Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

பச்சை பச்சை செடிகளைப் பார்த்து பார்த்து ரசிக்கலாம் வண்ண வண்ண மலர்களை கண்டு நாமும் மகிழலாம். உயர்ந்த உயர்ந்த மரங்களை உவகை யோடு ரசிக்கலாம் உலவும் தென்றல் காற்றுடன் உளம் மகிழ்ந்து பாடலாம். கூவும் குரலை கேட்கலாம் ஆடும் மயிலை பார்க்கலாம் பறவை பாடும் சங்கீதம் பரவசப் படுத்தும் சந்தோசம். துள்ளித் திரியும் ஆட்டையும் புல்லை மேயும் மாட்டையும் தெளிந்த ஓடை நீரையும்காத் திருந்து பார்க்கலாம். குளிர்ந்த நீரின் குளிர்ச்சியை குளித்து குளித்து மகிழலாம் கொட்டும் மழை தூரலில் நனைந்து நாமும் ஆடலாம். வான வில்லைப் பார்க்கலாம் மின்னும் மின்னலைப் பார்க்கலாம் இடிச் சத்தத்தைக் கேட்கலாம்இன்பமாய் நாம் பாடலாம்.

Read More

யானை போல் வலிமையும் மானைப் போல் நற்பண்பும் எறும்பு போல் சுறுசுறுப்பும் காகம் போல் பகிர்ந்துண்டும் வாழ்வது இனிது.சிங்கம் போல் கம்பீரமும்புலி போல் விரைவும் தேக்குப் போல் உறுதியும் தேன் போல் இனிமையுடன் வாழ்வது இனிது.குயில் போல் கூவி மயில் போல் ஆடி மந்திபோல் தாவாமல் நாய் போல் நன்றியுடன் வாழ்வது இனிது.ஆல் போல் நிலைத்து அகில் போல் மணம்வீசி வேம்பு போல் வேரூன்றி வாழை போல் பயனுற்று வாழ்வது இனிது.தங்கம் போல் மதிப்புடன் வெள்ளி போல் கருக்காமல் முத்து போல் தூய்மையுடன் வைரம் போல் ஒளிவீசி வாழ்வது இனிது.

Read More

ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும் போது நல்ல குழந்தைகள் தான். எந்த இடத்தில் யாரிடம் குழந்தை பிறக்கிறார்களோ ?அவர்கள் வளர்ப்பை பொறுத்தே! வளர்கிறார்கள். ஒரு சிலரிடம் களிமண்ணைக் கொடுத்து, ஏதாவது செய்யுங்கள் என்றால் அவரவர் எண்ணப்படி ஒருவர் பொம்மை செய்திருப்பார், ஒருவர் விநாயகர் செய்திருப்பார், ஒருவர் கட்டவண்டி செய்திருப்பார், ஒருவர் விளையாட்டு சாமான் செய்திருப்பார் இப்படி அவரவர் எண்ணப்படி அந்த களிமண் உருவம் ஆகி இருக்கும் .அது போல் தான் குழந்தையும் வசதியான வீட்டில் பிறந்த குழந்தை ஆடம்பரமான பொருளை அனுபவித்து வளரும். வசதி இல்லாமல் ஏழ்மையில் பிறந்த குழந்தை அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வளரும். நடுத்தர வீட்டில் பிறந்த குழந்தை அவர்கள் வளர்க்கும் விதத்தில் வளரும் இதில் ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .ஒரு வீட்டில் அக்குழந்தையின் பெற்றோர் எப்படி இருக்கிறார்களோ!அவர்களைப் பார்த்து வளரும் குழந்தை பெற்றோர்களைப் போன்றே வளர்வார்கள். ஒரு சில குழந்தைகள் மட்டுமே வேறுபட்டு…

Read More

ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் மண்ணுலகில் பிறப்பு எடுக்கின்றது. பறவை தனக்கான ஒரு கூடுகட்டி அதில் முட்டை போட்டு அடைகாக்கிறது. காற்று, மழை, புயல் இவற்றைக் கடந்து பத்திரமாக குஞ்சு வந்தால் தாய்மையில் மகிழ்ச்சி அடைகிறது. அப்பறவை உணவு சேகரித்து குஞ்சுக்கு வாயில் ஊட்டி விட்டு இறகு முளைக்கும் வரை பாதுகாத்து ,பின் தானே உணவு தேட பயிற்சி கொடுக்கிறது .ஒரு பறவையை கவனித்துப் பார்த்தால் தெரியும். சிறு பறவை என்று அற்பமாக கூட நினைப்பவர்கள் உண்டு. அதன் பண்பு தனது ஜோடி பறவையுடனே சுற்றும் கூடுகட்டும், முட்டை போடும், அடைகாக்கும் ,குஞ்சு பொரிக்கும் ,உணவு கொடுத்து வளர்க்கும், பறக்க பயிற்சி கொடுக்கும் ,முழுமை அடையும் வரை அதன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்.பின் விட்டுவிடும் .சிறு பறவை தனது வாழ்நாள் சாதனை அது .செம்மையாக செய்கிறது. காற்று புயலுக்கு முட்டை உடைந்தால், குஞ்சு கீழே விழுந்தால், அதன் பின் அதை சேர்க்காது.…

Read More

சூப்பர் ப்ளூ சந்திரன் இரவில் பூமிக்கு மிக அருகில் தெரிந்தது. இந்த முழுமதி பூர்ண சந்திரன் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் .தமிழகத்தில் மேகமூட்டத்தில் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவிலுள்ள மினசாவில் வீட்டிற்கு மேல் இருப்பது போன்று பூமிக்குமிக அருகில் நிலவைப் பார்த்த மகிழ்ச்சியுடன் ‘படம் ‘எடுத்து எல்லோரும் பார்த்து, நன்மையும் மன மகிழ்ச்சியும் அடைய பகிரப்பட்டது.

Read More

விழி இழந்த ஒருவன் விரஓடும் ரயிலில்க்தி என்னும் கடலில்! முயற்சி என்னும் படகில் ஏற விழாமல் கரை சேர்ந்தான். தண்ணீர் குருவி சத்தம் தன்னம்பிக்கை ஊட்டும் சத்தம் அனைவரும் விரும்பும் சத்தம் அவன் வாழ்வில் ஒளி வீச… கால் இழந்த சிறுவன் இசை கற்க விரும்பி ஓயாது உழைத்து ஒயிலாக அரங்கேறியது ரயில் சபாவில். ஊனம் என்பது உடலுக்கு முயற்சி அவன் மனதிற்கு வெற்றி அவன் வாழ்விற்கு காலம் கனிந்தது அப்போது.

Read More

கற்பது கடலளவு கலைமகளே வீணையுடன் சுரக்கும் சுணை போல் சுரப்பதுவே கற்பனை இசைக்கும் கீதமே இனிமையின் ஊற்று வடிக்கும் கவிதையே வாழ வைக்கும் பாட்டு உடலில் உயிராய் இசையை நேசித்து வாசிக்கும் நாதத்தை வான்புகழ மீட்டு இசையின் இனிமையாய் வாழ்வே அமைத்து காற்றின் அலைகளில் பரவட்டும் உங்கள் புகழ்.

Read More

ஏடுகளை புரட்டினால் பழைய பாரதம் தெரிகிறது ஒற்றுமையில் விளக்கம் புரிகிறது பழைய ஏட்டிலே! கண்ணகியின் கதறல் கலங்க வைக்கிறது மணிமேகலையின் கதை மனதைத் தொடுகிறது. ஔவையின் பாடல்கள் அசர வைக்கிறது பாரின் பெருமை பார் புகழ்கிறது. வள்ளுவரின் குறளினில் உலகம் உய்க்கிறது எல்லோரும் மடிந்தார்கள் உனக்கு மரணம் இல்லை. உடலை மறைக்க ஆடை அழகு உள்ளத்தில் ருசிக்க ஏடு அழகு!சாதி மத பேதம் இன்றி சுற்றி வரும் ஏடு நீயே !உன்னுடன் ஒன்றி அழவும் செய்வர் சிரிக்கவும் செய்வர் சிந்திக்கவும் செய்வர் நூலகத்தில் உன்னை பூட்டி வைத்தாலும் நுண்ணறிவை மக்களுக்கு பரவச் செய்வாய்.

Read More

குழந்தையாய் துள்ளித் திரிந்த வள் குமரியாய் கனவு கண்டவள் மருமகளாய் வரும் போது மகிழ்ச்சி மருட்சியுடன்வருகிறாள். குடும்பத்தில் உள்ளவர் குணங்களை குறுகிய நாளில் புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்ல தயாராகிறாள். குடும்ப நன்மைக்காக ஆழமாக சிந்தித்து குறைகளை நிறையாக்கி குதூகலப் படுத்துபவள் இம்சை படுத்தினாலும் அவர்கள் இடத்தும் இரக்கம் காட்டி இழுத்து போடுபவள். சலிக்காமல் உழைத்து சகசமாக இருப்பவள் சங்கடங்கள் தீர்க்கும் மூலிகையாய் இருப்பாள் மங்கல கரமாக எப்போதும் இருப்பாள் குத்து விளக்காய் பிரகாசிப்பாள். கோபமாக பேசுவாள் குணமாக பேசுவாள்குற்றம் சாற்றுவாள் குறைகளை சுட்டிக்காட்டுவாள் சுற்றத்தாருடன் நட்புடன் இருக்க செய்வாள் உறுதியான மனம் படைத்தவள் சாதிக்கப் பிறந்தவள்.

Read More

எதிர்த்து வா வாழ்க்கை என்னும்பயணத்தில் சிறகடி எதிர்த்து வா! பறந்த நான் திரும்பிய என் கண்களுக்கு பழைய சுவடி தெரிகிறது! முயற்சி என்னும் பாதையில் முட்கள் தான் எத்தனை? விலக்கி மேலே வரத்தான் விடியல்கள் எத்தனை…எத்தனை? மர இலைகள் உதிரும் மறுபடி அவை தளிரும் இடையில் வரும் தடங்கள் தவிடு பொடி ஆகும். மலர்களைப் பார் தெரியும் உதிர்வதற்கு முன் வித்தாகும் மழையைப் பார் புரியும் ஒவ்வொரு துளியும் பிறருக்காக கரை சேர் என்று கடல் அலைகள் நிற்குமா? எதிர்நீச்சல் போட்டு எதிர்த்து வா… புரியும்.

Read More