அர்ச்சுனா! எந்த புத்தி பிறவிருத்தி மார்க்கத்தையும், நிவர்த்தி மார்க்கத்தையும் செய்யத் தகுந்தது, தகாதது, பயம், பயமின்மையையும், தளையையும், மோட்சத்தையும் உண்மையாக அறிகிறதோ அந்தப் புத்தி சாத்விகமானது என்கிறார். மனிதன் எந்த புத்தியினால் தர்மத்தையும், அதர்மத்தையும், செய்யத் தகுந்த, தகாத காரியத்தையும் உள்ளபடி அறியாமல் தவறாக புரிந்து கொள்ளும் புத்தி ராஜசம் எனப்படும் என்கிறார். தமோ குணத்தினால் புத்தி சூழப்பட்டு அதர்மத்தை தர்மம் என்றும், எல்லாப் பொருட்களையும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாக நினைப்பது தாமச புத்தி என்கிறார். அதாவது, கடவுளை இகழ்வது, தேவதைகளை இகழ்வது, சாஸ்திரங்களை எதிர்ப்பது. தாய், தந்தை, பெரியோர்களை அவமானப் படுத்துவது. தர்மங்களுக்கு மாறாக நடப்பது. வீண் ஆடம்பரம், பொய், கபடம், விபச்சாரம், தீங்கு விளைவிப்பது, மனம் போன படி நடப்பது போன்ற செயல்களை தர்மம் என்று நினைப்பதுதான் அதர்மத்தைத் தர்மம் என நினைப்பதாகும் என்கிறார். தாமச குணத்தில் ஆழ்ந்து விட்டபடியால், புத்தியில் பகுத்துணரும் ஆற்றல் முழுமையாக மழுங்கிவிட்டது…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும், அறிவு முதிர்ச்சி அடையாதவனும், கர்வம், வஞ்சனை, பிறர் வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை, சோம்பல், காலம் கடத்துதல் போன்ற குணம் படைத்தவன் தாமசன் என்கிறார். கட்டுப்படாத மனம் உடையவன். உள்ளமும், புலன்களும் சீர்படாதவன், பணிவும், மரியாதையும் அற்றவன். சூழ்ச்சி, கபடு நிறைந்தவன், பிறரை ஏமாற்றுபவன். பிறர் வாழ்வை பலமுறை கெடுப்பவன். பிறர் உழைப்பிற்கு இடைஞ்சல் செய்பவன். இரவு, பகல் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன், உலகியல் கடமைகளை ஆற்றாதவன். தொடங்கிய வேலையை இன்று, நாளை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவன். காலம் கடந்தும் வீணன். இக்குணங்கள் சிறிது இருந்தாலும் தாமசன் ஆகி விடுவான். இதனால் அவனுக்கு வீழ்ச்சிதான் ஏற்படும். மனிதப் பிறப்பில் இருந்து விலங்கு, பறவை, புழு, பூச்சி போன்ற நிலைக்கு இறங்கி விடுவார்கள். எனவே, மேன்மையை விரும்புபவர்கள், தம்மிடம் தாமசப் பண்புகள் ஒன்றும் தலை எடுக்காமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அர்ச்சுனா!…
சாஸ்திரங்களில் சுயதர்மம் என்று விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றும் போது எவ்வளவு பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும், அச்செயல்களைக் கைவிடாது முயற்சியுடன் உறுதியோடு செய்வதாகும். அப்படிக் கர்மங்களைச் செய்யும் போது அதை சரிவர நிறை வேறா விட்டாலும் கூட எனக்குப் பயனை அடைய விருப்பம் இல்லை. நான் எதற்காகக் கர்மம் செய்ய வேண்டும் என்று அலட்சியம் செய்யாது சிரத்தையுடன் செய்ய வேண்டும். அதாவது, செயலில் பயனை அடைந்தவனுக்கு ஒப்பாகவும், பயனை எதிர்பார்த்துச் செயல் ஆற்றுபவனைப் போன்றும் சிறப்புடன் செய்ய வேண்டும். உற்சாகமாக இருப்பவன் எவ்வளவு பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும் தன் கடமையில் இருந்து வழுவ மாட்டான். மேலும், மிகுந்த ஊக்கத்துடன் எல்லா இடையூறுகளையும் கடந்து தனது கடமைகளை விடாப் பிடியாக உறுதியுடன் ஆற்றவன் இது தான் அவனுடைய இலக்கணம். சாதாரண மனிதன் தன் விருப்பம் நிறைவேறுவதற்கு ஒரு சாதனம் என்ற ஒரு கர்மத்தில் பற்றுக் கொண்டு அதைச் செய்து முடித்தால் அதில் அவனுக்கு பெரும்…
எந்தச் செயல் கடுமையான உழைப்பினால் நிறைவேறக் கூடியதோ அவ்வாறே போகப் பயனில் கருத்துடையதும், அகங்காரம் உடையவனால் செய்யப்படுகிறதோ அந்தச் செயல் ராஜசம் எனப்படுகிறது. ராஜச கர்மம் செய்பவன் பற்றும், ஆசையும் கொண்டு ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கர்மங்களைச் செய்து பெருக்கிக் கொள்கிறான். அதனால், மிகுந்த கடின உழைப்பைத் தருகின்ற அத்தகைய கர்மங்களை ராஜசம் என்று கூறுகிறார். சாத்விக தர்மம் செய்பவனுக்கு உடலில் ‘தான்’ என்ற அகங்காரம் கிடையாது. கர்மங்களைப் புரியும் கடவுள் நான் என்ற எண்ணமும் இராது.ஆகவே, அவன் எதைச் செய்தாலும் உடலில் சோர்வோ, துன்பமோ மனதிற்குத் தெரிவதில்லை என்கிறார். எந்தச் செயல் விளைவையும,இழப்பையும், துன்பத்தையும், திறமையையும் ஆராயாமல் வெறும் அஞ்ஞானத்தினால் தொடங்கப்படுகிறதோ அந்தக் கர்மம் தாமசம் என்கிறார். அதாவது, எந்தக் கர்மத்தையும் ஆரம்பிப்பதற்கு முன் ‘எண்ணித் துணிய கர்மம்’ என்கிறார். இச்செயலினால் ஏற்படக்கூடிய எதிர்கால விளைவு என்ன? எவ்விதமான சுகம் ஏற்படும்? என்ன துன்பம் நேரும் என்று அதன் விளைவைச்…
எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லாமல் அவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும், செயல்களிலும் ஒட்டுவதில்லையோ, அவன் இந்த உலகங்கள் அனைத்தையும் கொன்றாலும், உண்மையில் கொல்வதில்லை. மேலும், பாவத்தினால் தளைப்படுவதும் இல்லை என்கிறார். அகங்காரம், மமகாரம், ருசி, தன்னலம் இவை இல்லை என்றான பிறகு பாவச் செயல் புரியக் காரணமே கிடையாது. உலக நோக்கில் கர்மங்கள் அனைத்தையும் செய்வது போலத் தோன்றினாலும் அவனை அக்கர்மங்கள் எவையும் பந்தப் படுத்துவதில்லை. அறிபவன், அறிவு, அறியப்படுவது இம்மூன்றும் ஒன்று சேர்ந்து கர்மத்தைத் தூண்டுவன. மனம், புத்தி, புலன்கள் மற்றும் செயல் என்ற மூன்றும் ஒன்று சேர்வதாலேயே கர்மம் உண்டாகிறது. குணங்களின் எண்ணிக்கையைக் கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் ஞானமும், செயலும், செய்பவனும் குணங்களின் வேற்றுமையினால் மும்மூன்றாகவே சொல்லப்படுகின்றன அவற்றையும் நீ என்னிடம் இருந்து உள்ளவாறு கேட்டுத் தெரிந்து கொள் என்கிறார். அந்த ஞானத்தினால் மனிதன் தனித்தனியான உயிரினங்கள் அனைத்திலும் ஒன்றேயானதும், அழிவற்றதுமான பரமாத்மாவின்…
வெளிப்படையாகப் புலன்களை அடக்கி விட்டு மனதில் போகங்களை நினைத்திருப்பவன் தியாகி அல்லன். அகங்காரம், மமகாரம், பற்று இவற்றை விடாமல் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி, தானம், தவம், கடமைகள் இவற்றை முற்றிலும் செய்யாமல் விடுபவனும் தியாகி அல்லன் என்கிறார். கர்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்குக் கர்மத்தின் உடைய நல்லதும், தீயதும், இரண்டும் கலந்ததுமான மூன்று விதமான பயன் இறந்தபின் கட்டாயமாகக் கிடைக்கின்றது. ஆனால், கர்ம பயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் ஏற்படாது. அவை வறுக்கப்பட்ட விதைகள் போல திறனற்றவை யாகும். அர்ச்சுனா! எல்லாக் கர்மங்களும் நிறைவேறுவதற்கு இந்த ஐந்து காரணங்கள் கர்மங்களின் முடிவிற்கான உபாயத்தை சாங்கிய சாஸ்திரத்தில் கூறப்பட்டன. அந்த ஐந்து காரணங்களும் ஒன்று சேர்வதால் தான் எல்லாக் கர்மங்களும் நிறைவேறுகின்றன. அவற்றை உனக்கு கூறுகிறேன். நீ கவனமாகக் கேட்டுத் தெரிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன். மனம், புத்தி, அகங்காரம் முதலியவை உடலில் உள்ளே உள்ள காரணங்கள். ஐந்து அறிவுப்…
அர்ச்சுனா! சன்யாசம், தியாகம் இவை இரண்டிலும் முதலில் தியாகத்தைப் பற்றி என்னுடைய கொள்கையை கேள். தியாகம் சாத்வீக, ராஜச, தாமசம் என்ற பிரிவுகளோடு மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது. வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் துறக்கத் தக்கனவல்ல. அவை கட்டாயம் செய்யப்பட வேண்டியவை தான். ஏனெனில், வேள்வி, தானம், தவம் இம்மூன்றும் அறிவுடையவர்களைப் பரிசுத்தப்படுத்தக் கூடியவை ஆகும். எனவே, வேள்வி, தானம், தவம் இம்மூன்று கர்மங்களும். மேலும், செய்ய வேண்டிய கடமைகளும், பற்றையும், பயன்களையும் தியாகம் செய்து கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியன என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கை யாகும். விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யாமல் விடுதல் தகாது. ஆகையால் அறியாமையினால் அதை தியாகம் செய்தல் தாமச தியாகம் என்று சொல்லப்படும். தாமச குணம் மனிதர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகும். மனிதனை பிறவியில் இருந்து விடுவிக்காது, மாறாகப் பாவத்திற்குக் காரணமாவதால் வீழ்ச்சியைத் தரும். எது செய்ய வேண்டிய கர்மமோ அதைத் துன்பம் என்றே…
பதினெட்டாவது அத்தியாயம் மோட்ச சந்நியாச யோகம் பிறப்பு, இறப்பு என்ற உலகியல் தளையில் இருந்து என்றும் விடுபட்டு பரமானந்த ரூபனான பரமாத்மாவை அடைவதே மோட்சம் ஆகும். இந்த அத்தியாயத்தில் பகவான் முன்பு கூறப்பட்ட எல்லா அத்தியாயங்களுடைய சாரத்தையும் சுருங்கத் கூறி மோட்சத்திற்கு உபாயமான சாங்கிய யோகத்திற்கு ‘சன்யாசம்’ என்றும், கர்ம யோகத்திற்கு ‘தியாகம்’ என்றும் பெயர் சூட்டி. பிரிவு, உட்பிரிவுகளுடன் சிறந்ததொரு விளக்கம் தருகிறார். சாட்சாத் மோட்சமாகிய பரமாத்மாவிடம் எல்லாக் கர்மங்களையும் ஒப்படைத்து விடு அல்லது தியாகம் செய்துவிடு என்று கூறி உபதேசத்தை முடிக்கிறார். எனவே, இந்த அத்தியாயத்திற்கு ‘மோட்ச சன்நியாச யோகம்’ என்று பெயர். சர்வ வல்லமை படைத்த பரம்பொருளே! எல்லாக் குறைகளையும் களையும் சாட்சாத் பரமாத்மாவே! “நான் அறிய விரும்புவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் வேண்டுகோளைச் சற்று ஆலோசித்து எப்படிக் கூறினால் உண்மையை முழுமையாக நான் தெரிந்து கொள்வேனோ அவ்விதம் சந்யாசம், தியாகம் பற்றிய விவரங்களை ஐயங்கள்…
மங்கலத்தை விரும்புகின்றவர் பரமாத்மாவை அடைவதைத் தவிர வேறு ஒரு தேவையும் இல்லாதவர்கள். எல்லாக் கர்மங்களையும், அகங்காரம், மமகாரம், பற்று பயனில் கருத்து இவற்றையும் அறவே தியாகம் செய்பவர். பரமாத்மாவுக்காகவே அவருடைய ஆணைப்படி தியாகம் செய்கிறார்கள் என்கிறார். ‘சத்’ என்ற பகவானுடைய பெயர் உண்மை என்ற கருத்திலும், நல்லெண்ணம் என்ற கருத்திலும் உபயோகப் படுத்தப் படுகிறது. எனவே, உயர்ந்த மங்கலமான கர்மத்திலும் ‘சத்’ என்ற சொல் உபயோகப் படுகிறது. வேள்வியிலும், தவத்திலும், தானத்திலும் எந்த உறுதி நிலை இருக்கிறதோ அது கூட ‘சத்’ என்றே கூறப்படுகிறது. மேலும், பரமாத்மாவின் பொருட்டுச் செய்யப் படுகின்ற அந்தச் செயல் நிச்சயமாக ‘சத்’ என்றே அழைக்கப் படுகிறது. அர்ச்சுனா! பகவான் உடைய ஆணையின்படி அவருக்காகவே செய்யப்படும் கர்மம் தன்னலம் சிறிதும் இல்லாமல் பகவானுக்காகவே புரிவதாகும். இப்படிப்பட்ட கர்மம் கடவுளின் உள்ளத்தை தூய்மைப் படுத்தும். பரமாத்மாவை அடையச் செய்யும். அதுவே ‘சத்’ எனப்படும். சிரத்தை இன்றிச் செய்யப் படுகின்ற…
எந்த தானம் மரியாதை இன்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும், தகாத காலத்திலும் தகுதி அற்றவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ அது தாமசம் எனப்படுகிறது. கேசவா! மரியாதை இன்றி இகழ்ச்சியோடு கொடுக்கப்படும் தானம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள். தானம் பெற வருபவர்களிடம் அன்புடன் பேசி அமர வைத்து உபசரிக்காமல் கடுகடுப்புடன் கொடுக்கப்படும் தானமே மரியாதை இன்றி கொடுப்பதாகும். அலட்சியமாகவும், கடுகடுப்பாக பேசி,மிரட்டி, இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்து, கேலி செய்து அவமானம் செய்து கொடுப்பது இகழ்ச்சியோடு கொடுப்பதாகும் என்கிறார். மேலும், எவருக்கு அவசியம் இல்லையோ அவருக்கு கொடுக்கும் தானம் தாமசம் எனப்படும். அதாவது, கபடவேசம் போட்டு இருப்பவன், பிறரை இம்சை செய்பவன், வசை பாடுபவன், பிறர் வாழ்க்கையை கெடுப்பவன், கள்,புலால் உண்பவன், சூதாடி, திருடுபவன், விபசாரம் செய்பவர் இவர்களுக்கு கொடுக்கும் தானம் தாமசம் ஆகும் என்கிறார் கிருஷ்ணன். ஓம், தத், சத் என்ற மூன்று விதமாக சத்,சித், ஆனந்த மயமான பிரம்மத்தினுடைய…
