்….. அலை கடலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பூபதி. பதட்டத்துடன் ஓடி வந்து. எதிரில் நின்றாள் வேலைக்காரி விஜி. ஐயா! ஐயா!அம்மாவை காலையிலிருந்து காணவில்லை…! என்ன மீனாவை காணாமா? நன்றாகப் பார்! என்றவர் வேலைக்காரர்கள் அனைவரையும் விசாரித்தார். எல்லோரும் ஒரு முகமாக நேற்று ராத்திரிதான் கடைசியாகப்…

Read More

கட்டுப்பட மாட்டான் என்று கலங்கவே வேண்டாம் என்றும் முருகன்! முட்டுக்கட்டை வந்தால் கூட முறித்து எதிர்த்து வருவான் முருகன்! தட்டுப்பாடு இல்லா வாழ்வை தரணிக்கு தரவே வந்தான் முருகன்! கட்டுப்பட்டு நின்று விட்டான் பக்திக்கு கட்டுப்பட்டு நின்று விட்டான்.

Read More

முருகனின் ஆத்ம தரிசனம் பன்னிரு கரத்தில் வாழ்த்தி முருகன் பக்கத்தில் துணையாய் நின்றான் கூன் குருடு நீக்கி குறைகள் போக்கியே நின்றான் முருகன் சின்னஞ் சிறு பிள்ளை என்று சிறுமையாய் நினைக்க வேண்டாம் உன்கையை உயர்த்தும் உறுதியை முருகன் தரவே தான் வந்தான்.

Read More

செந்தமிழ்வாணி டாக்டர் ச.மல்லிகாவின்ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி துளிரா செடிவற்றிய தேரைக்கு வளரும் செடி விரோதம். நீரோட்டம்வாழ்க்கை பூந்தோட்டம் வறுமை தேரோட்டம் உழைப்பு நீரோட்டம். ஏழ்மை கூரை வீடு ஒழுகும் நீர் ஏழ்மை. தெருவிளக்குசாலை வீடு சாதனைப் படிப்பு தெரு விளக்கில். முதியோர் இல்லம் பழுத்த கனி விருந்தாய் முதியோர் இல்லத்திற்கு. சூரிய உதயம் சூரிய உதயத்தில்பறவைகளின் கச்சேரி மரசபாவில். ஒலி அலை பாடும் பறவை கேட்கும் செவி காற்றில் ஒலி. பூரணம்பற்றுதலைத் துறந்தால் பக்குவ பூரணமாய் இறைவன். குழந்தை மொழிபொக்கை வாய் உதிரும் முத்துக்கள் மழலைச் சொல். பொறுமைகுளத்தில் மீன் கரையில் கொக்கு காத்திருப்பு. தொடரும்

Read More

முருகனின் ஆத்ம தரிசனம் ஆறுபடை வீடு கொண்டு முருகன் ஆதரவு தரவே வந்தான் சேறுபட வயலில் இறங்கி உழைக்கும் உழவுக்கு வந்தனை செய்தான் கூறுபட்டு போன மக்கள் கூடி வாழ வழியும் சொன்னான் மாறுபட்ட கருத்தை நீக்கி மன்னித்து மறுவாழ்வு பெருக என்றான்.

Read More

“விஸ்வரூபத்தின் மிக அதிசயமான காட்சிகளையும், சம்பவங்களையும் நினைத்து… நினைத்து… எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது. ஆகா! பகவானுக்குத் தான் எவ்வளவு விசித்திரமான யோக சக்தி” என்கிறார் சஞ்சயன். அரசே! இங்கு நான் என்ன சொல்லப் போகிறேன் எங்கு யோகேஸ்வரனான பகவான் கிருஷ்ணனும், காண்டீபம் ஏந்திய அர்ச்சுனனும் இருக்கிறார்களா, அவ்விடத்தில் மகாலட்சுமியும், வெற்றியும், ஐஸ்வர்யமும், நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை என்ற சஞ்சயன். திருதராஷ்டிரரின் உள்ளத்தில் சமாதானத்தில் விருப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணனுடையதும், அர்ச்சுனனுடையதும் ஆன தனிப்பட்ட பெருமைகளைக் கூறும் அடைமொழிகளைச் சேர்த்துக் கூறியதன் மூலம் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி உறுதி என்பதைத் தெளிவாக சஞ்சயன் வெளிப் படுத்துகிறார். “பகவான் எல்லா யோக சக்திகளையும் ஆட்டிப் படைப்பவர். தம்முடைய யோக சக்தியினால் ஒரு கணத்தில் அகில உலகையும் படைத்து, காத்து, தம்முள் அடக்கிக் கொள்ளும் திறமை பெற்றவர்.” அவர் சாட்சாத் ஸ்ரீ நாராயணன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தாமாகவே தர்மராஜன்…

Read More

“நான் இப்போது உங்களுக்குச் சொன்ன இந்த கீதா சாஸ்திரம் யாரோ ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதன்று. எல்லா யோக சக்திகளுக்கும் தலைவரான சர்வ வல்லமை படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின்,“திரு முகத் தாமரையில் இருந்து அவர் அர்ச்சுனனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் நேராகக் கேட்டது.” என்று திருதராஷ்டிரருக்கு கீதையின் தனிப்பெருஞ் சிறப்பைக் கூறுகிறார் சஞ்சயன். அரசே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த இந்த ரகசியமான நன்மை தரக்கூடிய அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த இந்த தெய்வீகமான உரையாடலான கீதா சாஸ்திரம் கற்பவர், கற்பிப்பவர், கேட்பவர், சிந்திப்பவர், விளக்குபவர்கள் ஆன மனிதர்கள் அனைவரையும் தூய்மைப் படுத்துகிறது. அவர்களுக்கு மேன்மை அளிக்கிறது. இது பகவானுடைய ஆச்சரியமான குணங்கள், பிரபாவங்கள், ஆளுமை, தத்துவம், ரகசியம், சுயரூபம் இவற்றை அற்புதமாக விளக்குகிறது. “பகவான் செய்த உபதேசம் என் உள்ளத்தை…

Read More

செந்தமிழ் வாணி டாக்டர் ச மல்லிகாவின் ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி வாழ்க்கை வீழ்ந்தாலும் எழுந்து நிற்பது வாழ்க்கை. அழகு இருட்டில் நிலா கருப்பு பெண்ணின் மனம். பெண் மண்ணாய் மிதித்தாலும் பொன்னாய் மதித்தாலும் ஏற்பவள் பெண். பூட்டு வீட்டுக்கு காவல் வாய்க்கு….. மௌனம். மணல் வீடு கட்டுவதே இடிப்பதற்காக இடியாமல் இருப்பது சந்தோசம். நிறம்மண்ணின் நிறம் நீரில் எண்ணத்தின் வடிவம் மனதில். காகிதப் பூகண்ணுக்கு காட்சியாய் நகர்….. புற வாழ்க்கை. மரபுக் கவிதைமுன்னோர் தந்த தமிழனின் சொத்து மரபு பா. சிலைகாலங்கள் கடந்தாலும் நினைவில்சிலை. மனசு உடல் கூட்டின் உயரிய….பெட்டகம் தொடரும்

Read More