Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
16-நோய் தாக்காமல் தடுப்பது: அடிக்கடி நோய் தாக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சத்து குறைந்து விடுகிறது. அதனால் நோய் ஏற்படும் போது போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக நோய் ஏற்பட காரணமாகிறது. குறிப்பாக குழந்தைகள் வளரும் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் வயிற்றுப்போக்கு அதிகம் பாதிக்கிறது. தவழும் போது, உட்காரும்போது, நடக்கும் போது, பல் முளைக்கும் போது இப்படி ஒவ்வொரு குழந்தையின் செயலுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.அச்சமயத்தில் பயந்து விடாமல் காரணத்தை தெரிந்து கொண்டு உணவு பழக்க வழக்கங்களை மாற்றி சரி செய்ய வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீர் இழப்பு அதிக அளவு ஏற்பட்டு விடும். அச்சமயத்தில் நீர் கொடுக்க வேண்டும். ‘காலரா’ தடுப்பூசி போட்டு வரும் முன் காப்பது நலம் தரும்.
