Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

187-புரியாமல் செய்து புலம்புவதை தவிர்த்து புரிந்து சிறிதேனும் செய். 188-என்ன அலை கடல் போன்றது கடுகாகும் அடக்கி ஆள்.289- வருமானம் வரும்போது சேமி ஓய்தபோது செலவு செய். 190-வாழ்க்கை என்னும் தேர் நகர அச்சாணியாக இறைவன் அருள். 191-உழைப்பு அறியா இளமை கூட வறுமைக் கோட்டில் முதுமை. 192-வெளிநாட்டு பொருளை எரித்தது அந்தக் காலம் உலகமயமாகி விட்டது இன்று.

Read More

181-தனக்காக என்றால் தயக்கம் காட்டு நாட்டுக்காக என்றால் செய்.182- குழம்பிய மனம் கலங்கிய குட்டை தெளியும் போது செய். 183தகுதி இல்லாதவனிடம் உதவிக்குப் போகாதே பொறுத்திரு போன பின். 184-சிக்கல் வந்தால் சிதைந்து போகாதே சினம் நீக்கிச் செய். 185-வண்ணம் போல் மனித குணம் கட்டுப்படுத்தாதது அறியாமை குணம். 186-மாற்றம் என்பது காலத்தின் கட்டளை வளைந்து ஏற்றால் உயர்வு.

Read More

சிந்திக்க சில நூறு175-சொன்னதை சொல்லும் கிளியாய் இராமல் சிந்தையில் புதிதாய் அறிவோம். 176-பழமையும் புதுமையும் கலப்பு மணமாய் புதிய கோணத்தில் பிள்ளை. 177-இல்லாத நோய்க்கு மருந்து உண்பவன் இருக்கும் வாழ்வை தொலைத்தவன்.178- செயல் என்பது சிந்தனையில் தொடக்கம் செழிப்பு என்பது முடிவு. 179-உள்ளம் உற்சாக ஊற்றாய் இருந்தால் உழைப்பு விளையாட்டுக் கருவி .180-மணி பார்த்து செய்பவன் மனிதன் பார்க்காமல் செய்பவன் மேதை.

Read More

169-உறுதி என்னும் ஊன்றுகோல் பற்றி உயரத்தை எளிதாக கடந்திடு.170- அன்பான அணுகுமுறை அனைவரையும் இழுக்கும் ஆகாயப்பூ போல இருந்தால். 171-பயணம் என்பது நெடுந்தூரம் பார்த்து நடப்பது  நம தாகும். 172-குழந்தையுடன் குழந்தையாய் மாறும் போது மலர்ந்த மலராய் மனம்.173- உழைப்பவர் கண்டு ஏளனம் செய்யும் ஒதுக்கி இலக்கை நோக்கு.174- கடனே என்று செய்யும் செயல் கருகும் சருகாய் மாறும்.

Read More

163- வாழ்த்த கூட மனம் வேண்டும் வலிமையான நெஞ்சில் பிறக்கும். 164-முடியும் என்ற எண்ணம் பிறந்தால் முயற்சி தன்னால் வரும். 165-தேடல் என்பது இருக்கும் வரை வளர்ச்சி அதன் வசம்.166- சாதகமற்ற சூழ்நிலையை சுக்கு நூறாக்கி மெழுகுவர்த்தி புதிய வார்ப்பாய்.167- உறவு என்பது உயர்வின் மதிப்பீடு நட்பு ஏழ்மையிலும் பொக்கிசம். 168-மண்ணாகும் உடம்பை உயர்வாய் எண்ணி தொலையாதீர் மறையாத வாழ்வை.

Read More

157-பண்பட்ட மனிதன் பிறரை என்றும் புண்படும் வார்த்தை பேசான்.158- குறையில்லா மனிதன் தேடுவது வீண் நிறைவாய் பார்ப்பது மேல்.159- விவாதம் என்பது அறிவுக்கு வேண்டும் விரையம் செய்து வீணடிக்க வல்ல. 160-நல்லவற்றை கேட்க காதுகளை கொடுப்போம் நலனை நாடி மௌனம் காப்போம்.161- எமன் கூட நம் சொல் கேட்பான் சாவித்திரி போல் துணிவால்.162- சபதம் என்பது உயர்வின் அச்சாணி சாதனை என்பது அதன் வழி பிறக்கும்.

Read More

151-உடல் நலம் காத்தல் அவசியம் உழைக்க உதவும் ஊடகம்.152- தெளிவு இல்லா மனதில் என்றும் தேய்பிறை தான் வரும். 153-முயற்சி செய்ய வயது முக்கியமில்லை மனம் தான் முக்கியம்.154- பறவை குஞ்சுக்கு பறப்பது இலக்கு பகுத்துணர்ந்த மனிதனுக்கு நற்செயல். 155-பிறருக்கு கொடுத்து வாழ்வது மகிழ்ச்சி பறித்து வாழ்வது இகழ்ச்சி.156- விதைத்த அன்றே அறுவடைக்குப் போக முடியாது உழைக்க வேண்டும் விளைய.

Read More

145- நிதானமாக எரியும் திரி வெகுநேரம் எரியும் செயல் நிதானமாய் வாழும். 146-ஒதுக்க நினைப்பவர் உயரவழி வகுப்பர் பள்ளமும் பல்லாக்காகும் பொறுமை.147- வறியவர் எல்லாம் வழியவர் ஆவதால் வாரி வழங்கும் வள்ளல்.148- பள்ளிப் படிப்பு பட்டம் தரும் அனுபவப் படிப்பு அறிவு.149- புரிந்து கொள்ளும் திறன் இருப்பின் பாராட்டும் பண்பு நொடியில்.150- பழமை மதித்தல் போற்றத் தகுந்தது புதுமை ஏற்றல் வளர்ச்சி.

Read More

சம்போ !சுயம்போ !சுயம்போ! நர்த்தன நாயகா! சதாசிவா! சம்போ !சுயம்போ !சுயம்போ! மகாதேவா! ஈசா !நேசா ! நேசா!( சம்)கையிலை மலையின் பனிநாதா ! சுயம்பு லிங்கா பனிலிங்கா! தைரியம் கொடுக்கும் சிவநேசா !நர்த்தனம் ஆடும் ஈசா!சர்வேசா! சர்வேசா (சம்)சிவராத்திரி நேசா! அபிஷேகப் பிரியா ! நான்கு கால அபிஷேகப் பிரியா !நவராத்திரி அம்பிகை நேசா! ஈசா ! நாட்டியம் ஆடும் நடராஜா! சக்திநேசா! சக்திநேசா! (சம்)பனி லிங்கா! நந்தி நேசா ! ஏழு சுரங்களில் ஆடும் ஈசா! பனிப் புயலில் ! காட்சி தந்தாய்! ருத்ர தாண்டவம் ஆடிய நேசா! (சம்)

Read More

139-தீபம் ஏற்ற விளக்கு வேண்டும் சாதனை புரிய இலக்கு.140- தன்னை அறிந்த மனிதன் தான் தரணியில் உயர்வு கொள்வான். 141-திட்டம் என்னும் திறவுகோல் கொண்டு திடமான வாழ்வை திற.142- நெருப்பு பிளம்பை தொட நினைக்காதே தீயசெயல் நினைக்காதே தொடர.143- சபதங்கள் செய்வதில் சாவித்திரியாய் இரு சரணடையும் வெற்றிக் கனி.144- புயல் வருவது இயற்கையின் சீற்றம் இயலாமையின் சீற்றம் மனிதன்.

Read More