Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

கேசவா! மற்ற தெய்வங்களை பூஜிப்பது என்பதையும், அது பகவானுடைய விதிமுறை அற்ற பூஜையாகும் என்பது பற்றி விவரியுகள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! இந்த ஆசை நிறைவேறுவதற்காக இந்த தெய்வத்தை வணங்கலாம் என்று சாஸ்திரங்களில் முறை வகுக்கப்பட்டு இருக்கிறது. அந்த தெய்வங்களை அந்த முறைப்படி வணங்குவது தான் மற்ற தெய்வங்களை வணங்குவதாகும். எல்லா தெய்வங்களுமே பகவானுடைய அங்கங்கள் தான். பகவானே எல்லா தெய்வங்களுக்கும் எஜமானன். பகவான் தான் அந்தந்த தெய்வங்களின் ரூபத்தில் வெளிப்படுகிறார். இந்த உண்மை அறியாது அந்த தெய்வங்கள் பகவானிடம் இருந்து வேறுபட்டவை என நினைத்து பயனில் பற்றுடன் அந்த தெய்வங்களை வணங்குவது தான் பகவானுக்கு செய்யும் விதிமுறை அற்ற பூஜையாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன். எடுத்துக்காட்டாக ரத்திதேவ மகாராஜன் வரலாற்றை கூறுகிறேன் கேள் அர்ச்சுனா… ரத்திதேவ மகாராஜன் தம்மிடம் வந்தவர்களையும், பகவானுடைய சுயரூபம் என்று மதித்து, தம் பசியைப் பொறுத்துக் கொண்டு, அன்னதானம் செய்து, பற்றின்றி பகவானை வணங்கி வந்தான்.…

Read More

கேசவா! பக்தி சாதனைகளுக்கு உரிய யோக சேமத்தை நான் தாங்கள் நிர்வகிக்கிறீர்கள் என்பது சரியே, நடைமுறை வாழ்க்கையின் நிர்வாகத்தையும் செய்கிறீர்களா? எனக் கேட்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! தாயையே பற்றிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைக்கு தாயாரை மட்டும்தான் தெரியும். தன் பொருட்களைக் காப்பாற்றும் வழியும் தெரியாது, தேவைப்படும் பொழுது அவற்றைப் பயன்படுத்தவும் தெரியாது, கவலைப்படுவதும் இல்லை. தாயார்தான் குழந்தைக்கு உரிய அத்தனைப் பொருட்களையும் சேர்த்து காப்பாற்றி எப்பொழுது எது குழந்தைக்கு தேவைப்படும் என்று கவனித்து அப்பொருளைத் தேடிக் கொண்டு வந்து கொடுக்கிறாள். இவ்விதம் தன்னிடம் பிரியம் பூண்ட பக்தனுடைய வாழ்க்கையில் உலகியல் வாழ்வுக்கே பகவான் உடைய உபாசனைக்கோ தேவையான பொருட்களை பகவானே நிர்ணயிக்கிறார். அவற்றைக் கொண்டு சேர்க்கிறார், சேர்த்தவற்றை காப்பாற்றியும் கொடுக்கிறார், அதில் உலகியல், ஆன்மீகம் என்றெல்லாம் எவ்விதப் பாகுபாடும் கிடையாது. பக்தனுடைய உண்மையான நலன் பெருகும் வகையில் அதை காக்கும் வகையிலும் இடையூறு நேருமோ, அந்த நன்மைக்கு உரிய பொருட்களைச் சேர்ப்பதும்,…

Read More

முன்பு நாட்டு நாய்கள் வளர்த்தோம். அது வீட்டில் வளர்க்கும் விலங்கு.வீட்டில் ஒருவராய் வளர்ந்தது. குட்டி போட்டால் தெரிந்தவர்கள், பக்கத்தில் எடுத்துச் சென்று வளர்த்தார்கள். நன்றியுடன் வீட்டைக் காத்து வந்தது. இன்று வெளிநாட்டு நாய்களை வளர்த்து. அதற்கான உணவுகளை வாங்கி கொடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டும், சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், வீட்டிற்கு வருபவர்களை குலைத்துக் கொண்டும் இருக்கிறது. முன்பு மீதியான உணவை நாட்டு நாய்களுக்கு வைப்போம்.இப்போது வைப்பது குறைவு. மீதமுள்ள உணவை குப்பையில் ஒரு ஓரத்தில் கொட்டுவோம். நாய்கள் சாப்பிடும். இப்போது குப்பைகளில் கொட்டுவது இல்லை. நாய்களைப் பிடித்து குடும்ப அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்போது அதுவும் செய்வது இல்லை. நாய்கள் பல குட்டி போடும் அவற்றிற்கு உணவுகள் இல்லை. பசியால் நன்றி உள்ள நாயை உதாரணம் காட்டிய மனிதகுலம். இன்று வெறுக்கிறது.நாட்டு நாய்கள் வேட்டை நாய்களாக மாறி மனிதனை வேட்டையாடுகிறது. இதுதான் உண்மை! இதற்கு, அரசும், மக்களும்…

Read More

கேசவா! பவித்ரம் ஓம்காரம் என்று கூறிக் கொள்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! தானே பரிசுத்தமாக இருந்து பிறருடன் பாவங்களைக் களைந்து அவர்களையும் பரிசுத்தப்படுத்துபவன் ‘பவித்ரன்’ ஆவான். பவித்ரமானவனுடைய தரிசனம், பேச்சு, நினைவு இவற்றால் மனிதன் புனிதன் ஆகிறான். மேலும், ஜபம், தவம், விரதம், தீர்த்தம் போன்ற தூய்மை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பரிசுத்தப்படுத்தும் சக்தி என்னுடையது தான். ‘ஓம்’ பகவானுடைய பெயர் பிரணவம் என்பது பிரம்மம். இங்கு பெயரும், பெயருக்கு உரியவரும் நானே! எனவே ‘ஓம்காரம்’ என்று கூறிக் கொள்கிறேன் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! அடைய தக்க பரமபதம், காத்து யாசிப்பவன், எல்லோரையும் ஆள்பவன். நல்லன, தீயன ஆகியவற்றைப் பார்ப்பவன் அனைத்திற்கும் இருப்பிடமும் நானே! புகழிடமும் நானே! கைமாறு எதிர்பார்க்காமல் உதவி புரியும் நண்பன் நானே! அகில உலகமும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்கும் காரணம் ஆன நிலையாசைத் தாங்கு பவனும் நானே! நிதானம், பிரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் நுண்ணிய…

Read More

கேசவா! உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் கூறுபவர்களைப் பற்றி விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் தீர்மானம், நம்பிக்கை, ஆராய்ச்சி, கட்டுப்பாடுகள் எல்லாமே உறுதியாக இருக்கும். பெரிய பெரிய விபத்துக்களோ, இடையூறுகளோ கூட அவர்களை தங்களுடைய சாதனையில் இருந்தோ எண்ணத்தில் இருந்தோ தளரச் செய்ய முடியாது என்கிறார் கிருஷ்ணன். கேசவா! இடைவிடாது உபாசனை செய்வது பற்றி விவரியுங்கள் எங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பகவானிடம் பிரியம் மிகுந்த பக்தர்கள் ஒரு சமயம் கீர்த்தனம் செய்வார்கள். இன்னொரு சமயம் வணங்குவார்கள், இல்லையேல் சேவை செய்வார்கள். ஆக மொத்தத்தில் பகவானை சிந்தித்துக் கொண்டே இடைவிடாது உபாசனை செய்வார்கள் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! வேறு சில ஞான யோகிகள் நிர்குணமான உருவமற்ற பிரம்மமான என்னை ஞான அஞ்ஞானத்தினால் தான் வேறு என்ற எண்ணம் இல்லாமல் ஒன்றிய பாவத்தோடு வழிபட்டுக் கொண்டே இருப்பார்கள். மற்றும் சிலர் பல தோற்றங்களில் விளங்கும் விராட் சுயரூபமான…

Read More

7-எண்ணெழுத் திகழேல் ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தந்தையுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.இளையவனை விவசாயப் படிப்பு படிக்க வைத்தனர். அவன் விவசாயத்தில் உள்ள சுழற்சி முறை, இயற்கை உரம், அதிக விளைச்சல் எப்படி எடுக்க முடியும் என்ற முறைகளை தன் தந்தையுடனும், அண்ணனுடனும் பகிர்ந்து கொள்வான். அவன் சொல்வதை தந்தை ஏற்றுக்கொண்டு செய்ய முன் வந்தாலும், அதை அண்ணன் ஏற்காமல் அவனை பழித்துப் பேசினான்.நாலு எழுத்து படிச்சிட்டேன் என்று எங்களையே குற்றம் சொல்கிறாயா?என படிப்பையும் குறை சொல்லி ஏற்க மறுத்தான். இப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்த்த ஔவை பாட்டி “எண்ணெழுத் திகழேல்” என்று பாடிச் சென்றுள்ளார்.

Read More

கேசவா!அவை என்னை கட்டுப்படுத்துவதில்லை என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். மற்றவர்களுக்கும் பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துயரம், சுகம்,துக்கம் என்று அபிமானம் இல்லாமல் பயனில் கருத்து இல்லாமல் கடமையை ஆற்றுகிறானோ அவன் சிரமமின்றி எளிதாகவே இயல்பாக கர்ம பந்தத்தில் இருந்து விடுபடுவான் என விவரிக்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! தலைவனான என் கண்காணிப்பில் பிரகிருதியானது அசைவன, ஆசையாதன இவற்றோடு கூடிய உலகம் அனைத்தையும் தோற்றுவிக்கிறது. இந்த காரணத்தினால் இந்த சம்சார சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது என்கிறார். கேசவா! பகவானுடைய தலைமையில் பிரகிருதி எவ்விதம் சராசரமனைத்தையும் படைக்கிறது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா விவசாயி தான் தலைவனாக இருந்து கொண்டு பூமியில் விதைகளை ஊன்றச் செய்கிறான். பூமிக்கும் விதைக்கும் உறவு உண்டாக்குகிறான். பிறகு அந்த விதைகளின் தன்மைக்கு ஏற்றவாறு விதவிதமான செடிகளை முளைக்கச் செய்கிறான். அதுபோல, பகவான் தம் தலைமையில் சேதன வர்க்கம் என்ற விதையை படைத்து பூமியுடன் சம்பந்தப்படுத்துகிறார். இவ்விதம்…

Read More

மதுக்கடை பக்கம் போகாதே! மானம் பறந்து போய்விடும் மதியும் தான் கெட்டிடும் மனசும் தான் கெட்டிடும் மதுக் கடை பக்கம் போகாதே! மானம் பறந்து போய்விடும்.குடும்பச் சண்டை வந்திடும் குடிப்பதால் குதூகலம் போய்விடும் குழந்தை மனம் கெட்டுவிடும் குழந்தை வருந்தி வாடி விடும் மதுக்கடை பக்கம் போகாதே! மானம் பறந்து போய்விடும். மூளையும் தான் பாதிக்கும் குடலும் அழுகிவிடும் கைகால் நடுக்கம் வரும் மது குடிக்கும் பழக்கத்தாலே! மதுக்கடை பக்கம் போகாதே! மானம் பறந்து போய்விடும். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சாராயக் கடையில் கொடுக்காதே! சாமியை சரண் அடைந்தாலும் சங்கடம் போய்விடும். மதுக்கடை பக்கம் போகாதே! மானம் பறந்து போய்விடும். சாதிக்க பிறந்த நீ! சாக்கடையில் கலந்த பால் போல் வாழ்க்கையை இழந்து விடாதே! மதிப்பில்லா உயிரை காத்து விடு.மதுக்கடை பக்கம் போகாதே! மானம் பறந்து போய்விடும்அன்புடன் டாக்டர் செந்தமிழ் வாணி ச. மல்லிகா10.11.2024.

Read More

கேசவா! முன்பு எல்லா பூதங்களும் தம்மிடம் உள்ளன என்று கூறினீர்கள். இப்போது தம்மிடம் இல்லை என்கிறீர்கள். முரண்பட்ட கருத்தை கூறுவதன் நோக்கம் என்ன என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதன் மூலம் எனது ஈசுவரத் தன்மையான யோக சக்தியை அறிந்து கொள். மனிதனுடைய நோக்கில் உலகம் என்று ஒன்று இருக்கும் வரை அவை எல்லாம் என்னிடமே உள்ளன. என்னைத் தவிர இவ்வுலகிற்கு வேற ஆதாரம் இல்லை. ஆனால், மனிதனுக்கு என்னுடைய தரிசனம் கிடைத்து விடும் போது அவன் நோக்கில் என்னைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது. அப்பொழுது என்னிடம் இந்த உலகம் இல்லை என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எவ்வாறு ஆகாயத்தில் எப்பொழுதும் உள்ளதோ, அவ்வாறே எல்லா உயிரினங்களும் என் சங்கல்பத்தில் உண்டாவதால் என்னிடம் உள்ளன என்று அறிந்து கொள் என்கிறார். கேசவா! இங்கு வாயு எங்கு செல்லக்கூடியது. பெரியது என்று கூறுவதன் கருத்தை விவரிங்கள்…

Read More