பாலை வனத்திலும் சோலைகள் இருக்கும் வறுமைக் குப்பின் வளம் இருக்கும் காலை முதல் உழைப்பு இருந்தால் கல்லில் கூட புல் முளைக்கும் தாலம்பூ வெப்ப பூமியில் வளரும் தன்னை மக்களுக்கு கொடுத்து உதவும்ஆலம் கூட வெப்பம் தாங்கும் அன்னை பூமிக்கு நிழல் தரும். மரக்காடு பூமி! தமிழர் கடைக்கோடி இராமநாத புரம் மாவட்ட மாகும் மரங்கள் கருவேலம் அதிகம் உண்டு தண்ணீர் பற்றாக் குறை உண்டு இரவு பகல் உழைக்க விரும்பி விடா முயற்சி செய்து உழைத்து வரமாய் மாறும் வறண்ட பூமி சோலையாய் மாறும் கனிதரும் மரங்கள். பஞ்சாப் விவசாயி உருவாக்கிய பலத்தோட்டம் பஞ்சம் விரட்டும் வெற்றி வழிதஞ்சம் புகுந்து மண்ணிடம் உழைத்தால் தரமான கனிகள் விளைச்சல் ஆகும் நெஞ்சம் நிறைவாய் நிம்மதி கிடைக்கும் பசுமை புரட்சி வரமாய் மலரும் கொஞ்சம் மனம் வைத்தால் போதும் கையை ஏந்தும் நிலை மாறும்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
உறுப்புக்கள் உறுதியாக ஆசனப் பயிற்சி மனதை இணைத்துக் கட்டுவது யோகாம் குறுகிய காலத்தில் பெண்கள் செய்ய நாடிசுத்தி சர்வாங்க சாந்தி மத்யாசனம்சிறுவர் சிறுமியர் செய்யும் ஆசனம் பத்மாசனம் புஜங்காசனம் முத்ராதனு சக்கராசனம் வெறும் வயிற்றில் ஆசனம் செய்ய காலை மாலை செய்வது பயிற்சி . இறை வழிபாடும் ஒரு யோகம் முறையாய் கடை பிடிப்பது வலிமை அறையில் இருக்கும் சாமி படமும் கோயிலில் இருக்கும் சாமி சிலையும் பொறை தரும் மன அடக்கத்தால் பூமித் தாய் போன்ற பொறுமை முறையாய் காலை மாலை பயிற்சி உறைதல் ஒழுகுதல் ஒரு யோகம். காலையில் எழுந்து படிப்பதும் பயிற்சி மாலையில் விளையாட்டும் ஒரு பயிற்சி மலை ஏறுவதும் ஒரு பயிற்சி களை எடுப்பதும் ஒரு பயிற்சி கலை ஓவியமும் ஒரு பயிற்சி விவசாயம் செய்வதும் ஒரு பயிற்சி சிலை செய்வதும் ஒரு பயிற்சி வாழ்க்கை நெறி யோகப் பயிற்சி.
கருவாய் உருவாய் வடிவாய் வந்தாய் கையில் ஏந்தி உணர்வாய் உச்சிமுகரமெருகேற்றி கைகால் அசைத்து அமுதாய் சிரித்தாய் இன்பமும் துன்பமும் அறிந்தாயா?துருவே வழித் தோன்றல் அல்லவா? உன்முகம் பார்க்க துன்பம் அகளுமே!தருவே பூமியை வளப்படுத்தும் கற்பகமே! இசை கேட்டு மகிழ்ந்து துயில்பவளே!வரமே நாங்கள் பெற்ற பயனே பாதம் பிடித்து புதுநீராடச் செய்து கரம் பிடித்து புத்தாடை அணிவித்து வெண்சங்கில் மருந்து புகட்டி அமுதூட்டி இரவு கண்விழித்து வளர்க்கும் போது காணும்சுகம் பகிர்ந்து கொள்ள முடியாது பரவசப் படும் தாய்மை சுகம் துன்பத்திலும் இன்பம் காணுவதே சுகம்.வளர்ந்து படித்து பெரிய பெண்ணாகி சகோதரி மனைவி அண்ணி அத்தையென வளம்வரும் போது நான்கு அவதாரம் தோழி பாட்டி பூட்டி ஓட்டியென வளம் வரும்போது எட்டு அவதாரம் ஆணுக்குப் பின் இயக்க சக்தி குளம்படி பட்ட சிவனின் சக்தி பாரதி கண்ட புத்தொளி சக்தி.
வரும் மானம் காப்பது வருமானம் தரம் உயர்த்தி வாழவழி வகுப்பது திரும்பத் திரும்ப உழைக்க வைப்பது திருமகள் மகிழ வருவது வருமானம் வருமானம் வந்தால் தான் திருமணம் திருமண வாழ்வு சிறக்க வைப்பது வருமானம் தருவது ஆளுமை திரன் வறுமை போகச் செய்வதும் வருமானம்.சிறு தொழில் பெரிய வணிகம் கைத்தொழில் படித்து பல பணி குறுஞ் செய்தி பிரிவு கணினி பத்திரிக்கை வானொலி தொலைக் காட்சி சிறு வயல் குளம் கட்டிடம் செருப்பு தையல் முடி திருத்தம் பீறுதல் மரம் பிளந்து செய்யும் கதவு சன்னல் சிலை கலைப்பொருள். எண்ணில் அடங்கா வேலை செய்வது எண்ணிய படி வருவாய் ஈட்டவேதிண்ணமாய் திடமாய் இருக்க வைப்பது திரவியம் சேர்த்து அறம் செய்ய எண்ணம் நிறைவேற்ற ஈடில்லா சேவை எளிதாய் தர்மம் செய்ய உதவுவது கண்ணியம் காக்க வைப்பது கடமை காரியம் ஆற்ற உதவுவது வருமானம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைவருந்தி உழைத்த உழைப்பு பணம் வருவதில் நிதிநிலை அறிவது திரம் கருத்து ஒன்றி கணக்குப் பார்த்து வகுத்துப் பிரித்து செலவு செய்து திருப்பணிக்கு ஒரு தொகை ஒதுக்கி முதுமை அற வாழ்விற்கு ஒதுக்கி…. உண்ணும் உணவை அமிர்தாய் நினைத்து உலக வாழ்வில் சிரத்தைக் கொண்டு மண்ணில் வாழும்கால நிலைக்கு ஏற்ப கணக்குப் பார்த்து செலவு செய்து கண்ணாய் கருத்தாய் திட்டம் தீட்டி திரவியம் சிறிது சேமிப்பில் ஒதுக்கி கண்ணியமாக வாழும் வாழ்க்கை கண்டு கடவுள் கூட ஆசி தருவார். அரசு தீட்டும் திட்டம் நாட்டிற்கு கணவன் மனைவி திட்டம் வீட்டிற்கு வரவை மிஞ்சி செலவு செய்தால் கடன் பட்டு துன்பக் கடலில் அரசு திட்டத்தை மக்கள் கடைபிடித்தால் நாடும் வீடும் சொர்க்க மாகும் வரவு அறிந்து செலவு செய்தால் வாழும் காலம் வசந்தம் ஆகும்.
இந்தியாவின் சுவாசக் காற்று சுதந்திரம் சுதந்திர மூச்சுக் காற்றில் கல்வி மந்தையுடன் மாடு மேய்த்த சிறுவர்கள் மதிய உணவுடன் கல்வியும் பெற்றனர் சிந்தையில் அறிவு மிகுந்த மாணவர்கள் சிகரம் தொடும் சாதனை மக்கள் முந்தைய வரலாற்றை கணினியில் ஏற்றி முகவரி பதிக்கும் பாமர மக்கள்நிந்தை பொறுத்து நினைவு நல்லதாகி நிமிர்ந்து பணி செய்யும் பாமரர்கள்.எல்லோரும் ஒரு குல மக்களாய் உறவு கொண்டு உரிமை பெற்றுநல்லோர் கூறும் நல்லறிவு சிந்தனையை நயமுடன் ஏற்று செயலது செய்து வல்லோர் ஆகி அருஞ் செயலில் வளமைப் படுத்தும் பாமர மக்கள் கல்லார் இல்லா நாடு ஆக்க களம் இறங்கிய பாமர மக்கள் பல்லோர் போற்றும் பொது உடமையில் சுகம் காண்பது சுதந்திர நாட்டில்.
சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டில் தூய தமிழ் எழுத்து சங்கத் தமிழ் வளர்ந்த நாடு சங்கரி மீனாட்சி பிறந்த மதுரையில் சகல கலைகளும் கற்று ஆண்டு சங்கரன் கை பிடித்த மதுரையில் இயல் இசை நாடகம் வளர்த்து சங்கே முழங்கு என முழங்கும் அன்னைத் தமிழ் வணங்கிப் பணிவோம். எண்ணத்தில் விளைச்சலே எழுத்தின் வடிவம் ஏற்றமிக வாழ்விற்கு அதுவே ஆதாரம் வண்ணத்தின் கலவைகளே காட்சி வடிவம் காலத்தின் மாட்சிகள் ஆட்சி செய்யும் திண்ணத்தின் திறவு கோலே செயல்பாடு தீரத்தின் வெளிப்பாடே வெற்றி வகுக்கும் விண்ணதிர்வு மழை வரவின் வெளிப்பாடு மண்ணில் உயிர் வளம் காக்கவே புண்ணியம் செய்தவனே கடவுளாக உயர்கிறான் புவிதனில் பிறந்து மக்கள் நலம்காக்க. மரம் பல மண்ணில் வளர்ந்தாலும் கருங்காலி தேக்கு சந்தனமே பயன்பாட்டில் கரம் இரண்டு மனிதருக்கு இருந்தாலும் கரம்கூப்பி வணங்கத் தகுந்தவர் குறிப்பேட்டில் தரம் இல்லா எழுத்து எல்லாம் தண்ணீரில் எழுதியது போல் கரைந்து உரம்…
காலை கதிரவன் உதிப்பது நமக்காக காற்றும் மலையும் உலக நன்மைக்காக மாலை மறையும் ஒளியின் நிறமும் வான வில்லின் ஏழு வண்ணமும் சாலை மரமும் செடியும் கொடியும் மலையும் குன்றும் குறிஞ்சி முருகனும் பாலை மணலும் ஓடை நிழலும் பயணம் செய்பவர் மகிழும் இயற்கை. பஞ்சம் இல்லாமல் உலகம் வாழ பறக்கும் பறவை குரலில் இசை நஞ்சை பயிரின் பசுமை புரட்சி மக்கள் மகிழ்ந்து பாடும் இசை மஞ்சள் மா பலா கனிகள் மரங்கள் கொடுக்கும் கொடை உள்ளம் மஞ்சையில் அமர்ந்த முருகன் மலையும் அருள் கொடுக்கும் கொடை உள்ளம். ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ இயற்கை கொடுத்த இனிய கொடை நன்கு புரிந்து நாமும் வாழ இயன்ற அளவு செயற்கை தவிர்ப்போம் கன்று போல் துள்ளி விளையாடி காணும் காட்சிகள் கண்டு ரசித்து இன்று போல் என்றும் வாழ இயற்கை உடன் இணைந்து வாழ்வோம்.
தஞ்சாவூர் பொம்மை அசைந்து ஆடும் தருவாய் இசைப் பாட்டு வளரும் தர்க்கம் புலவரின் புலமை வெளிப்படும் தலைமக்கள் ரசித்து இன்புற்ற தஞ்சையில். கவிஞர் எழுத்தாளர் ஆய்வாளர் கூடி கருத்துக்கள் பரிமாறும் அட்சய பாத்திரம் கற்கண்டாய் இனிக்கும் தமிழ் சுவை கண்டு கேட்டு மகிழ்ந்து சுவைப்போம்.ஓதுவார் ஓதவும் ஆடுவார் ஆடியதும் ஓவியம் உயிர்பெற்ற சிற்பமாய் செதுக்கியதும் ஓமக்குண்டம் வளர்த்த வேள்வி செய்து ஓர்மை மனதுடன் ஆலயம் எழுப்பியதும். சோழர் காலத்து வரலாற்று நினைவுகள் சோர்வில்லா உழைப்பின் ஆயிரம் ஆண்டுகள்சோழ நாடு சோறுடைய வளநாடு சோதனை வென்று சாதித்த படைநாடு. சரஸ்வதி மகால் நூலகம் பயன்பாடு சரஸ்வதி கரங்களின் வீணை செய்தல் சந்தன வாசனையாய் எங்கும் பரவும் சத்துவ குணம் கொண்ட ராஜராஜன் புகழும்… ஆயிரம் ஆண்டை தாண்டியும் அரசன் ஆளுமை மெய் சிலிர்க்க வைக்கிறது ஆக்கம் தரும் தஞ்சை கோயில் ஆட்சி செய்த பெருமை சொல்லும்.
தள்ளாத வயதிலும் கவிபாட வரும்போது தளிர்வு உடலுக்கு துடிப்பு மனதிற்கு அள்ளல் செய்தாலும் அழியாத செல்வம் அயர்வுற்று படுத்தாலும் எழுதவைக்கும் உணர்வு உள்ளல் உவகை தரும் உறுதிக்கு உழைக்க நிலைக்க நீண்டு வாழ கள்ளமை இல்லா கனிவு தரும் கற்கும் தமிழ் அன்று வேறேது? அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சம் துறந்தது ஆற்றல் பிறந்தது எச்சமாய் பாரதியின் கனவு பெண்கள் களம் காணும் காலமும் இதுவன்றோ!துச்சமாய் துயர்செய்த வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டி களம் கண்டவர் வ. உ. சி மிச்சமாய் கல்வி கற்று இலண்டனில் காலம் போற்றும் துறைகளில் தமிழன். கணினியில் தொன்மை நூல்கள் படிக்க தொல்காப்பியம் கம்ப ராமாயணம் குறள் பணி செய்யும் வாழ்வியலுக்கு காக்க பகுத்தறிவு தரும் பொக்கிச காப்பியங்கள் வணிகம் செய்து வெளிநாடு சென்றனர் தமிழ் இணைந்து சங்கத் தமிழில் கணினி இணைப்பில் உலகத் தமிழாய் இளமை கொண்டு நிமிர்ந்த தமிழன்.
