Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

பழத்திற்காக தனித்துச் சென்ற பழனியாண்டவா! பவம் அருக்க பரித்தியாகம் செய்தவனே! பரிபாகம் எனக்குத் தந்த சுப்பிரமணியா! பரிவு கொண்டு பாஇயற்ற அருள்வாய்.

Read More

குறிஞ்சி மலையில் பூத்த குறிஞ்சிக் கிழவனே!குரங்குகள் குறும்புகள் செய்யும் நிலத் தலைவனே! குமரா குண்டலினி கை கூட வரம் தந்தவனே! குருவே! குகனே! சரவணனே! அருள்வாய்.

Read More

குருவே சரணம் சரவணப் பொய்கையில் முக்கண்ணனால் பிறந்தவனே சரணாகதி அடைந்தேன் சர்வம் சமர்ப்பணம் சந்தன அலங்கார விபூதி அலங்காரசண்முகனே சந்தானம் வழிபட அருள்வாய்.

Read More

மூசிக வாகனத்தில் அமர்ந்த மூலப்பொருளே!மூவாமுதல் விநாயகா! அம்மை அப்பனைமுக்கால் வலம்வந்து கனிபெற்ற கணேசா! முருகுவை குருவாக்கி எழுத அருள்வாய்.

Read More

அந்தணரே! நான் பக்தனுக்கும் கட்டுப்பட்டவன். எனக்கு சுதந்திரம் கிடையாது. என்னையே முழுமையாக ஆட்கொண்டு பரமகதி என்று சரணடைந்துவிட்ட பரம பக்தர்களான சாதுக்களின் முன்னே என்னுடைய ஆத்மாவையும், லட்சுமியையும் கூட பொருட்டாகக் கொள்ள மாட்டேன். என் நிமித்தமாக தன் மனைவி, மக்கள், வீடு, சுற்றம், செல்வம், உயிர், இவ்வுலகப் போகம், பரலோக போகம் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு என்னையே ஒரே இலட்சியமாக அடைந்துவிட்ட பக்தர்களை எப்படி நான் கைவிட முடியும். கற்புடைய மனைவி தன்னுடைய இணையற்ற பிரியத்தால் தன் கணவரை வசப்படுத்தி விடுவது போல பயன் கருதாது தமது பக்தியினால் என்னை பக்தர்கள் வசப்படுத்தி விடுகிறார்கள். அழியக் கூடிய சொர்க்கம், என் உலகில் வாழ்வது, என்னைப் போல உருவம் பெறுவது, என்னிடமே ஒன்றி விடுவது போன்ற மோட்சம் கிடைத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். என் பிரியத்துக்கு முன்னே அவை எல்லாம் மிகவும் அற்பமானவை என்று மதிப்பார்கள். அந்தணரே! நீர் உண்மைக் காப்பாற்றிக் கொள்ள…

Read More

துவாதசி திதி ஒரு மணி நேரம் தான் இருந்தது அதற்குள் பாரணை செய்யாவிட்டால் விரதம் முறிந்து விடும். அரசர் பெரியோர்களை அணுகி என்ன செய்யலாம் என்று கேட்டார். ஸ்ரீஹரியின் பாத தீர்த்தத்தைப் பருகி பாராணையை முடிக்கலாம். தவறில்லை, முனிவர் வந்த பிறகு அவருக்கு உணவு அளித்த பிறகு நீங்கள் சாப்பிடலாம் என்றனர். துர்வாசகரும் தனது நித்திய கடமைகளை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு எழுந்தருளினார். தம்முடைய தவ வலிமையினால் அரசர் பாரணை முடித்துக் கொண்டார் என்று தெரிந்து கொண்ட முனிவருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. தவறிழைத்து விட்டவரைப் போல கைகூப்பி எதிரே நிற்கும் அரசரைப் பார்த்து ஆகா! செல்வச் செருக்கினால் திமிரும், தர்மத்தால் அலட்சியமும் வந்துவிட்டனவோ! நீ விஷ்ணு பக்தன் அல்ல உன்னையே ஈஸ்வரனாக நினைத்துக் கொண்டு விட்டாய். எனக்கு உணவு அளிக்காமல் நீ உண்டு விட்டாய்… அதற்குப் பயனை இப்பொழுதே காட்டுகிறேன் என்றவர். சடை முடியில் இருந்து ஒரு முடியை உருவித் …

Read More

சாமதி சாமதி என்பவர் திருமினர் என்ற வைசிய செல்வந்தரின் புதல்வர். இவருடைய மனைவியும், புதல்வர்களும் பணப் பேராசையினால் இவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள். இவர் காட்டிற்கு சென்றார். அங்கு சூரதன் என்ற அரசனைச் சந்தித்தார். மந்திரிகளாலும், சேனாதிபதிகளாலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்டுக் காட்டிற்கு விரட்டப்பட்டவர். இருவருக்கும் ஒரே நிலை. எனவே, இருவரும் சத்,சித், ஆனந்த ரூபியான தேவியை சரணடைந்தார்கள். உலகப் பற்றை அறவே ஒழித்து பகவதியை ஆராதித்தார்கள். மூன்று ஆண்டுகள் இப்படி இவர்கள் பூஜை செய்த பிறகு பகவதி அவர்களுக்குத் தரிசனம் அளித்தாள். வேண்டிய வரங்களை கேட்கும்படி பணிந்தாள். அரசனின் உள்ளத்தில் இன்னும் போக வாசனை இருந்தது. அதனால், அவர் அரச போகத்தை வேண்டினார். சாமதியின் உள்ளத்தில் வைராக்கியம் இருந்தது. உலகம் நொடியில் அழியக்கூடியது. துன்பமயமானது என்று உணர்ந்து இருந்தார். அதனால், அவர் பகவான் மீதான பக்தியினால் பகவானுடைய தத்துவத்தை அறிய விரும்பினார். பகவதியின் கருணையினால் அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது.…

Read More

வேடுவர் தலைவன் குகன் வேடுவ சாதியைச் சேர்ந்த குகன் வேடுவர்களுக்கு அரசனாக இருந்தான். அவன் பகவத் பக்தன் ஸ்ரீராம், சீதாதேவியோடும், லட்சுமணன் உடனும் வனத்திற்கு வந்தபோது. அவன் அளித்த வரவேற்பையும், உபசரிப்பையும் ஸ்ரீராமன் ஏற்றுக் கொண்டார். தமது நண்பனாகவே மதித்தார் அதனால், பரதன் அவனை மார்போடு அணைத்துக் கொண்டான். வணங்க வந்த குகனைத் தூக்கி பரதன் மார்புறத் தழுவிக் கொண்டான். லட்சுமணனைப் போலவே அவனும் சகோதரன் என மதித்து பிரியம் கொண்டான். இந்த உலக உயிர்களில் எவர்கள் நன்னடத்தை உள்ளவர்களோ அவர்கள் உயர்ந்தவர்கள். நல்ல நடத்தை அற்றதீய நடத்தை உடையவர்கள், பாவச் செயல்கள் புரிபவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதுதான் பகவானின் உயர்ந்த, தாழ்ந்த சாதியின் கணிப்பாகும். பகவானுக்கு சேவை செய்வதற்கு பெண்கள் உதவியாக இருப்பதால் அவர்கள் எளிதில் பகவானை அடைந்து விடுகிறார்கள். பெண்கள் பாவ பிறவிகள் அல்ல என்று பொருள் கொள்ள வேண்டும். யாக பத்தினிகள் பிருந்தாவனத்தில் சில அந்தணர்கள் யாகம் செய்து…

Read More

9-ஐய மிட்டுண் காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. மானை வேட்டையாடி தனக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு சென்றுவிடும்.நாளைக்கு என்று சேமித்து வைக்காது. சிங்கம் விட்டுச்சென்ற பகுதிகளை எல்லா விலங்குகளும் சாப்பிட்டு பசியாரும். மனிதர்களும் தான் சம்பாதித்த பணத்தில் தான் சாப்பிடுவதுடன், பிறருக்கும் பசியாற்ற வேண்டும். என்பதை நமது மூதாதைகள் சமைத்த உணவை சிறிது காகத்திற்கு வைத்த பின்பே சாப்பிடுவார்கள். அந்த சிறிதளவு உணவை காகம், குருவி, அணில் போன்றவை உண்டு மகிழும் என்பதைத்தான் ஔவையாரும்…. “ஐய மிட்டுண்” என்று கூறியுள்ளார்கள்.

Read More

பில்வமங்களர் திரும்பி பார்த்தார். சீ! என்று தோன்றியது. பாவி கண்களே! நீங்கள் இருப்பதால்தானே எனக்கு வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறிக் கொண்டே வில்வமுட்களால் இரு விழிகளையும் குத்திக் கொண்டார். மனச்சஞ்சலத்திற்கு கண்களே காரணம் என்று கண்களை தண்டித்து விட்டார் ரத்தம் பெருகியது. சிரித்துக்கொண்டே நர்த்தனார் ஆடிக்கொண்டு ஹரி நாமத்தைச் சொல்லத் தொடங்கினார். உள்ளத்தில் இருந்து சிறிது அழுக்கும் அகன்று விட்டது. பகவானை காண வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இருந்தது. இக்காட்சியைக் கண்ட இருவருக்கும் வருத்தம் ஏற்பட்டது. ஒளி இழந்த ஊனக் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக் கொண்டே இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணனை பிரிந்து இருப்பதை எண்ணி, கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!என்று கூவிக் கொண்டே எங்கே போகிறோம், எங்கே வருகிறோம், என்பது தெரியாமல் காடு, மலை, கிராமம், கிராமமாக அலைந்தார். கண்ணன் இடைச்சிறுவன் வேடம் கொண்டு பக்தனின் மனதைக் கொள்ளை கொள்ளும் தம் தேமதுரத் தீங்குரலால் அவரை அழைத்தார். “பெரியவரே! உங்களுக்கு…

Read More