கேசவா! அகிம்சை, சமதா, துஷ்டி இவற்றை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது. அகிம்சை, சுகம், துக்கம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி, புகழ்ச்சி, இகழ்ச்சி, மானம், அவமானம், நட்பு, பகை என்ற எத்தனை செயல்கள் வந்தாலும் சம பாவனையுடன் இருப்பது ‘சமதா ‘எனப்படுகிறது. எது நேர்ந்தாலும் அது பிராப்தத்தின் பயன், தெய்வம் தந்தது என அறிந்து எப்பொழுதும் மனமலர்ச்சியுடன் இருப்பது ‘துஷ்டி’ மகிழ்ச்சியாகும். கேசவா! தவம், தானம், கீர்த்தி, அபகீர்த்தி இவற்றிற்கு பொருள் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை கடைப்பிடிக்கும் போது ஏற்படும் கஷ்டத்தை பொறுப்பது தவமாகும். தனக்குரிய பொருட்களைப் பிறருடைய நலனுக்காக வழங்குவது தானம் எனப்படுகிறது. உலகில் எல்லோரும் நம்மை கொண்டாடுவது கீர்த்தியாகும். நம்மை எல்லோரும் இகழ்வது அபகீர்த்தியாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன். கேசவா! சத்யம், தர்மம், அகிம்சை இவற்றிற்கு ஏன் எதிர்மறை சொற்கள் கூறவில்லை என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா!…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
சரணம் சரணம் என்று சொன்னால் சதா காத்து அருள்பவன் வரணும் வரணும் என்று சொன்னால் வந்து முன்னே நிற்பவன்அரணும் மயிலும் உன் அருகில் அன்பாய் இருக்கும் போது மரணம் அருகில் வந்தால் கூட மண்டி இட்டு ஓடும்.
கேசவா! ஒரு செயல் செய்யும் போது புத்தியையும், அறிவையும் கொடுப்பது யார்? என கேட்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! செய்யத் தக்கது, செய்யத் தகாதது, நல்லது, கெட்டது இவற்றைப் பகுத்தறிந்து தீர்மானம் செய்யும் மனதின் செயல்பாடே இங்கு ‘புத்தி’ எனப்படுகிறது. அவ்வறிவைக் கொடுப்பவன் நான் தான் என்கிறார் கிருஷ்ணன். கேசவா! பொறுமை, சத்யம் என்பதை விவரிங்கள் என்கிறார் அர்ச்சுனன். அர்ச்சுனா! பிறருக்குக் கெடுதல் நினைப்பது, தீங்கு செய்வது, பொருளை அபகரிப்பது, அவமானம் செய்வது, தாக்குவது, கடுமையாகப் பேசுவது, திட்டுவது, பலிப்பது, கோள் சொல்வது, தீ வைப்பது, விஷம் கொடுப்பது, கொல்வது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அழிவை உண்டாக்குவது இன்னும் குற்றங்கள் எவ்வளவு இருக்கிறதோ அவற்றில் நமக்குத் தீங்கு செய்பவர் யாராக இருப்பினும், அவரை எதிர்த்து பழிக்குப் பழி வாங்க நமக்குத் திறமை இருந்தாலும் கூடப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருப்பது. பாவம் செய்த குற்றத்திற்காக இவ்வுலகிலோ, பரலோகத்திலோ எதிரிக்கும்…
சங்கு சக்கரக் கரத்தான் மருமகனே! சரண் அடைந்தவரை காப்பவனே! குங்குமம் வைக்கும் பார்வதி மகனே! குலமகள் குங்குமம் காத்தவனே! சங்கரன் கேட்க குருவாக அமர்ந்து! உபதேசம் செய்த முருகா! சங்கொலி கேட்டு சண்டை இட்டாலும்! மன்னித்து விட்ட குமரா!
பத்தாவது அத்தியாயம் விபூதி யோகம் பகவானது விபூதிகளைப் பற்றிய வர்ணனை இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு விபூதி யோகம் என்ற பெயர். நீண்ட தோள்களை உடையவனே அர்ச்சுனா! மிகவும் அன்பு கொண்டவன் ஆன உனக்கு உன் நலம் கருதி நான் எதை மீண்டும் கூறுவேன் என்றால்… என்னுடைய மிக உயரிய பொருள் பொதிந்த சொற்களைக் கேள் என்னுடைய சொற்களை அமுதம் போல் நினைத்து மிகுந்த ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் கேட்டுக் கொண்டு இருக்கிறாய். உன்னுடைய பிரியத்தால் என்னுடைய மனதில் உனக்கு உபதேசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. உனக்கு எது நன்மை பயக்குமோ அதை நான் சொல்கிறேன். என்னுடைய உற்பத்தியை லீலையாக வெளிப்படுவதை தேவ கணங்களும், முனிவர்களும் அறியார்கள். ஏன் என்றால் நான் எல்லா விதங்களிலும் எல்லாவற்றிற்கும் ஆதியாக இருப்பதால் அறிய மாட்டார்கள் என்கிறார். எவன் என்னைப் பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்கு எல்லாம் தலைவன் என்பதை தத்வரீதியாக அறிகிறானோ அவன் மனிதர்களில் மிகவும்…
தமிழ் என்ற மூன்று எழுத்தில் உயிரை வைத்த முருகா! அமிர்தம் உண்ட உடல் போல் ஆனந்தம் கிடைக்கும் முருகா! குமிழும் நீர் போல் சுரந்து குடி காக்கும் முருகா!உமிழும் நீர் கூட உன் பெயர் சொல்லும் முருகா!
10-ஒப்புரவு வொழுகு கலா கேட்டாள். பாட்டி இந்த பண்டிகையினால் என்ன பலன் என்று…. ஆண்டு முழுமைக்கும் இறைவனை வழிபடவும் மனம் ஒருநிலைப்படுத்தவும் நமது முன்னோர்கள் செய்த ஏற்பாடு பண்டிகைகள்… அதைச் சொல்லுங்கள் பாட்டு என்றால் கலா பாட்டியும் சொல்ல ஆரம்பித்தார்கள்… சித்திரையில் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு, ஆனி திருமஞ்சனம் சிவபெருமானுக்கு, ஆடியில் அம்மன் வழிபாடு, ஆவணியில் விநாயகர், கண்ணன் வழிபாடு, சூரிய நாராயணன் ஞாயிற்றுக்கிழமை விரத வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு,நவராத்திரி கொலு வழிபாடு, ஐப்பசி நரகாசுரனை வதம் செய்த தீபாவளி கொண்டாட்டம், கார்த்திகை முருகன் வழிபாடு,மார்கழி எல்லா கோயில்களிலும் பஜனை வழிபாடு, தைப்பொங்கல் பண்டிகை, மாசி மகம் சிவராத்திரி வழிபாடு, பங்குனி உத்திரம் முருகன் வழிபாடு இப்படியே ஒவ்வொரு மாதமும் நமது முன்னோர்கள் இறைவனை வழிபடவும் மன உறுதிப்படவும், நடை பயிற்சி நம்மை சோர்வில்லாமல் உற்சாகப் படுத்திக் கொள்ளவும் வகுத்த இறை வழிபாட்டை நாமும் கடைப் பிடித்து…
அரசர் வெட்கத்தினால் குன்றிப் போய்விட்டார். அவர் விநயத்துடன் சுதர்சன சக்கரத்தைத் துதித்தார். “என் உள்ளத்தில் துர்வாசரைப் பற்றி சிறிது கூட வெறுப்பு கிடையாது என்பது உண்மையானால், எல்லா பிராணிகளுக்கும் ஆத்மாவான பகவான் என்னிடம் கருணை காட்டுவதாக இருந்தால்… ஏ சக்கரமே! நீங்கள் அமைதி அடைய வேண்டும். முனிவரை சங்கடத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டினார். சுதர்சன சக்கரம் அடங்கிவிட்டது. பயம் என்ற தீயில் வெந்து கொண்டிருந்த துர்வாசரும் மனம் குளிர்ந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியும், நன்றி மலர்ந்தன. அர்ச்சுனா! இந்த அருமையான மனிதப் பிறவியைப் பெற்ற நீர் எப்பொழுதும் இடைவிடாது என்னை பத்தி செய். கண நேரம் கூட என்னை மறவாதே என்கிறார் கிருஷ்ணன். மேலும், என்னிடமே மனம் நிலை பெற்ற உள்ளவனாக ஆகிவிடு. என் பக்தனாக மாறிவிடு என்னை பூசை செய்பவனாக இரு. மனம், உடல், புலன் ஆகியவற்றை என்னிடமே புகலாகக் கொண்டு என்னையே அடைவாயாக என்கிறார். அர்ச்சுனா!…
நெருப்பில் பூத்த புதுமலரே முருகா! நெற்றிக் கண்ணின் ஒளியே கருவில் சுமக்காத மகனே முருகா! கருணைக் கடலே செந்தூரா உருவும் சருகும் நீயே முருகா! உருகும் பனி நீயே முருகே மூலவன் கணபதி தம்பியே! முத்தமிழ் தலைவன் நீயே!
அண்டம் காக்கும் முருகா உன் மேல் அன்பு வைத்தேன் கண்கண்ட தெய்வம் குறிஞ்சி தலைவன் கதிர் காம முருகனை மண்டி இட்டு வணங்கி வந்தேன் மனதில் என்றும் நிறைந்தாய் உண்கண் வழியில் ஆசி தந்தாய் உதிரத்தில்உணர்வு தந்தாய்.
