Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
19-குழந்தை குறும்பு குறும்பு செய்தால் தான் அவர்கள் குழந்தைகள். குறும்பே செய்யவில்லை என்றால் அவர்களுக்கும், பெரியவர்களுக்கும் என்ன வேறுபாடு? குழந்தை என்றாலே குறும்பு இருக்க வேண்டும். குறும்பு செய்யும் குழந்தைகள் தான் பிற்காலத்தில் மேதைகளாக ஆகிறார்கள். குறும்பு செய்யும் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சுதந்திரமாக இருப்பதால் மன அழுத்தமோ, பயமோ அவர்களை தாக்குவதில்லை. மேலும், குறும்புகள் செய்யும்போது உடல் மனம் செயல்படுவதால் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிவும் வந்து விடுகிறது. “கரும்பு இனிக்கும் ரசித்தால் குறும்பும் இனிக்கும்” குறும்பு செய்யாதே,குறும்பு செய்யாதே… என அடக்கி வைக்கும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உட்படுகிறார்கள். இங்கேயே இருக்க வேண்டும். இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என அடக்கும் முறையால் அடக்கும் குழந்தைகள். சுயமாக எதையும் செயல்பட பயந்து அப்படியே உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம். சென்றால் சென்ற இடம் என இயங்கும் இயந்திரமாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் பெற்றோர் தங்கள் குழந்தை…
18-குழந்தையின் உற்சாகம்:- குழந்தைகளின் கைகளில் பென்சில், பேனா, சாக்பீஸ் கிடைத்தால் போதும் உடனே சுவர், கதவு, தரை என கோடு போட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த சமயத்தில் சிலேட் அல்லது நோட்டில் நீ அழகாக எழுதுகிறாய் கோடு போட்டு வரைகிறாய் இதில் வரைந்து காண்பி எனச் சொல்லிப் பாருங்கள். நோட்டு முழுக்க சிலேட் முழுக்க முட்டையும் கோடும் கிறுக்கல்களாக இருக்கும். அதை வாங்கிப் பார்க்கும் பெற்றோர் சத்தம் போடாமல்…குட்டி பெண் பூ மாதிரி வரைந்து விட்டாளே, நீ வரைந்த பூவை நான் தலையில் சூடிக் கொள்கிறேன். எத்தனை கோடு போட்டிருக்கிறாய் என்று எண்ணலாம் என்று எப்படி சொல்லி பாருங்கள் குழந்தையின் முகத்தில் நூறு வாட்ஸ் பல்பு பிரகாசிக்கும். இப்படி அவர்களின் கரங்களில் பேனா, பென்சில் கொடுத்து எழுதும் பழக்கத்தையும், வரையும் பழக்கத்தையும் ஏற்படுத்தலாம். பொருள்களை காட்டி இது என்ன? இதன் பெயர் என்ன? என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்துக் கொண்டே…
