Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
14-உணவு உண்ணும் போது:- குழந்தைக்கு உணவு கொடுக்க பொறுமை அதிகம் வேண்டும். நாம் கொடுக்கும் உணவை குழந்தை உடனே சாப்பிடுவது இல்லை. சில குழந்தைகள் வாயில் வாங்கி மிக மெதுவாக சாப்பிடும். சில குழந்தைகள் தண்ணீர் சிறிது, சாதம் சிறிது என வாங்கி முழங்கும். சில குழந்தைகள் சாப்பாட்டை வாயில் அப்படியே வைத்துக்கொண்டு விளையாடும். சில குழந்தைகள் வாயில் வேகமாக வாங்கி பூ…பூ.என துப்பும் இப்படி எத்தனையோ ரகங்கள் குழந்தைகள் சாப்பிடுவதில். ஒவ்வொரு தாய் மார்களுக்கும் உள்ள பெரிய கவலையே குழந்தை சாப்பிட மாட்டேன் என்கிறது என்பதுதான். சில தாய்மார்கள் குழந்தைக்கு மிட்டாய், பிஸ்கட் ,ராகிமால்ட் ,பால் எப்படி ஏதோ ஒன்று கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைக்கு இதுவே வயிறு நிறைந்துவிடும். இதற்கு மேல் சாப்பாட்டை போட்டு சாப்பிடு என திணிப்பார்கள். அந்தக் குழந்தை வாயில் வாங்கிக் கொண்டு முழங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல். ஓ…ஓ..என உமட்டிக் கொண்டு கண்ணில் நீர்…
