உண்மையாக, நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் பொருள் தூய்மையானது. அந்தப் பொருளைக் கொண்டு வாங்கிய உணவு தூய்மையானது. நீர், மண் கொண்டு உடலை சுத்தம் செய்வது உடல் தூய்மை. விருப்பு, வெறுப்பு, வஞ்சனை, சூது போன்ற விகாரங்கள் அற்று இருப்பது உள்ளத் தூய்மையாகும். மனம், புலன்களுடன் கூடிய உடலைக் குறிப்பது ஆத்மா. ஆத்மா அனுக்கிரகம் பெற்றவர்கள் மனம், புத்தி புலன்களோடு கூடிய உடல் அவர் விரும்பியவாறு செயல்படும். போக விசயங்களில் திரும்ப அவரை சிக்க வைக்காது. இடைவிடாது அவருடைய விருப்பப்படி சாதனைகளிலேயே ஈடுபடும். இவ்வுலகப் பரலோக போகங்கள் அனைத்திலும் பற்றற்ற தன்மை. மேலும், அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் இவற்றில் உள்ள துக்கத்தையும், குறைபாடுகளையும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து இவற்றின் குறைகளை உணர வேண்டும். நான்கு குறைபாடுகள் இல்லாத பொருள் உலகில் இல்லவே இல்லை. ஒரு திடமான வீடு கட்டப்படுகிறது அது தான் அதன் பிறப்பு. பழுதடைந்து விடுகிறது.…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
தற்பெருமை இன்மை, தன்னிடம் இல்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை, எந்த உயிரினத்தையும், எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல். பொறுத்துக் கொள்ளுதல், மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை, சிரத்தையுடனும், பக்தியுடனும், பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல். உள்ளும், புறமும், தூய்மையாக இருத்தல். உள்ளத்தில் உறுதி, மனம் புலன்களோடு கூடிய உடலைக் கட்டுப்படுத்துதல் ஏற்படும். அதாவது தன்னைச் சிறந்தவன், மதிப்பிற்குரியவன், போற்றுதற்குரியவன், மிகப் பெரியவன் என்று நினைத்துக் கொள்வது. மற்றவர் அப்படித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டாட வேண்டும் என விரும்புவது. தான் விரும்பா விட்டாலும் பிறர் அப்படிக் கொண்டாடும் போது மகிழ்ச்சியோடு ஏற்பது. இது தற்பெருமை கொள்வதாகும். தற்பெருமை இல்லாதவனுக்கு மரியாதை, கௌரவம், புகழ், பூஜை முதலியவற்றில் மகிழ்ச்சி இருக்காது என்பது ஒரு புறம் இருக்க. அவற்றில் இருந்து ஒதுங்குவதும், விரக்தியும் கூட உண்டாகும். பெருமை, புகழ், கௌரவம், போற்றுதல் இவற்றை பெறுவதற்காகவே பொருளாசை உடன் பிறரை ஏமாற்றுவது. தன்னை தர்மாத்மா, கொடை வள்ளல்,…
கேசவா! “ரிஷிகளால் பலவாறு சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன். மந்திரம் கண்டவர்கள், சாஸ்திரங்களையும், இயற்றியவர்கள் ரிஷிகள். எல்லாம் விவரங்களையும் தங்கள் நூல்களிலும், புராண இதிகாசங்களிலும், பல விதங்களில் விவரிவாக வர்ணித்து இருக்கிறார்கள். அவற்றின் சாரத்தை கிருஷ்ணன் மிக சில சொற்களில் கூறுகிறார். ருக் வேதம், யாஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் மற்றும் இந்த நான்கு வேதங்களுடைய சம்கிதை, பிராம்மனம் எனப்படுகின்ற இரு பகுதிகள் என்று பொருள். உபநிஷத்துக்கள் அனைத்தும் வேதங்களின் வெவ்வேறு சாகைகளும் இவற்றில் அடக்கம். இவை அனைத்திலும் இந்த தத்துவம் பிரித்துக் கூறப்படுகிறது. இவ்விதம் ரிஷிகள், வேதங்கள், பிரம்மாந்திரங்கள் சான்றுகளாகக் கூறுகிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும், அகங்காரமும், புத்தியும், மூலபிரகிருதியும், பத்துப் புலன்களும், மனமும், புலன்களுடைய நுகர் பொருள்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும் குறிக்கும் எனக் கூறுகிறார் கிருஷ்ணன். கேசவா! பத்துப் புலன்கள் என…
பதிமூன்றாவது அத்தியாயம் உடல், ஆத்ம சம்பந்த யோகம். ‘சேத்ரம்’ என்றால் உடல், ‘சேத்ரக்ஞன்’ என்றல் ஆத்மா இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. அஞ்ஞானத்தினாலேயே இரண்டும் ஒன்று போல் தோன்றுகின்றன. உடல் என்பது சடம். விகாரம் அடைவது, நொடிப் பொழுதே இருப்பது, அழியக்கூடியது. ஆத்மா என்பது அறிவே வடிவானவன். விகாரம் அற்றவன் என்றும் உள்ளவன் அழியாதவன் என்பதை மேலே சொன்னவாறு பிரித்து காட்டுவதால் இந்த அத்தியாயத்திற்கு ‘உடல், ஆத்ம சம்பந்த யோகம்’ என்று பெயர். அர்ச்சுனா! இந்த உடல் சேத்ரம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இதை எவன் அறிகிறானோ அவனை சேத்ரகஞன் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கிருஷ்ணன். அதாவது வயலில் விதைக்கப்பட்ட விதை அதற்குரிய காலத்தில் பயனைத் தருகிறது அது போல இந்த உடலில் விதைக்கப்பட்ட முன் பிறவிகளில் செய்த கர்மங்களின் பதிவுகள் என்னும் விதைகளின் பயன்கள் தக்க சமயத்தில் வெளிப்படுகின்றன. ஆத்மா மிகவும் ஆழமானது. ஆகவே, அதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதை…
கேசவா! இவை எல்லாம் பக்தி யோகத்தின் மூலம் பகவானை அடைந்து விட்டவர்களின் இலக்கணங்கள் என்று கூறுவதன் காரணத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! இந்த அத்தியாயமே பக்தி யோகம் தான். “என்னுடைய பக்தன் எனக்குப் பிரியமானவன். “ என்று திரும்பத் திரும்ப சொல்வதன் நோக்கம். பக்தி யோகத்தின் மூலம் மிகச் சிறந்த சித்தியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை விளக்கவே என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணன். மேலும், உலகியல் ஈடுபாடு, உடல் பேணுதல், கர்மங்கள், செய்தல் இம்மூன்றில் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது. ஞான மார்க்கத்தின் மூலம், மேலான நிலையை எய்திய மகான்களுக்கு இது சிறப்பாகும். அதுபோல மனதையும், புலன்களையும் முழுமையாக அடக்கிப் பற்றின்றி கர்மங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பது கர்மயோகத்தின் மூலம் பகவானை அடைந்தவர்கள் இடையே காணப்படும் என்கிறார் கிருஷ்ணன். எவர்கள் என்னிடம் நம்பிக்கையோடு என்னையே மேலான கதியாகக் கொண்டு மேலே கூறப்பட்ட இந்த தர்மமே உருவான அமுதத்தைப் பயன் கருதாது,…
