Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

47-துளி நீரில் சுகன் நீயே!         தூய அருளும் நீயே! குளிர் காலத் தென்றல் நீயே!         குதூகல வசந்தம் நீயே! தளிர் செடி அழகும் நீயே!         தாங்கும் கரமும் நீயே! வெளிர் நிற வானம் நீயே!        வேண்டும் வரம் நீயே!

Read More

4-மனதை பக்குவப் படுத்துவது உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனம் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியம். வீணாக கவலைப்பட்டுக் கொண்டு எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது, புலம்பிக்கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். எனவே, துன்பங்களை கண்டு துவண்டு விடாமல். தைரியமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தால். குழந்தையும் நல்ல மனநிலையில் தான் பிறக்கும் இதில் ஐயமில்லை. பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரிடம் நாராயணனின் கதையை கேட்டதால் குழந்தை பிரகலாதன் நாராயணின் பக்தன் ஆனான். இதிலிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது, என்பது தெரிகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்தல், நல்ல இசைகளைக் கேட்டல், நல்ல புத்தகங்களைப் படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில்…

Read More

3-கர்ப்ப காலத்தில் சில சமாச்சாரங்கள் கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்று சந்தேகம் இருக்கும். இது குறித்து ஒவ்வொரு பெண்ணும் தக்கமுழுமையாக தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு கணவனை கண்டாலே பிடிக்காமல் போகும். அது மிகச் சிலரே! கர்ப்பம் உற்ற மூன்று, நான்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள் இருக்கும். அதனால், பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.மயக்கமாக இருக்கிறது, எழுந்தால் தலை சுற்றுகிறது.என படத்துக் கிடந்தால் சோம்பல் அதிகரிக்கும். எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வு போய் சுறுசுறுப்பு உண்டாகும். உங்கள் வேலைகளை வழக்கமாக செய்யலாம். வாந்தி வருகிறது .என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர் அதிகரிக்கும். ஆரஞ்சு மிட்டாய், இழந்த மிட்டாய், இவற்றை வாயில் போட்டு சப்பி கொண்டே இருந்தால் வாந்தி வராமல்…

Read More

46-அக வீட்டில் தெய்வம் நீயே!          நிகழ்கால தெய்வம் நீயே !சுக வீட்டின் சுகந்தம் நீயே!          சுகமான ஆனந்தம் நீயே !ஏக போக வாழ்வும் நீயே!          ஏழையின் வடிவம் நீயே! மகப் பேறு கொடுப்பவன் நீயே!          மனதின் மகிழ்வும் நீயே!

Read More

45-உளி கொண்டு செதுக்குபவன்  நீயே!          உண்மை பொருள் நீயே !எளிமை கொண்டு நிற்பவன் நீயே!         எரியும் தீபம் நீயே! தளிர் தழைக்க வைப்பவன் நீயே!           தரணி காப்பவன் நீயே !வெளி உறவை அகற்றுபவன் நீயே!          அக அழகு நீயே!

Read More

43-நஞ்சு உண்டவன் மகன் நீயே !        நன்மை செய்பவன் நீயே !குஞ்சை பாட வைத்தவன் நீயே !         குளிர்ந்த காற்றும் நீயே !தஞ்சம் அடைந்தால் காப்பவன் நீயே!         தைரியம் ஊட்டுபவன் நீயே !பஞ்சு மனம் படைத்தவன் நீயே !         பக்தரை காப்பவன் நீயே !

Read More

44-வழி காட்டும் துணை நீயே !       வாழ்வு தருபவன் நீயே!விழி பார்வை துணை நீயே !          விரும்பி காப்பவன் நீயே !பிழி போக்கும் துணை நீயே !       பிரகாச ஒளி நீயே! சுழி அழிக்கும் துணை நீயே!         சுகமான நினைவு நீயே !

Read More

42-வீர வேல் பிடித்தவன் நீயே !      வீரம் கொடுப்பவன் நீயே! தீர செயல் செய்தவன் நீயே !      தீமை விரட்டுபவன் நீயே! சூர வதம் செய்தவன் நீயே !      சூட்சுமம் செய்தவன் நீயே !குர வள்ளி கணவன் நீயே!          குன்றில் அமர்ந்தவன் நீயே!

Read More

41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே!        முக்கண்ணன் மகனும் நீயே !வெற்றி திலகம் வைத்தவன் நீயே!       வேல் பிடித்தவன் நீயே! சுற்றி உலகத்தை வந்தவன் நீயே!        தனித்து நின்றவன் நீயே!பற்றிய பக்தரை காப்பவன் நீயே !         பார்வதி மகனும் நீயே!

Read More

40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே!           கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே!         விதண்டம் செய்பவன் நீயே !மண்ணை விரட்டும் மந்திரம் நீயே!        மண்ணின் பொறுமை நீயே! குண்டலினி மகா சக்தி நீயே!       குண்டிகை சக்தியும் நீயே!

Read More