Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

12-குழந்தை கவனிப்பு  குழந்தைக்கு மென்மையான பருத்தி துணிகளால் ஆன துணிகளை உடுத்து விட வேண்டும். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு மிருதுவானதாக இருக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றி பயன் படுத்தக்கூடாது. அவர்களுக்கு துடைக்கும் துண்டும் மிருதுவானதாக இருக்க வேண்டும். அழுத்தமான துணிகள் கொண்டு துடைக்கும் போது குழந்தைக்கு உடல் வலி உண்டாகும். குழந்தையுடன் வெளியில் செல்லும்போது குழந்தைக்கு வேண்டிய துண்டு சிறு துணிகள் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும் போது வெதுவெதுப்பாக எண்ணையை சூடு செய்து தேய்க்க வேண்டும். குளித்தபின் மென்மையான தொண்டால் துடைத்து. கை மடிப்பு, கால் மடிப்பு, கழுத்து போன்ற பகுதிகளில் பவுடர் போட்ட பின் உடல் முழுவதும் முன்பின் பகுதியில் போட்டு கைகளால் மென்மையாக தேய்த்து விட வேண்டும். ஒரே இடத்தில் தூங்க வைப்பது நல்லது. தலையை மென்மையாக கோதி விடுவது தட்டிக் கொடுப்பது போன்ற செயல்களால் அம்மாவின் அரவணைப்பை உணர்ந்து…

Read More

11-தாய்ப்பால் அவசியம் தாய்ப்பாலில்” லேப்பா தெரின்” என்ற பொருள் இருப்பதாக முன்பே விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளார்கள். இது “வைரஸ்களை அழிக்கிறது” என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள். அதாவது, குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ்களிடம் இருந்து குழந்தைகள் பாதுகாக்கிறது தாய்ப்பால்.“ ரோட்டோ” எனப்படும் வைரஸ் ஆறு மாதங்களில் இருந்து மூன்று வயது வரையிலான குழந்தைகளை தாக்கி வயிற்றுப் போக்கு ஏற்படுத்துகிறது. இதனால், குழந்தைகள் மரணம் அடைகிறார்கள். தாய்ப்பாலில் உள்ள “லோக்டோ தெரின்” வைரசை எதிர்ப்பதால் மரணத்தில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள். இதனால் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் புரிகிறது. தாய் சந்தோசத்துடன் குழந்தையை இருகைகளாலும் அரவணைத்து நெஞ்சோடு சேர்த்து அனைத்து பாசத்துடனும் மனநிறைவுடனும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது தான் பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பால் அதிகரிக்க நாம் சாப்பிடும் உணவில் இரும்பு சத்து, கால்சியம், புரதச்சத்து, வைட்டமின்கள், தாது சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ள உணவை உண்ண வேண்டும்.…

Read More