Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

23-மண்பறித் துண்ணேல் இரண்டு அண்ணன், ஒரு அக்கா என மூன்று பேருடன் பிறந்தார் ரமணன். நல்ல உழைப்பாளி. அவன் தொட்டது எல்லாம் உயர்ந்தது. கட்டிடமாக, வெல்டிங் கம்பெனியாக… அவன் ஒருவனால் பார்க்க முடியாது என்பதால் தனது அண்ணன்கள், அக்கா குடும்பம் என பார்த்துக் கொள்ளச் சொன்னான். அவர்கள் உடன் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையில். அவர்களும் அந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டதுடன், சம்பளமாக பணமும் பெற்றுக் கொண்டனர். ஒரு நாள் திடீரென்று நெஞ்சு வலி வந்து தம்பி ரமணன் இறந்துவிட்டான். அவன் மனைவி, மகன், மகள் என குடும்பமே நிலை குலைந்து போய் விட்டது. அவர்களுக்கு பக்க பலமாக ஆறுதலாக இருக்க வேண்டிய உறவினர்கள். அவர்…அவர்களுக்கு கிடைத்தால் போதும் என்று அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த கம்பெனிகளை தங்களுக்குச் சொந்தம் என சொந்தம் கொண்டாடினார்கள். ரமணன் மனைவி, குழந்தைகள் செய்வது அறியாது கண்ணீர் வடித்தனர். இதுபோன்ற பிறர் நிலத்தை அபகரிப்பவர்களைப் பார்த்த…

Read More

கேசவா! அஞ்ஞானத்தினால் உண்டான உன் மோகம் அழிந்ததா? என்று கேட்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! நீ கவனமாகக் கேட்டிருந்தால் அதற்கு நிச்சயம் பயன் உண்டு. நீ மோகத்திற்கு ஆட்பட்டு தர்மம் இன்னது என்று தெரியாமல் குழம்பி இருக்கிறேன் என்று சொன்னாயே! உனக்கு விதிக்கப்பட்ட கடமையை ஆற்றுவது பாவம் என்று கருதினாயே! செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்யாமல் விட்டுவிட்டுப் பிட்சை எடுத்து பிழைப்பேன். அதுவே, சிறந்த வழி என்று சொன்னாயே! அந்த மோகத்தின் காரணமாகச் சுற்றத்தைக் கொல்ல வேண்டுமே! என்று பயந்து கலங்கினாயே! நான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க முடியவில்லையே! என்று கலங்கினாயே! இப்படி உன்னுடைய அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட மோகம் எல்லாம் அழிந்து விட்டதா? இல்லையா? என்னுடைய உபதேசத்தைக் கவனமாகக் கேட்டிருந்தாய் ஆனால் அந்த மோகம் அழிந்திருக்க வேண்டுமே! அந்த மோகம் இன்னும் அழியவில்லை ஆனால், நீ உபதேசத்தை ஒரு முனைப்புடன் கேட்கவில்லை என்கிறார்…

Read More

காலத்தின் கண்ணாடி கவிதை! இயற்கையைரசிப்போம்! கவிதையில் நேசிப்போம்! செந்தமிழ் வாணி டாக்டர் ச. மல்லிகாவின் ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி முகம் பார்க்கிறது திருஷ்டி கண்ணாடியில் சிட்டுக்குருவி. ரோஜா குத்தினாலும் சிரிக்கிறது ரோஜா மலர். மாநாடு மின்சாரக் கம்பிகளில் குருவியின்அணிவகுப்பு மாநாடு. மனிதம் மூழ்கும் கப்பலாய் துன்பம் வந்தாலும் உதவும் குணம். பச்சோந்திநிறம் மாறுகிறது மனிதனின் எண்ணம் பச்சோந்தி. எறும்பு இராணுவ அணி வகுப்பு அதிரடி சேமிப்பு எறும்பு. கொடை எடுத்த நீரை திருப்பிக் கொடுப்பது மழை. வறுமை பெற்ற குழந்தையை விற்க நினைத்தாள் தாய். நிழல்விலகாது இன்ப, துன்பத்தில் நிழல். பயணம்உறவும், நட்பும் வளம் சேர்ப்பது பயணம். தொடரும்

Read More

கேசவா! “நம்பிக்கையுடன் குறை காணாதவனாக இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்பது” என்றால் அதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பகவான் ஒருவர் இருக்கிறார். அவர் குணங்களில் நம்பிக்கை கொண்டு கீதா சாஸ்திரம் பகவனுடைய திருவாய் மொழியே சொல்லப்பட்ட உண்மை. என்ற உறுதியும், நம்பிக்கையும், பிரியமும், விருப்பமும் கொண்டு கீதையின் மூல பாராயணத்தையோ, பொருள் விளக்கத்தையோ கேட்பதுதான் சிரத்தையுடன் கீதா சாஸ்திரத்தைக் கேட்பதாகும். இதைக் கேட்கும்போது, பகவானிடமோ, பகவானுடைய சொற்களிலோ எவ்வித குற்றம் குறை காணாமல். கீதையை எவ்விதத்திலும் அவமதிக்காமலும், குற்றம் காணும் நோக்கம் இல்லாமல் இதைக் கேட்க வேண்டும் என்கிறார். சிரத்தையோடு கீதா சாஸ்திரத்தைக் காதால் கேட்பவன் கூடப் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றால், கீதா சாஸ்திரத்தைப் பிறருக்குக் கற்பிப்பவர், பாராயணம் செய்பவர் பற்றிச் சொல்லவும் வேண்டுமா! எனவே, பிறருக்குக் கற்பிக்கவோ, தானாகவோ கற்றுக் கொள்ள முடியாத வரும் கூட இதை அவசியம் கேட்கவாவது செய்ய வேண்டும். அவ்வாறு கேட்பதன்…

Read More

கேசவா! என்னிடம் உயர்ந்த பிரியமான பக்தி கொண்ட பக்தர்களிடத்தில் உபதேசத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஒருவன் தானாகவே பகவானிடம் நம்பிக்கை கொண்டு திருநாமங்கள், கல்யாண குணங்கள், லீலைகள், பிரபாவம், சுயரூபம் இவற்றை நினைத்த அளவிலேயே அவருடைய புத்தியில் மனம் உருகி பகவானுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே… கீதா சாஸ்திரத்தைப் பற்றி விரிவுரை ஆற்ற வேண்டும். அவற்றை விளக்கிப் பொருள் கூற வேண்டும். சரியாக புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அவற்றின் கருத்துக்களை நயம்பட உரைக்க வேண்டும். கேட்பவர்களின் ஐயங்களை தீர்க்க வேண்டும். கீதையின் உபதேசங்களை அவர்கள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். கீதையின் உபதேசத்தின் படி வாழ்க்கை நடத்துவதற்குரிய மன உறுதியை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் இவை யாவும் பகவானிடம் பரம பிரியம் பூண்டு பகவானுடைய பக்தர்களிடையே கீதை உபதேசத்தை கூறுவதாகும். இவ்வாறு என்னிடம் பக்தி செய்ய வேண்டும். என்ற ஒரே குறிக்கோளுடன் எனது…

Read More

கேசவா! பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் இதை உபதேசம் செய்யக்கூடாது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா ! நம்பிக்கையும், பிரியமும், மதிப்பும் பரமாத்மாவிடம் இல்லாமல் தன்னையே பெரியவனாக நினைத்துக் கொண்டே நாஸ்திகன் இக்கீதா உபதேசத்தைக் கேட்டால் பக்தி இன்மையால் இக்கருத்துக்கள் அவனுக்குப் புரியாத காரணத்தால் மனதில் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்கிறார். கேசவா! என்னிடம் குறை காண்பவனுக்கு ஒரு போதும் சொல்லக்கூடாது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். கீதா சாஸ்திரத்தைக் கேட்க விருப்பம் இல்லாதவர்க்கு உபதேசத்தைக் கூறக்கூடாது. ஏனெனில், உலகம் உய்விப்பதற்காக சகுண சுயரூபமாக வெளிப்பட்டுள்ள பரமாத்வான என்னிடம் யார் குறை காண்கிறார்களோ, என்னுடைய குணங்களைக் குற்றமாகக் கருதி என்னை நிந்திக்கிறார்களோ அத்தகையவருக்கு எந்த நிலையிலும் கீதையை உபதேசிக்க கூடாது. “என்னுடைய குணங்களிலும் பிரபாவங்களிலும், ஆளுமையிலும் அவர்களுக்கு ஏற்படும் பொறாமையின் காரணமாக இவ்வுபதேசத்தைக் கேட்டு முன்னிலும் அதிகமாக என்னை அவமதித்துப் பாவத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்”…

Read More

கேசவா! “நான் உன்னை பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பேன்” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! நல்ல கர்மமானாலும் சரி, தீய கர்மமானாலும் சரி, அவற்றின் பயனாகத் தளைகள் ஏற்படத்தான் செய்யும். அதன் காரணமாக பல பிறவிகள் பிறந்து சுழல வேண்டி இருக்கும் இக்கரும தளைகளைத் தான் பாவம் என்று குறிப்பிடுகிறார். இப்பாவங்களில் இருந்து நான் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறுகிறார். இவ்வாறு அர்ச்சுனனுக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன். கீதா உபதேசத்தை நிறைவு செய்கிறார். “அர்ச்சுனா! நீ என்னைச் சரணடைந்தாய். இப்போது முழுமையாக என்னைச் சரணடைந்து சோகத்தை முற்றிலும் துறந்து எவ்விதக் கவலையும் கொள்ளாது எப்பொழுதும் பரமேஸ்வரனான என்னையே சார்ந்து இரு” இவ்விடம் சோகத்தை அறவே, களைவதும், பகவானை அடைவதும் தான் கீதையின் முக்கிய கருத்து என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! உனக்குக் கூறப்பட்ட இந்த ரகசியமான கீதா உபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக் கூடாது. பக்தி இல்லாதவனுக்கும்…

Read More

நேற்று11-3-2025 மாலை நல்ல காற்று வீசியது. அணில் கூண்டில் இருந்து அணில் குட்டி கீழே விழுந்து விட்டது. தேவகி மைந்தன் கிருஷ்ணனை வாசுதேவர் கூடையில் வைத்து எடுத்து சென்றது போல்.. அணில் குட்டியை கூடையில் வைத்து எடுத்து வீட்டுக்கு வந்தேன். ஆணிலுக்கு சிறிது பால் புகட்டி பத்திரமாக வைத்திருந்தேன். பின் நல்ல மழை பெய்தது. மழை நின்றவுடன் கூடையுடன் அணில் குட்டியை தாய் அணில் இருக்கும் பகுதியில் வைத்தேன். குட்டி அணிலைக் கண்ட தாய் அணில். வாயில் கவ்விக் கொண்டு கூண்டுக்குள் எடுத்துச் சென்று விட்டது. தாயிடம் குட்டி அணில் பத்திரமாக சென்றுவிட்டது. ஓம் நமோ நாராயணா! ஓம் நமோ கிருஷ்ணா! ஓம் நமோ ராமா!

Read More

அர்ச்சுனனின் வருத்தத்தைப் பார்த்த கிருஷ்ணன். அர்ச்சுனா! நீ எனக்கு மிகவும் பிரியமானவன். உனக்கும், எனக்கும் உள்ள பாசப் பிணைப்பு அசையாதது உறுதி மிகுந்தது. ஆகவே, நீ எவ்விதத்திலும் வருந்தாதே என்று உற்சாகம் மூட்டுகிறார்.நீ எனக்கு மிகவும் நெருங்கிய அன்பன். அதனால், உன் மேன்மையின் பொருட்டு உன்னிடம் வெளிப் படுத்துகிறேன். “நான் இப்போது சொல்லப்போவது உனக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்” என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! நீ என்னிடம் மனதைச் செலுத்து என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே வழிபடு என்னையே வணங்கு இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இதை நான் உனக்கு உண்மையென உறுதி கூறுகிறேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக் குரியவனாக இருக்கிறாய். உனக்கு என்னிடம் திடமான நம்பிக்கை வளர வேண்டும் என்ற எண்ணத்தினாலும்…. அர்ச்சுனனை நிமித்தமாகக் கொண்டு, தகுதி பெற்ற மற்ற பக்தர்களுடைய நம்பிக்கையைத் திடப்படுத்துவதற்காகவும் பகவான் மேலே சொன்னவாறு சபதம் செய்கிறார். மேலே சொன்ன விதம்.…

Read More

22-பருவத்தே பயிர்செய் ஐப்பசி மாதம் பிறந்த உடன் விவசாயிகள் வயலில் உழுது நெல் விதைக்க ஆரம்பித்து விட்டனர். வேறு சிலர் மஞ்சள், கிழங்கு, கரும்பு இப்படி பயிர் செய்ய அதற்கான வேலைகளில் இயங்கிக் கொண்டு இருந்தார்கள். இந்தப் பருவத்தில் செய்யத் தொடங்கினால்தான் தை மாதம் அறுவடைக்கு தயாராகிய விற்பனைக்கு சந்தைக்குப் போகும். இப்படி திட்டமிட்டு விவசாயிகள் காலத்தைப் பார்த்து பருவத்தில் பயிர் செய்வதால் அவர்கள் லாபம் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகன், மகள் இருந்தால் திருமணம் செய்து கொடுக்க முடியும். இளம் வயது ஆண், பெண் இருவருக்கும் உரிய வயதில் திருமணம் செய்து வைப்பதும் பருவம் பார்த்து பயிர் செய்வதற்கு சமம் என்கிறார்கள். என்பதை ஔவையாரும் “பருவத்தே பயிர்செய்” என்று சொல்கிறார்.

Read More