Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
17-குழந்தையுடன் பழக்கும் விதம் குழந்தை பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை: 1-நன்குஅழுகிறதா? 2-ஒரே சீராக சுவாசிக்கிறதா?3- கை, கால்களில் நிறம் என்ன? நீளமா, இளம் ரோஜா?4- சிறுநீர், மலம் நன்றாகக் கழிக்கிறதா?5- சரியான எடை உள்ளதா? 6-தாயின் இரத்த வகையை சேர்ந்ததா? என்பன போன்றவை முதலில் கவனிக்க வேண்டும். குழந்தைகளிடம் பழகும் விதம்:- குழந்தைகள் பூ போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள். பூவை எவ்வளவு மெதுவாக தொடுகிறோமோ அதுபோல் அவர்கள் மனதை நாம் மெதுவாக தொட வேண்டும். பெற்றோரின் பிரதிபம்பம் தான் குழந்தைகள். பெற்றோர் எவ்வழியோ? குழந்தைகளும் அவ்வழியையே பின்பற்றுகிறார்கள்.எனவே, குழந்தைகளிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். நாம் என்ன செய்கிறோம் என்பதை நம் குழந்தைகள் மிகக்கூர்ந்து பார்க்கக் கூடிய நுண்ணறிவை பெற்றவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குழந்தை தானே இவர்களுக்கு என்ன தெரியும் என உதாசினப் படுத்தவும் கூடாது. நாம் குழந்தைகள் குறும்புகளையும், வளர்ச்சிகளையும்…
