மார்கழி மாதம் 15 ஆம் நாள் பிரம்மா பத்து கண்கள் உடையவனே பிரம்மா ஏட்டில் விதியை கணிப்பாய் பிரம்மா பத்து கரங்கள் உடையவனே பிரம்மா எதையும் ஏற்று படைப்பாய் பிரம்மா மொத்த வாழ்க்கையை விரிவாய் எழுதி எங்கும் நிறைந்து இருப்பவனே பிரம்மா புத்துயிர் தரும் பிரம்ம தேவா எதையும் ஏற்று செய்ய அருள்வாய். விஷ்ணு சுண்டு விரலில் மலையைத் தூக்கி மக்களைக் காத்த கோகுலக் கண்ணா உண்டு வெண்ணை தின்னேன் என்று சொல்ல மறுத்த திருட்டுக் கண்ணா சீண்டி மோர் பானை உடைத்து குடிக்கும் கண்ணா குறும்பு கண்ணா பாண்டு ரங்கா பண்டரி நாதா பக்தர் குரலுக்கு வருபவனே பணிகிறோம் சிவன் பிறை சூடிய கங்கா தரனே பினைந்த சதைமுடி கொண்ட சிவனே நிறை மனதுடன் உன்னை நினைக்க நிலவின் குளிர்ச்சி தருபவனே சிவனே குறை கூறி வந்தவர் வாழ்வில் நிறை மதியாய் சுடர் தருபவனே மறைத்த போதும் திரை விலகி…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
மார்கழி மாதம் பன்னிரெண்டாம் நாள் பிரம்மா இராமனிடம் பக்தி கொண்டவன் அனுமன் இதயத்தில் இடம் பிடித்தவன் அனுமன் பிரம்மா உன்னிடம் பக்தி கொண்டோம் பிரபுவே படைப்பவனே அருளைத் தருவாய் உரம் இட்ட செடி வளரும் உன்னருள் பெற்றால் நாங்கள் வளர்வோம் திரம் கொண்டு உன்னைப் பணிந்தோம் திருவருள் புரிவாய் பிரம்ம தேவா விஷ்ணு நின்ற அமர்ந்த கிடந்த கோலம் கண்டு மகிழ புவிப் பிறப்பு கன்னி உமக்கு கிடைத்தது தவப்பயன் வைகுண்ட ஏகாதேசி விரதம் இருந்து சன்னி பிடித்தாலும் மாதவனைக் காண சன்னதி வருவதே எங்கள் பாக்கியம் உன்னி உலகளந்த வாமனப் பெருமானே உன்பாதம் சரண் அடைந்தோம் காப்பாய் சிவன் ஏழு உலகம் ஆள்பவனே சர்வேசா எழுந்து நடனம் ஆடுபவனே நடராசா ஏழு வண்ணத்திரை விலக நடனமாடும் நடன சுந்தரேசா நடராசா உமையே ஏழு வகை காய்கறி சமைத்து வழிபடுகிறோம் களி ரொட்டி செய்து படைக்கிறோம் ஏழு இசைகேட்டு ஏளடி வைத்துவந்து…
மார்கழி மாதம் பதினோராம் நாள் பிரம்மா வஞ்ச எண்ணத்தில் கடத்திய இராவணன் மடமையை எண்ணி சீதைக்கு உதவ ஆஞ்சநேயர் சீதையை கண்ட போது வாலில் நெருப்பிட்டு இலங்கையை அழிக்க ஆஞ்சனேயர் தட்சனிடம் படைக்காமல் இருஎன்க தட்சனும் படைப்பை நிறுத்த மனம்நிறைந்து நெஞ்சு நெகிழ்ந்து தட்சனை கொடுத்தான் சீதைக்கு உதவியாவனே படைப்பவனே காப்பாய் விஷ்ணு சீதையை மீட்க பாலம் அமைத்தபோது உருண்டு புறண்டு அணிலும் உதவியது பாதை அமைக்க உதவிய அணில் முதுகில் தடவிய விரல் பதிவு பேதை அறிந்தேன் வெளி நாட்டு அணிலுக்கு இல்லை என்ற போது கோதை மணாளா அவதார ராமா அறிந்தவர் அறியாதவர் எல்லோருக்கும் அருள்வாய் சிவன் சாம்பல் பூசி சடைமுடி தரித்தவனே சந்தனம் சாதம் அபிசேகம் செய்கிறோம் பாம்பு அணிந்த சதாசிவா உனக்கு பால்பழம் பன்னீர் பூக்கள் அபிசேகம் காம்பு தாங்குவது போல் தாங்கும்சிவா கனிரசம் கற்கண்டு அபிசேகம் செய்கிறோம் ஆம்பல் இசை கேட்டு ஆடுவாய் ஆருத்ர…
மார்கழி மாதம் பத்தாம் நாள் பிரம்மா கற்ற கல்வி வாழ வழிகாட்டும் கற்பிக்கும் பாடம் தொழிலுக்கு உதவும் உற்ற உறவாய் எல்லோரையும் எண்ணி உழைப்பு என்னும் மந்திரம் சொன்னாய் பற்றற்று பகிர்ந்து கொடுத்தாய் தொழில் படைப்பில் எல்லாம் இருப்பவனே பிரம்மா முற்றும் துறந்தாய் முழுமையாய் உழைக்க பிரபஞ்சம் படைத்தவனே உழைக்கிறோம் அருள்வாய் விஷ்ணு வெண்ணை உண்ட வாயால் சிரிப்பாய் வெண் பற்கள் தெரிய சிரிப்பாய்கண் பட்டு விடாமல் இருக்க கடுகு மிளகாய் உப்பு சுற்றுகிறோம் வண்ணப் பட்டு அணிந்த கண்ணா வருவாய் நடந்து தேர்போல் அசைந்து உண்ண உனக்கு வெண்ணை தருவோம் உள்ளம் குளிர்ந்து அருளைத் தருவாய் சிவன் விண்ணவர் போற்றும் சிவனேஉன்னை விடியும் வரை விழித்து வணங்குவோம் மண்ணவர் போற்றும் சிவனே உன்னை மனதில் நினைத்து தவம் செய்வோம் திண்ணமாய் உன்னை மனதில் நிறுத்தி திடமாய் உனக்கு பணிதல் செய்வோம் கண்ணியமாக நாங்கள் வாழ காளையில் அமர்ந்தவனே கண் திறந்து…
மார்கழி மாதம் ஒன்பதாம் நாள் பிரம்மா சந்தனம் உரசஉரச மணம் வீசும் சமமாகப் படைத்து சந்தானம் தருபவனே கந்தம் அமைத்து மண்டபம் கட்டி காலம் கடந்தும் பயன்பெறச் செய்து பந்தம் வாழ வாழ்த்துவாய் பிரம்மா பட்சணம் படைக்கிறோம் பாசமுடன் உண்பாய் மந்திரம் ஓதும் உபதேசம் சொல்வாய் மனம் மகிழ்ந்து கற்போம் அருள்வாய் விஷ்ணு வைகுண்ட வாசல் திறக்கும் மார்கழி வலம் வந்தால் மோட்சம் கிட்டும் தைமுதல் நாள்வரை தொடர்ந்து வந்தால் தடைகள் அகலும் தைரியம் பிறக்கும் வையத்தில் பிறந்த மனிதர் எல்லாம் வாழும் முறை வணங்கிப் பணிவது கையளவு மனதில் இடம் கொடுத்தால் கடமை செய்ய அருள்வான் கண்ணன் சிவன் மும்மூர்த்தியாய் இருப்பவனே முக்கண்ணா முழுநிலவே முழுச்சுடரே இறையே ஈசனே இமயமே இம்மியும் வேறு நினையோம் ஈசனே இதயத்தில் சுடராய் இருப்பவனே சிவனே இம்மைப் பிறப்பை அறிய வைப்பாய் இயங்கும் இயக்கமே இன்ப ஒலியே ஓம் என்ற மந்திரத்தை சொன்னால் ஒடுங்கும்…
மார்கழி மாதம் எட்டாம் நாள் பிரம்மா மரம் ஆனாலும் மக்கியம் பயன்பாட்டில் மர வேலை செய்த பிரம்மா கரம் இருப்பது பணி செய்யவென்று கல் கோவில் செய்த பிரம்மா தரம் பார்த்து பொன் வேலைசெய்தும் கலி அமர்ந்ததால் பழி வந்தது வரம் தரும் நாயகனே பிரம்மா நல்ல அருள் தந்து மக்களுக்கு அருள்வாய் விஷ்ணு மண்ணை உண்டு உலகை காட்டினாய் மண்ணை அளந்த வாமணக் கண்ணா வெண்ணெய் உண்டு மோரைக் குடித்தாய் வெள்ளை மனம் கொண்ட கிருஷ்ணா திண்ண மனத்துடன் அசுரரை அழித்தாய்தின்பண்டம் உனக்குப் பிடித்த தீனி வண்ண மாலை சூட்டி இருப்பாய் வரதராசனே உன் தாழ் பணிகிறோம் சிவன் அண்டத்தில் தந்தையும் தாயும் ஆனவனே அகிலத்தில் சேயாய் பிறந்து படைத்தவனே குண்டலினி சக்தி கொண்ட சிவனே குமரனை நெற்றிக் கண்ணில் படைத்தாய் தண்டம் பிடித்த தணியாத பாலன் கோபம் கொண்டு பழனியில் நின்றான் கண்ணியம் காத்து ஆசி வழங்கி திருவிளையாடல்…
மார்கழி மாதம் ஏழாம் நாள் பிரம்மா அரும்பாகி மொட்டாகி மலர்பவனே பிரம்மா அசையும் பொருள் யாவிலும் பிரம்மா சருகாகி மக்கி மண்வளமும் பிரம்மா சாரதியின் உறவாய் பிறந்தவனே பிரம்மா இரும்பை எடுத்து கலப்பை படைத்து இன்பம் தரும் உழவுத் தொழிலுக்கு கருவியாகப் படைத்த நான்முகனே பிரம்மா கருணை கொண்டு எங்களைக் காப்பாய் விஷ்ணு புல்லாங் குழலிசை கேட்ட பசுக்கள் புத்துணர்வு பெற்று புதுப் பொழிவுடன் கல்லாய் இருந்து காணஇசை கேட்டன காக்கும் கடவுளே கேசவனே பெருமாளே துல்லியமாக கணக்கிட்டு துயர் துடைப்பவனே துயரம் பறந்தோடும் புல்லாங் குழலிசையில் மெல்லிய புன்னகை சிரிப்பில் இந்த புவனமே உன் தாழ்பணியும் கண்ணா சிவன் சோதி லிங்கமே சொர்ண பளபளப்பேசெதுக்காத பனி கைலை நாதனை பாதி உடலை பதிக்கு கொடுத்தவனே பாம்பை மலையாய் கழுத்தில் அணிந்தவனே வாதிட்டு வடிவம் இலந்த பார்வதி வரம் பெற்று மணம் புரிந்தாள் ஆதியும் அந்தமும் ஆன சிவனே அன்பென்ற ஆயுதத்தால்…
மார்கழி மாதம் ஆறாம் நாள் பிரம்மா வகுப்பிலே வர்ணமில்லை கலப்பில்லை பிரம்மா வாக்குத்தந்து வரம் தருபவனே பிரம்மா பகுத்தறிந்து பக்குவமாய் படைப்பவனே பிரம்மா பல்லாண்டு வாழ வாழ்த்துவாய் பிரம்மா தகுதிதந்து தடைகள் நீங்கி உயர தவம் செய்து வணங்குகிறோம் பிரம்மா வகுத்து வடிவமைத்து படைப்பவனே பிரம்மா வஞ்சமில்லா குழந்தைகள் வணங்குகிறோம் அருள்வாய் விஷ்ணு மாடு மேய்க்கும் ஆயர்பாடி கண்ணா மாட்டுப் பாலைக் குடித்தவனே கண்ணா வாடும் மக்கள் குறை கேட்பாய் வறுமை போக வழியும் சொல்வாய் காடு மலை தேடி அலைந்து தெய்வம் உன்னைக் காணாது வருந்திப் பாடும் குரல் கேட்டு வருவாய் பக்கத் துணையாய் இருக்க வருவாய் சிவன் உடம்பில் விபூதிபூசி கழுத்தில் மண்டை ஓடும் உடம்பைச் சுற்றி பாம்பும் படமெடுக்க இடப்புறத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து இடிபடாமல் வலப்புறத்தின் தலையில் கங்கைதாங்கி அடங்கல் முறை ஓத கேட்பவனே அடியவர்க்கு அருளும் சோதி வடிவே மடத்தில் தங்கும் முனிவர்க்கு அருள்பவனே…
மார்கழி மாதம் ஐந்தாம் நாள் பிரம்மாசாதியில்லை மதமில்லை படைப்புத் தாயே சஞ்சனே உயர்வு தாழ்வில்லை படைப்பில் நிதித்யா சனத்தில் இருக்கும் பிரம்மாவே நித்திய சேவை செய்கிறோம் பணிந்து பாதிக்கும் குறைபாடு இல்லாமை தருவாய் பக்குவப் படுத்தி நிறைவாய் படைப்பாய் போதிக்கும் நான்முகனே நல்லறிவு தருவாய் பேதங்கள் பார்க்காமல் நல்லாசி தருவாய் விஷ்ணு மதுசூதனே மங்கையர் விரும்பும் கண்ணா மாயசெயல் செய்து மடியவைத்தாய் அசுரரை சூதுசெய்து பாண்டவரை ஏமாற்றிய போது சுனங்காமல் பாஞ்சாலிக்கு உதவிய கிருஷ்ணா பதுங்கும் கல்லாகி பாழ்பட்ட அகலிகை பாதம்பட்டு உயிர்பெறச் செய்த ராமா பிதுங்கும் கண்ணுடைய அரக்கியைக் கொன்று காத்தவனே கண்ணா எங்களையும் காப்பாற்று சிவன் பனிகள் சூழ்ந்து லிங்கமாக இருப்பவனே பனிலிங்கா கைலை நாதா சர்வேசா தனியாத ஆசையுடன் குளிர்தாங்கி வருகிறோம் தனிமையில் இருப்பவனே சிவனே சங்கரா கனி தருகிறோம் கற்கண்டாய் இனிப்பவனே கணிவு கொண்டவனே கருணை உள்ளவனே முனிவர்க்கு அருளும் சதாசிவா கயிலைநாதா முக்தி தருபவனே…
மார்கழி மாதம் நான்காம் நாள் பிரம்மா வான்கண் வருகைக்கு முன் எழுந்து வானவர் வணங்கும் பிரம்ம முகூர்த்தத்தில் கொன் பொழுதில் காலை கடன்முடித்து குளிர்ந்த நீரில்நீராடி தலை வாரி நான்கு வேத நான்முகனை நினைத்து நாண்மலர் பறித்து தொடுத்து சூட்டுகிறோம் மான்மகனே வேதப் பொருளைச் சொல்கிறோம் மக்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் விஷ்ணு ஆதிசேஷன் மேல் நர்த்தனமாடும் கண்ணா அயர்ந்து தூங்கும் பள்ளியறையும் அதுதானே ஊதியம் கருதி உயர்ந்து உலகளந்தவனே உனக்குள் உலகை அடக்கிக் கொண்டாயே ஓதிய மரம் ராமஜெயம் ஆனது ஒதுங்குகிறோம் உன் தாழ் பணிந்து கதியென சரண் புகுந்த பின்பு காக்க வல்லவர் நீதானே கண்ணா! சிவன் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனே புகழுக்கு ஆசை கொண்டவரை விரட்டியவனே சிட்டுக் குருவிபோல் துருதுருவென இயங்கி சிக்கித் தவித்த மக்களைக் காத்தவனே கட்டு விறகு சுமந்து களைத்து கவி பாடி தமிழிசை காத்தவனே தட்டுத் தடுமாறும் மக்கள் குறைபோக்கும்…
