மார்கழி மாதம் மூன்றாம் நாள் பிரம்மா கறை கடமை செய்யும் சிற்பி பக்தியுடன் சிற்றுளி கொண்டு செதுக்க இறைவனே குருவே திருவடி வணங்கி இதயத்தை ஒரு நிலைப் படுத்தி கவனம் சிறைப்பட்டு சிலையை வடிக்கும் சிற்பியாய் சிதராத எண்ணம் கொண்டு தியானித்து மறைமொழி ஓதி மனதில் வேண்டுகிறோம் வேத நாயகனே பிரம்மாவே அருள்வாய் விஷ்ணு அசுரரை அழிப்பதற்கே கண்ணனாய் பிறந்தவனே அஞ்சாத சிறுபிள்ளை ஆயன் மாயன் பசுக்கூட்டம் மத்தியிலே தலைவனாய் இருப்பவனே பச்சைப் பால்பிரியன் புல்லாங்குழல் இசைப்பிரியன் சிசுவாக இருந்தாலும் சிறந்த பிள்ளை சிரமம் இல்லாமல் வெண்ணையுண்ணும் பிள்ளை வீசும் காற்றில் கடல்அலை தாலாட்ட வீற்றிருக்கும் எம்பெருமானே காப்பவனை வணங்குகிறோம் சிவன் சடைமுடி தரித்த சங்கரன் இருந்தாலும் சக்தியுடன் இணைந்த அண்ணாமலை ஈசனே படை சூழயிருக்கும் பூதத் தலைவனே பவனே பெண்மைக்கு சரிபாதி உடல்தந்தவனே கடைந்த போதுவந்த நஞ்சை உண்டவனே கடுகளவும் மக்களுக்கு தீங்கு வராமல் தடை செய்த ஈசனே சர்வேசனே…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
மார்கழி மாதம் இரண்டாம் நாள் பிரம்மா நான்கு வேத நாயகனே நான்முகனே நல்லாசி தருவாய் நலம் கூட சான்றோர் கற்ற கல்வியின் நாயகனே சத்திய லோகத்தில் தியானத்தின் பிறப்பிடமே கான் தவம் கடுமையாக இருந்தால் காட்சி தந்து வரம் கொடுப்பவரே பான்மை பண்புடன் படைப்பை ஏற்று பயனறிந்து வணங்குகிறோம் வாழ்த்தி அருள்வாய் விஷ்ணு காலை எழுந்து நீராடி வணங்குகிறோம் கதிரவன் வருமுன் கோலமிட்டு வணங்குகிறோம் மாலை தொடுத்துப் பூச்சூடி வணங்குகிறோம் மனம் நிறைந்த கண்ணனை வணங்குகிறோம் சோலை மலரை அர்ச்சித்து வணங்குகிறோம் சோதனை வந்தாலும் தாங்கியே வணங்குகிறோம் பாலை கடைந்து வெண்ணைதந்து வணங்குகிறோம் பாலும் மோரும் குடிக்க தந்து வணங்குகிறோம் சிவன் தில்லைக் கூத்தனை சிதம்பரத்தில் பார்க்க திரிசூல நாயகன் நடனத்தைக் காண முல்லைப் பூத்தொடுத்து முக்கண்ணனை காண மூன்றாம் பிறைசூடிய நர்த்தகனை காண அல்லை நாதன் ஆதரவைப் பெற ஆதவன் உதிக்கும் முன்பே காண எல்லை இல்லா சோதியைக் காண…
மார்கழி மாதம் முதல் நாள் பிரம்மாதாமரை மலரிலே அமர்ந்த நான்முகனே தளராத மனதுடன் நுணுக்கமாய் படைப்பவனே வாமம் படைப்பை அழகாக படைக்க விஷ்ணுவின் உந்தி கொடி உறவே காமாரி வளர்த்து தொழில் செய்ய கைவேலை ஐந்து படைத்த பிரம்மாவே பாமாலை சூட்டுகிறேன் படைத்த பிரம்மாவிற்கு பக்தி கொண்டு பாடுகிறேன் அருள்வாய். விஷ்ணு மாதவனே! கேசவனே! மனதார வணங்குகிறேன் மார்கழி மாதத்தில் மெய்மறந்து வணங்குகிறேன் மாதவாப் பயனாலே பரமனை வணங்குகிறேன் பாற்கடலில் பள்ளி கொண்டவனை வணங்குகிறேன் சாதகம் செய்து பாடியே வணங்குகிறேன் சாந்தி பெறவே சதா வணங்குகிறேன்சாதனமாய்பயன்படுத்தும் கேசவனை வணங்குகிறேன் சதா நினைத்து பெருமானே வணங்குகிறேன். சிவன் கைலாய நாதனே காளையில் அமர்பவனை காலையில் நீராடி சேவடி பணிகிறோம் நைத்தல் சாம்பல் பூசும் சங்கரா நெற்றியிலே திருநீர் பூசி வருகிறோம் மைவிழியாள் சிவகாமி பக்கத்தில் தானிருக்க மூடுபனி நேரத்தில் பக்தியுடன் வருகிறோம் பைமை தவப்பயனே பார்வதி வருகையாள் பூலோகத் திருமணம் பார்க்கும் பேர்பெற்றோம்
1-தமிழ் கடவுள்:- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். இந்த நிலத்திற்கு உரிய கடவுள் முருகன். குறிஞ்சி நில மக்கள் பேசும் மொழி தமிழ்.தமிழ் கடவுள் முருகன். ஈசானம், வாமதேவம், அகோரம்,சத்தியோஜாய்தம் ,தட்புருசம் என்ற ஐந்து முகத்துடன். அடியவர்களுக்கு அருள் கொடுக்கும் கீழ்நோக்குப் பார்வையுடன் கூடிய ஆறாவது முகமாகிய திருவதனம் இணைந்து ஆறுமுகங்களில் இருந்து அனல் பொறி பிறக்கச் செய்தார் சிவன். 2-ஆறுமுகனாக பிறந்தார் முருகன். “அனலில் பிறந்து புனலில் வளர்ந்து” உருவாகிய காரணத்தினால் கந்தன் என்று பெயர் பெற்றார். “அழகு” என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ் கடவுள். தமிழ் வேறு முருகன் வேறு அல்ல .முருகனுக்கு கண்கள் பன்னிரண்டு. தமிழுக்கு உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. முருகன் சிரமும், கரங்களும் பதினெட்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் பதினெட்டு. முருகனுக்கு ஆயிதம் வேல் ஒன்று. தமிழ் எழுத்துக்களில் ஆயுதம் ஒன்று. முருகனுக்கு முகங்கள் ஆறு. தமிழில் இன எழுத்துக்கள்…
சிவ மைந்தன் தோன்றினான்-சிவன் நெற்றிக் கண்ணில் தோன்றினான் காலம் காலமாய் போற்றிடலாம்- கண்ணால் கண்டு வணங்கிடலாம் வடிவேலனை.காவடி ஆடும் சாலையில்- மனம் சேவடி பாடி மகிழ்ந்திடும் பாவடி தரும் ஞானத்தில்- முருகன் காவடி தூக்கி ஆடிடுவோம்.ஆறுபடை வீட்டில் முருகன் -அன்பு வேறுபாடு இன்றி அருள்வான் மாறுபட்ட கருத்தை கொண்டதால் -அசுரன் கூறு பட்டுப் போனான்.திருச்செந்தூர் சூரன் சம்ஹார- விழா வரும்பக்தர் கூட்டம் கண்டால் கருணை கந்தன் மனம் -புரியும் தரு கற்பகமாய் வளரும்.அலை கடலும் வணங்கி- வரும் மலை மகளும் காட்சிதர தலை வணங்கி ஆசி -பெற உலைக் களமாய் மனமுருகும்.உமையவள் வேலால் வெற்றி -வரும் படைவீடு காத்து நிற்கும் தடைகள் எல்லாம் தகர்த்து- செல்லும் கொடை உள்ளம் காத்து நிற்கும். மலர் தூவி மனம் -மகிழும் வலம் வந்து வணங்கி நிற்கும் நலம் யாவும் உன்- அருளால் குலம் காக்கும் குடிகாக்கும் கார் மேகம் மழை- கொடுக்கும் மார்கழி மாதம்…
கண்ணொளி பட்டால் உலாவும் நட்சத்திர வானில் உலாவி வந்த முருக நிலா வந்த போதும் உன்முக ஒளியில் மங்கியதோ பலாச் சுளை தித்திப்பு தமிழ் சுவையில் கண்டேன் குலாவும் குடும்ப வாழ்வில் தமிழ் பண்பு கண்டேன். முருகா என்ற மூன்றெழுத்தில் உயிர் மூச்சு இருக்குதப்பா தருவே கற்பக விருட்சமாய் காலம் எல்லாம் இருப்பாய் மருத நிலத்து மக்களுக்கு மலர்ச்சி நீ தருவாய் கருணி வாழ் முருகா காலம் எல்லாம் காப்பாய் தரணி காக்கும் முருகா தாமதம் இன்றி வாராய் குறத்தி வள்ளி முருகன் குமுறும் மக்களைப் பாராய் சரணம் சொல்லும் பக்தர் சங்கடம் போக்க வாராய் பரமன் மகனே முருகா பக்தர் குறையை தீராய் சக்தி வேலால் வென்றாய் சகதியில் விலாமல் காப்பாய் பக்தி கொண்ட மக்களை பாசம் கொண்டு காப்பாய் திக்கு தெரியாமல் இருப்பவருக்கு திசையை காட்டி காப்பாய் முக்தி வழி காட்டி மோட்ச தீபம் காட்டுவாய் மண்ணுலகம் காக்க…
தாய் தமிழே உன்னை நேசித்தேன் தரணியில் உன் புகழ் பரப்ப சேய் மனத்தால் நினைத்து புகழ்ந்தேன் சென்ற இடமெல்லாம் மூச்சாய் சுவாசித்தேன்வாய் உன்னைப் பாடிப் பேச வளர்வது தமிழும் நாமும் தான் நோய் கூட தூரப் போகும் தமிழ் மருத்துவ உணவு உண்டால். பார் புகழும் திருக்குறள் திருவருள் உலகம் வியக்கும் தமிழ் மொழி பேர் சொல்ல தமிழ் படிப்போம் இருக்கும் வரை மூச்சாய் சுவாசிப்போம் நேர்பட வாழ வழி காட்டும் நிம்மதி கிடைக்கும் இயங்க வைக்கும் தேர் போல இழுத்துச் செல்வோம் ஒன்று பட்டு உறுதி கொள்வோம். தமிழ்த்தாய் அணிகலன் தமிழன் பொக்கிசம் தரணி புகழ்ந்து பாடும் பெட்டகம் உமிழ் நீரும் இனிக்கும் இதயம் இயங்க சக்தியாய் மாறும் தமிழ் சிமிழ்பு நம்மை சீரமைக்கும் நெறிப்படுத்தும் சிரஞ்சீவி ஆக்கம் சிந்தனை பெருக்கும் திமிர்தல் தமிழ் மொழி ஆனால் தரணியில் உயர்வது நாமும் தான்.
முப்பாட்டனுக்கு பாட்டன் திருவள்ளுவர் திருக்குறள் வாழ்வியல் நெறிப்படி வாழ்தல் இனிது முப்பாட்டி ஔவையார் வகுத்து தந்த அமுத மொழிப்படி வாழ்தல் இனிது எப்போதும் என்னாலும் வாழ்வின் அர்த்தம் ஆய்ந்து வாழ்ந்த மூதாதை அனுபவம் எப்போதும் என்னாலும் ஏற்று நடந்தால் வாழ்வும் நாடும் வளமே காணும்.தாத்தா பாட்டி அனுப்பவப் பாடம். கேட்டு வளர்வது செவிவழி பாடம் சத்தைப் போட்டு வளரும் மரம் நற்கனி கொடுப்பது போல் நல்…. முத்தாய் விளையும் மழைத் துளி பயன் தருவது போல் நம் மூத்தோர் சொல் ஊட்டச் சத்தாய் உரமாய் இருந்து நற்பலன் தரும். கருவில் சுமந்து அன்பில் அரவணைத்து தாய் மொழி கற்பிக்கும் அன்னை இருவினைப் பயனும் எடுத்துச் சொல்லும் அன்னை தந்தை வழிநடத்தல் இனிது குருவாக கற்பிக்கும் ஆசிரியர் சொல் உருவ சாத்திரம் கற்கும் சொல் திருவுளம் கொண்டு ஏற்று நடந்தால் வீடும் நாடும் போற்ற வாழலாம்.
அகரத்தில் எழுந்த அன்னைத் தமிழ் ஆய்வு செய்யும் என்ன அலையில் சிகரத்தில் உயர்த்தி உயர்வு கொள்ள சித்தம் திண்ணமாய் செயல் பட மகராலயம் ஓயாத உழைப்பது போல் மார்க்க நெறியில் நிமிர்ந்து நின்று உகரத்தில் எழுந்த உயிர் மூச்சாய் மொழிக்கு உரக்க குரல் கொடு. வள்ளுவன் தந்த திருக்குறள் உலகம் முழுமைக்கும் பரவ வழி வகுத்து பிள்ளைத் தமிழ் எழுச்சி கண்டு விரும்பும் மொழியாய் பாடத்தில் வைத்து கொள்ளை இன்பம் தரும் ஈரடி இனிமை பொங்கும் மன நிறைவில் வெள்ளை உடையணிந்த பாரத அன்னைக்கு தேசிய நூலக்க குரல் கொடு. உண்மைக்கு என்றும் குரல் கொடு உரிமைக்கு என்றும் குரல் கொடு திண்ணம் கொண்டு குரல் கொடு திண்மை கொண்டு குரல் கொடு பண்புக்கு என்றும் குரல் கொடு பகுத் தறிவுக்கு குரல் கொடு மண்ணுக்கு என்றும் குரல் கொடு நீதிக்கு உரக்க குரல் கொடு.
சிரித்துப் பேசுங்கள் கோபத்தை தள்ளுங்கள் முழு மனிதனாய் முகவரி பதியுங்கள் பரிதி போல் ஒளி வீசுங்கள் உயர்வை உங்கள் வசம் ஆக்குங்கள்மூரி கொண்டு விளை யாடுங்கள் முழு ஆரோக்கியம் பெற்று வாழுங்கள் பரிவு கொண்டு புத்தகம் படியுங்கள் பண்பை வளர்க்கும் மந்திரம் ஆக்குங்கள். விரிவு படுத்த நிறை காணுங்கள் நட்பு விரிந்து உயர்வு கொள்ளுங்கள் புரியும் படி சொல்லிக் கொடுங்கள் வளம் நலம் பலம் பெறுங்கள் தரிசனம் கண்டு உள்ளம் மகிழுங்கள் இறை அருள் பெற்று வாழுங்கள் திரிசூலம் நம்மை காக்கும் வேலிகள் திருவடி போற்றி சாதனை புரியுங்கள். இனிமையுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் மக்கள் மனதில் நிலைத்து இருங்கள் கனிவாக செயல் செய்யப் பழகுங்கள் உயர்வு வந்தும் பணிவாகச் செய்யுங்கள் தனிமையில் இருந்து செயல்பட பழகுங்கள் கால விரயம் தவிர்க்க உதவுங்கள் பனி நீர் குளிர்ச்சியாய் இருங்கள் தாமரை இலை தண்ணீராய் இருங்கள்.
