Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

13-தன் கருத்தை நளினமாக எடுத்துரைக்க வேண்டும். 14-பிறர் கருத்துக்களை நயமாக மறுக்கும் மாண்பு வேண்டும்.15- கடமையைச் செய் காலம் வாழ்த்தும். 16-வலியவர் முன் பயம் வேண்டாம் 17-வலியவர் முன் எதிர்கொண்டு ஏற்க செய்தல் வேண்டும். 18-மெலியவர் முன் ஆவேசம் கொள்ள வேண்டாம்.

Read More

7-உன்னால் முடியாததை பலருடன் பகிர்ந்து செய். 8-புகழ்வதன் மூலம் திருத்துவது நலம். 9-பாராட்டுதல், புகழ்தல், ஊக்கப்படுத்துதல், தலைமைக் குணம்.10- குறை கூறின் குன்றச் செய்யும்.11- நிறை பார்ப்பின் நிமிர வைக்கும்.12- வெட்டிப் பேச்சும், வீண் அரட்டையும் தோல்விக்கு வித்தாகும்.

Read More

1-நாம் முன்னேற சமுதாயம் முன்னேறும். 2-நல்லுறவு உயர்வுக்கு வழி காட்டும் 3-முரண்பாடு நம்மை முடக்கி விடும் .4-பிறர் மனம் வருந்த பேசாதீர்.5- தீயவை விலக்கி நல்லதை பாராட்டு.6- இருளை அகற்ற விளக்கை ஏற்று

Read More

பத்து விரலின் கூட்டு முயற்சி பளு தூக்கும் முயற்சியில் வெற்றி! ஒருவர் விதைத்த விதை நெல் பலரில் உழைப்பால் அறுவடை நெல்லாய் !ஆசிரியர் ஒருவர் கற்றுத் தருவதால் பலர் வாழ்வில் ஒளிச் சுடர்! கரிக்கும் நீராய் கடல் ஒன்று அடிக்கும் தொடராய் அலைகள் பல !பற்றும் நெருப்பு மிளகு அளவு பரவும் வேகம் புயல் வேகம்! பஞ்சின் நூல் பல வண்ணம் நெய்து உடுத்துவது பலர் தானே !மதங்கள் பல இருந்து வந்தாலும் பிறப்பு என்பது கருவறை தானே !மரங்கள் பல சேர்ந்தால் தானே மழை என்பதை பெற முடியும்! கஷ்டம் என்பதே பல கடந்தால் கடைசியில் வருவது நிறைவு தானே !உழைப்பவன் பலர் சேர்ந்தால் தானே உற்பத்தி திறனை உயர்த்த முடியும் !ஒன்றாய் சேர்ந்த மக்களால் தானே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் !ஒவ்வொரு வீடும் ஒன்று பட்டால் இந்தியன் வாழ்வில் ஒற்றுமை ஓங்கும் !ஒன்று பட்டு வணங்கு நாம்…

Read More

தை மாதம் பூசம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் விழா தைப்பூச விழா. “தைப்பூசம்” என்ற உடனே ஞாபகம் வருவது பழனி ஆண்டவர் சன்னிதானம் தான். முருகன் குடி கொண்டு இருக்கும் மலைகளுக்கு எல்லாம் தைப்பூச விழா சிறப்புத்தான் என்றாலும் பழனி ஆண்டவர் கோவிலுக்கு நடை பயணம் வருவது தான் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும் வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலாஅலைவீசும் திருச்செந்தூர் கடலைப் போல ஆயிர நூறாயிரமாய் அன்பர் கூடி மலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம் மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக் கலைவாழும் பழனிமலை ஆண்டியப்பா கதிகாட்டி மனங்களிலே கனிவாய் அப்பா “எனப் பாடிக்கொண்டு நடை பயணக் களைப்பு சிறிதும் இன்றி சிந்து பாடல்களையும் காவடி பாடல்களையும் பாடிக் கொண்டே வருவதே ஒரு அழகு தான் .”அழகு”என்றால் முருகன். “முருகன்” என்றால் தமிழ் கடவுள். தமிழ் வேறு! முருகன் வேறு !அல்ல முருகனுக்கு தோள்கள் 12 தமிழுக்கு…

Read More

எக்காரணம் கொண்டும் உன்னை மறவாத நிலைவர வேண்டாம் அக்கணமே மாயை விலகி தன்னிலை உணரும் நிலை வேண்டும் திக்கெட்டும் தெரியும் உன் புகழ் திகட்டாமல் இருக்க வேண்டும் உக்கரமாக நீ ஒருபோதும் இருந்ததில்லை சாந்த முகமே சண்முகா!வேதம் கற்க வில்லை என்றாலும் வேண்டும் வரம் தருபவன் சேதம் இல்லாமல் போர் செய்யும் வீரன் தீரன் கந்தன் பேதம் இல்லாமல் அருள் செய்யும் கொடை வள்ளல் முருகன் நாதம் இசைக்கையில் நல்ல தமிழ் கேட்டு மகிழும் பிரியன் !திரியும் தயிரில் உள்ளது பலபொருள் உன்னுல் உலகமே இயக்கமாய் விரிந்து பரந்து உலகின் உயிர்கள் பிறப்பும் இறப்பும் ரகசியமாய் தெரிந்து கொள்ள முடியாத சக்தி பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி பிரிந்து போகும் உயிர் கூட ஆத்ம தரிசனமாய் காலடி யில்.

Read More

தை முதல் நாள். பிரம்மாபோர் செய்யும் கருவியில் இருப்பாய் போற்றும் நாவில் துணைவி இருப்பாள் சோர்வு இல்லா உழைப்பு தந்து தொழில் நுட்ப கலையில் இருப்பாய் பார்க்கும் இடத்தில் எல்லாம் இருப்பாய் பாராட்டும் நெஞ்சில் நிறைந்து இருப்பாய் சார்பு தரும் பிரம்ம தேவா சரணம் அடைந்தோம் காப்பாய் பிரம்மா விஷ்ணு குளிர் காற்று குளிர்ச்சி தர குளிர்ந்த தண்ணீர் வெது வெதுக்க தளிர் போல் தழைக்கும் பக்தி தருகாய் வளர மார்கழி பூஜைசெய்தோம்நளிர் நளின நளினி தலைவா நல்லவை செய்யென நாடி வருகிறோம் களிப்பு கொண்டு வாழ்த்த வருவாய் மாதவா மனம் மகிழ்வோம் அருளால் சிவன் களிகூத்து ஆடும் சிதம்பரம் நடராசா மாற்றி ஆடிய மதுரை நடராசாதெளிதல் தரும் நெல்லை நடராசா குளிர்தல் தரும் குற்றால நாதா வெளித்து காலைத்தூக்கி ஆடிய திருவாலங்காட்டில் ஐம்பெரும் சபை கண்டோம் சிவக்கூத்தா குளிர வைத்த முழுமதி மனமே கொடுத்தாய் சிவனே தில்லை நடராசா.

Read More

மார்கழி மாதம் 29 ஆம் நாள் பிரம்மா மார்கழி மாதம் மனதிற்கு மகிழ்ச்சி மாதவம் செய்தோம் பிரம்மனைப் பாட கார்குழலி வீணை இசையைக் கேட்டு இன்பம் கொண்டு நெகிழும் பிரம்மா பார்புகழும் கோயில் சிற்பத்தில் இருப்பாய் பார்க்கும் பொருளில் இருப்பாய் தேர் சார்பு படைப்பில் இருப்பாய் எங்கும் நிறைந்து இருப்பவனே காத்து அருள்வாய் விஷ்ணு மலர் மலர வண்டு பாட மனம் நெகிழ கண்டு காண அலர் தொடுத்து மாலை சூட அபயம் தரும் கண்ணா வாராய் குலம் தழைக்க குடி வாழ குடக்கூத்து ஆடும் கண்ணா வாராய் வலம் வருவோம் வரம் பெறுவோம் வண்ணமயில் இறகுடன் வாராய் கண்ணா சிவன் முடி தரித்து ஆபரணங்கள் அணிந்து முகம் மலர வந்த ஈசா தடி பிடித்த தண்டபாணி அன்னை கரம் பிடிக்க வந்த ஈசா குடி வாழ அசுரனை அழிக்க வழி வகுத்து தந்த ஈசாஇடி போல மோதி எழுந்த சக்தி…

Read More

மாதம் 28ஆம் நாள் பிரம்மா பிரம்ம முகூர்த்தத்தில் கற்பது எளிது காலை காற்று உடலுக்கு நல்லது சிரமம் பாராது எழுந்து கற்றால் சிகரம் தொடை பயிற்சி ஆகும் கரம் கூப்பி மனதில் தியானித்து பிரம்மனை தினம் காலையில் வணங்க கரம் கூப்பி மனதில் தியானிக்க கருணை செய்வாய் ஒருநிலைப் படுத்த விஷ்ணு உரிப்பானை உடைத்து வெண்ணை உண்டாய் உளம் மகிழ்ந்து ஓடி மறைந்தாய் கரிசனம் கொண்ட அம்மா முன்பு கண்கட்டி வித்தை செய்த கண்ணா தரிசனம் தருவாய் ஒரு முறை தவப் பயனாய் கண்குளிர காண பரிபாவம் போக்கும் கண்ணா உன் பரிவால் வாழ வரம் தருவாய் சிவன் திரிசூலம் உன் கரம் வாசம் திரிசடை உன் தலை கவசம் நரி பரி ஆக்கிய சிவனே நாடு நலம்பெற வரம் தருவாய் சரி பாதி உடல் தந்து சிவசக்தி ஆன சிவனே சர்வேசா திரி சொர்க்கம் ஆன சிவனே திருவடி வணங்குகிறோம்…

Read More

மார்கழி மாதம் 26 ஆம் நாள் பிரம்மா ஆதி கும்பேஸ்வரர் அருள் பெற வில்வ அர்ச்சனை செய்த பிரம்மா மதி மயக்கும் இசைத் தலைவி சரஸ்வதி இசையில் மயங்கும் நாயகா பதியுடன் திரிபுர தாண்டவம் கண்டபிரம்மா சித்திர சபையில் ஓவியம் வடித்தவனே நதிபோல் பாய்ந்து வளம் சேர்ப்பாய் படைக்கும் பிரம்மா எங்களைக் காப்பாய் விஷ்ணு ஆலயிலை கண்ணா அமுதஉன்னு கண்ணா அடியவரை காக்க பிறவியெடு கண்ணா காலநேரம் பார்க்காமல் காப்பவனே கண்ணா கார்மேக கண்ணா புல்லாங்குழல் கண்ணா கோலமா பதிய நடப்பவனே கண்ணா கோமாதா கூட இசைப்பவனே கண்ணா சாலம் செய்யும் மாயவனே கண்ணா சங்கடம் போக்கி எங்களைக் காப்பாய் சிவன் உத்திராட்சை கொட்டை அணிந்த சிவனே உன்னையே நினைத்து சிந்தனை செய்தால் எத்திசையிலும் இருக்கும் ஈசனே அருள்வாய் எங்களைக் காப்பது உன்னருள் பிரசாதமே சித்திரை மாதவீதி உற்சவத்தில் வந்து சித்தி தருவாய் பவனி வந்து புத்தியில் நல்சிந்தனை தந்து சிவனே…

Read More