133-நிற்கும் மரம் நகரும் ரயில் பயணத்தில் மரமானால் நகர்ந்துவிடும் காலம். 134-புள்ளி வைத்தபின் மறந்த கோலத்தை சரிப்படுத்தும் திறமையே ஆற்றல்.135- நேரம் போகவில்லை என புலம்புபவன் நேரத்தின் பயனை அறியான்.136- உடல் உழைப்பு வருத்தம் தான் உயர்வு தர இனிக்கும்.137- உணர்வே ஒருவரை உயர்த்தி விடும் எண்ணமே எளிதாய் செயல்.138- விழிப்பு என்னும் வேர் ஊன்றி விடியல் மரம் வளர்ப்பு.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
127-முதலாளி ஆக கடனை வாங்கினால் முதலை போல் விழுங்கும்.128- மலர் மலரும் மணக்கும் வாழ்த்தும் உழைப்போம் உயர்வோம் வாழ்வோம்.129- நல்ல வார்த்தைகள் நட்பை வளர்க்கும் நாடா உறவு தேயும்.130- பிறர் செய்யும் குற்றம் மறந்து நன்மை நினைத்து மகிழ்வோம். 131-சோம்பலும் புலம்பலும் வீழ்வின் அறிகுறி சோதனையிலும் சாதனை வெற்றி. 132-பாராட்டு என்பது உதட்டில் வருவதல்ல உள்ளத்தில் வருவதே உயர்ந்தது.
121-எண்ணமே செயலானால் வெற்றியே வாழ்க்கை எண்ணமே உடைந்த கண்ணாடி. 122-அறிவு என்பது நெருப்பு போன்றது தெளிவு நீர் போன்றது. 123-மனிதரை நேசித்ததால் கடவுளாய் மனிதன் பாறையை செதுக்கியதால் கடவுள். 124-தேவைக்கு பொருள் வாங்குதல் வேண்டும் தேவை அற்றதைக் குறை.125- சும்மா கொடுத்தாலும் பொருளை சேர்க்காதே சுகமாய் இருக்க வழி. 126-எதிர்ப்பு என்பதை எதிர் கொள்ள துணிவு தோள் கொடுக்கும்.
115-வாழ்ந்து மடிவது ஒரு முறை வாழ வைப்பது பலராக.116- உடைந்த குடத்தில் நீர் நிற்காது மாற்றான் திறமை உதவாது.117- நமது செயல் பிறருக்காக இருப்பின் பாராட்டை விரும்பாது மனம்.118- கடமையை செம்மையாய் செய்யும் போது கடவுளே செய்ய வருவார்.119- காலத்தில் செய்வது வெற்றியின் வாயில் கடந்து செய்வது தோல்வி.120- மனம் குழந்தையானால் உடல் இளமையாகும் மனம் குழப்பமானால் முதுமை.
109-குறிக்கோள் இல்லாத வாழ்க்கைப் பயணம் வழியில்லா பயணம் ஆகும்.110- வாழைமரம் வழுக்கும் குலை இனிக்கும் செயல்சறுக்கும் முடிவு இனிக்கும்.111- உள்ளத்தில் சக்தி ஆற்றல் மிக்கது உணர்ந்தால் சுடராய் மிளிரும்.112- நல்ல செயலை செம்மையாய் முடித்து செருக்கு இன்றி செல். 113-பிறர் செயல்கள் செய்ய கட்டளையிடாதே பணிவுடன் நடந்து காண்பி.114- சரித்திரம் படைக்க சவாலை சந்தி சாதனை புரிய வழி.
103-சுயநலமாய் சிந்திப்பவன் சுருங்கிப் போவான் பொதுநலவாதி செத்தும் வாழ்வான். 104-அகங்காரம் எங்கு தலை தூக்குகிறதோ அழிவும் பிறந்து விடும். 105-தெளிந்த நீர் முகம் காட்டும் செயல் மனம் காட்டும்.106- துன்பம் வாயிலை தட்டும் போது இன்பம் நிழலாய் பின்னால்.107- முழு மனதுடன் எதையும் செய்தால் முழு வெற்றி நிச்சயம்.108- வளவள பேச்சு வறட்சி தரும் குறைந்த பேச்சு குளிர்ச்சி.
97-திருப்தி என்பது மனதின் நிறைவு மன உளைச்சல் அதிருப்தி. 98-சிந்திப்பது சிறப்பாக இருந்தால் போதும் சிகரம் கூட உன்னருகில்.99- அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு இறைவன் வாசம் செய்கிறான்.100- உன்பார்வை ஏழையின் பால் இருந்தால் இறைவன் பார்வை உன்மேல். 101-வீரம் என்பது பேச்சில் அல்ல விவேகமான நல்ல செயலில்.102-உழைப்பு என்னும் துடுப்பு இருந்தால் வேலையெனும் படகு கிடைக்கும்.
91-வெற்றிப் படியை தொடும் நேரத்தில் தளராதீர் முயலுங்கள் இன்னும்.92- ஒருவர் தவறாய் பேசினால் பொறுத்துக்கொள் நட்புடன் உதவி செய். 93-ஒருவர் பார்வையில் அற்பமாய் தெரிவது மற்றொருவர் பார்வையில் அற்புதமாய். 94-வேப்பமரம் ஒன்று மருத்துவ குணம் பல பலசெயல் மனிதனின் சாதனை.95- உதவாது என்று எறிந்த பொருள் மற்றொரு இடத்தில் உதவியாய்.96- சிந்தையில் ஒன்றை ஆழமாய் நிறுத்தி சீராய் செய்தால் வெற்றி.
85-பிறரை நம்பினால் வறுமை நிழலாய் தன்னம்பிக்கை நிழல் சுடராய். 86-நட்பும் ஒருநாள் பகை கொள்ளும் பகையும் நட்பு கொள்ளும். 87-கவலையை தூக்கி கல்லாய் எறியுங்கள் முன்னேற்றம் முழுமனிதர் ஆக்கும். 88-உறவில் கடன் கொடுத்து திருப்பிக் கேட்டால் உடனே பகை. 89-தோல்வியும் துன்பமும் சோம்பேறியின் சொத்து உழைப்பாளியிடம் நெருங்குவது இல்லை. 90-புகழ்வதும் இகழ்வதும் மனித குணம் சமமாய் பாவிப்பது தெய்வீகம்
79-வரவை அதிகப்படுத்த உழைப்பவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் செலவை. 80-உழைப்பின் அருமை புரிந்தவன் உயர்வான் சோம்பல் வெம்பும் சுகம். 81-முகத்தில் நாக்கு பொய் பேசும் கண் உண்மை பேசும். 82-அன்புடையோர் கண்டு எமனும் அஞ்சுவான் மரணம் தள்ளிப் போகும். 83-ஆடை இல்லாதவன் அரை மனிதன் பணம் இல்லாதவனும் அப்படியே! 84-பாலைவனப் பயணத்திற்கு நீர் சேமிக்கும் ஒட்டகம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவம்.
